Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 7
________________ வினா: அதைத் தேடித் தானே அனைவரும் அலைந்து கொண்டிருக்கிறோம். தாதாஸ்ரீ : ஆம், ஆனால் தற்காலிக சுகங்கள் நமக்குத் தேவையே இல்லை. இப்படிப்பட்ட தற்காலிக சுகங்களைத் தொடர்ந்து துக்கமும் கூடவே வருகிறது என்பதால், அது நன்றாக இருப்பதில்லை. இதுவே நிரந்தரமான சுகமாக இருந்தால், துக்கமே அண்டாது. அதுபோல் இருக்கும் சுகம் தான் தேவை. அப்படிப்பட்ட ஒரு சுகம் கிடைத்து விட்டால், அது தான் மோக்ஷம். மோக்ஷம் என்பதன் பொருள் என்ன? வாழ்க்கையின், துக்கங்களினால், நாம் பாதிக்காமல் இருப்பதே மோக்ஷம். இல்லையெனில் யாதொருவரும் துக்கத்தில் பாதிப்படையாமல் இருக்க இயலாது. ஒரு புறம், வெளிபுறம் இருக்கும் விஞ்ஞானத்தை பற்றிய ஆய்வை உலக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள், இல்லையா? அது ஒருவனுக்கு தற்காலிக சுகம் அனுபவித்தல் எல்லாம் வெளிபுற விஞ்ஞானம் என்பதாகும், மற்றொன்று உட்புற விஞ்ஞானம் என்று பெயர். அது ஒருவனை நிறைவான சுகத்தை நோக்கி கொண்டு செல்கிறது. ஆதலால் ஒருவனுக்கு நிரந்தர சுகம் அளிப்பது ஆத்ம விஞ்ஞானம் என்பதாகும். அதாவது எந்த ஒரு மனிதன் இப்படிப்பட்ட நிலையான சுகத்தை அடைகிறாரோ,அது தான் ஆத்ம விஞ்ஞானம். தற்காலிக சீரமைவுகள் மூலம் பெறப்படும் சுகங்கள் அனைத்தும் புற விஞ்ஞானம் அல்லது பருப்பொருள் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. புறவிஞ்ஞானம் முடிவில் அழிவை அளிக்கக் கூடியது, அழியக் கூடியது. ஆனால் அக்ரம் விஞ்ஞானமோ நிலையானது, நிலையான தன்மை அளிக்க கூடியது. நிரந்தரமானது பின்பு நிரந்தரத்தை ஏற்படுத்துவது. 3. “நான்”, “எனது” தனித்தனியானவை "ஞானி" தான் நியாயமான விளக்கம்அளிப்பவர் "நான்” என்பது இறைவன், "எனது” என்பது மாயை. "எனது" என்பது "நான்” என்பதுடன் சார்ந்தது. "நான்" என்பது நிஜம். ஆத்மாவின் குணங்களை இந்த "நான்” என்பதில் பொருத்தினாலும் கூட, "உங்களின்” சக்திகள் மிகவும் அதிகரித்து விடும். மூல ஆத்மாவானது ஞானியின் துணை இல்லாமல் வாய்க்கப் பெறாது. ஆனால் இந்த "நானும்” "எனதும்" முற்றிலும் வேறுபட்டவை. இது அயல்நாடுகளில் வசிப்போர் உட்பட அனைவருக்கும் புரிந்துவிட்டால் அவர்களின் சங்கடங்கள் மிகவும் குறைந்து விடும். இது அறிவியல். அக்ரம் விஞ்ஞானத்தின் இந்த ஆன்மீக ஆராய்ச்சி முற்றிலும் புதிய வழிமுறை. “நான்” என்பது இறைமை, ஆனால் "எனது" என்பது உடைமை. 4

Loading...

Page Navigation
1 ... 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64