________________
செல்வார் என்பதை யாரால் சொல்ல முடியும்? நீங்கள் அவரை இந்த ஜென்மத்தில் திருத்திகிறீர்ர்கள்,ஆனால் அவர் அடுத்த பிறவியில் வேறு ஒருவருடைய மனைவி ஆவார்.
ஆகையால் அவரை திருத்த முயற்சியில் ஈடுபடாதீர்கள். அவருமே கூட உங்களை திருத்தும் முயற்சியிலும் ஈடுபடத் தேவையில்லை. அவர் எப்படி இருந்தாலும், அவர் பொன்னானவர் என்று வாழ வேண்டும். ஒருவர் மற்றவரின் இயல்புகளை மேம்படுத்துவது என்பது இயலாத காரியம். நாயின் வால் வளைந்திருந்தால், அது வளைந்தே தான் இருக்கும். ஆகையால் நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும், அனுசரித்துச் செல்ல வேண்டும். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே இருக்கட்டும். எல்லா இடங்களிலும் அனுசரியுங்கள்.
கடினமானவர்களிடத்திலும் அனுசரித்துச் செல்லுங்கள் அனைத்து வீடுகளிலும் சண்டை சச்சரவு காணப்படுகிறது, ஆனால் இந்த வீட்டில் மட்டும் சண்டை இல்லை என்று அண்டை அயலார்கள் கூறும் அளவுக்கு நீங்கள் அனுசரித்து நடக்க வேண்டும். யாரிடத்தில் அனுசரித்து நடக்க முடியவில்லையோ, அங்கே தான் உங்கள் சக்திகளை மேம்படுத்த வேண்டும். எங்கே சாதகமான சூழ்நிலை இருக்கிறதோ, அங்கே சக்தி இயல்பாகவே இருக்கிறது. இயலாமை என்பது ஒரு பலவீனம். என்னால் எப்படி அனைவரிடமும் அனுசரித்து நடக்க முடிகிறது? எந்த அளவுக்கு நீங்கள் அனுசரித்து நடக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் சக்திகள் அதிகரித்து, உங்கள் பலவீனங்கள் பொடிபடும். அனைத்துத் தவறான புரிதல்களும் விலகும் போது தான் சரியான புரிதல் என்பது ஏற்படும்.
மென்மையான இயல்பு உடையவர்களிடம் அனைவரும் அனுசரித்துச் செல்வார்கள், ஆனால் கடினமான, தீவிரமான, கோபமான இயல்பு உடையவர்களிடம் உங்களால் அனுசரிக்க தெரிந்து விட்டால், நீங்கள் உண்மையிலேயே சாதித்து விட்டீர்கள். நீங்கள் கோபப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த உலகில் எதுவும் நமக்கு பொருந்தாது, ஆனால் நாம் அவற்றுக்கேற்ப பொருந்தும் தன்மையை ஏற்படுத்திக் கொண்டால் அது நன்மையளிக்கும். மாறாகநாம், அதை பொருந்துமாறு மாற்ற முயற்சித்தால், உலகம் கோணலாகவே தெரியும். ஆதலால் அனைத்து இடங்களிலும் அனுசரித்து செயல்படுங்கள்.
நாம் எதிர்கொள்பவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாகவோ, கடினமானவர் களாகவோ இருந்தால், அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்கச் செய்ய வேண்டும். ரயில் நிலையத்தில் சரக்கு சுமப்பவரின் சேவைகள் நமக்குத் தேவைப்பட்டால், அவர் நம்மிடம் பேரத்தில் ஈடுபட்டால், நாம் சற்று கூடுதல் பணம் கொடுத்தாவது சம்மதிக்க செய்ய வேண்டும். இல்லையென்றால், மூட்டையை நாமே தான் சுமக்க வேண்டும்.
35