________________
அதிக்ரமணம் என்பது தவறாக நடந்து கொண்டது. தவறான திசையில் நாம் மேற்கொள்ளும் பயணம், இதைச் சரிசெய்ய நாம் நம் தவறை சரி செய்து கொண்டு, நன்றாக நடந்து கொள்வது, அது தான் ப்ரதிக்ரமணம் என்பது
ப்ரதிக்ரமணம் செய்ய சரியான சுருக்கமான வழிமுறை வினா : ப்ரதிக்ரமணத்தில் என்ன செய்ய வேண்டும்?
தாதாஸ்ரீ : மனம் - வாக்கு - உடல், பாவ்கர்மம் (காரண கர்மம்), திரவிய கர்மம் (சூட்சுமமாக வெளியாகும் கர்மம்), நோகர்மம் (மொத்தமாக வெளியாகும் கர்மம்), சந்தூபாய் மற்றும் சந்தூபாயின் பெயரின் மாயையிலிருந்து விலகி, உள்ள “சுத்தாத்மாவை” நினைவில் இருத்தி, "ஹே சுத்தாத்மா பகவானே! குரலை உயர்த்தி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன், உறுதி அளிக்கிறேன் மறுபடி இப்படி ஒரு தவறை நான் செய்ய மாட்டேன் அதற்கு சக்தியை எனக்கு அளியுங்கள்” என்று கூற வேண்டும். “சுத்தாத்மாவை” நினைவில் இருத்தியோ அல்லது "தாதாவை” நினைவில் இருத்தியோ, "இப்படிப்பட்ட ஒரு தவறு நிகழ்ந்து விட்டது” என்று உங்கள் தவறை ஏற்றுக் கொள்வது, அந்த தவறை அகற்றி விடுவது, அதன் பெயர் ஆலோசனா (விமர்சனம்), பிரதிக்ரமணம் என்றால், செய்த பிழையை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டு நிச்சயிப்பது, ப்ரத்யாக்யான் என்பது மீண்டும் அது போன்று தவறு நடக்காமல் இருக்க உறுதி எடுப்பது. எதிராளிக்கு நஷ்டம் ஏற்படுத்தும் செயலைப் புரிவது, அவருக்கு துக்கம் ஏற்படக் காரணமாக இருப்பது அனைத்தும் அதிக்ரமணம்; உடனடியாக அதற்கு பிரதிக்ரமணம், ப்ரத்யாக்யானம் செய்யப்பட வேண்டும்.
அப்படிப்பட்ட ப்ரதிக்ரமணால், வாழ்க்கை பயணம் இனிமையாக செல்லும், பிறகு மோக்ஷத்திற்கும் செல்வீர்கள்! பகவான் சொல்லி இருக்கிறார் அதிக்ரமணக்கு, பிரதிக்ரமணம் செய்தால் தான் மோக்ஷம் செல்ல முடியும்.
ப்ரதிக்ரமண் விதிமுறை தாதா பகவானை, ப்ரத்யக்ஷ சாக்ஷியாகக் கொண்டு (யாருக்கு எதிராக தவறிழைக்கப்பட்டிருக்கிறதோ அவரது பெயரைச் சொல்லி,) அவரது மனம், வாக்கு, உடல்; பாவ்கர்மம்-திரவியகர்மம்-நோகர்மம் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கும் சுத்தாத்மா பகவானே! உங்களை சாக்ஷியாகக் கொண்டு, இந்நாள் வரை என்னால் என்னவெல்லாம் (இந்த வாழ்க்கையில் முழுவதிலும் ஏற்பட்ட வஞ்சம்-ஆணவம்-மாயை-பேராசை, புலனின்பங்கள், வன்மம் போன்ற எதிர்மறை உணர்வுகளால் யாரையாவது துன்பம் கொடுத்து இருந்தால் அந்தத் தவறுகளை மனதில் நினைவு கொள்ளுங்கள்) தவறுகள் ஆனதோ, அவற்றுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். மனப்பூர்வமாக நான் அவற்றுக்காக வருந்துகிறேன், என்னை மன்னித்தருளுங்கள். நான் மீண்டும் இப்படிப்பட்ட தவற்றினை
54