________________
'என்னை' சந்திப்பவர்கள் அனைவரும் தகுதியானவர்களே
வினா : இந்த மார்க்கம் இத்தனை சுலபமானது என்றால், இதற்குப் பாத்திரமானவரா என்று பார்க்கத் தேவையில்லையா? அனைவருக்கும் இது சாத்தியம் தானா? தாதாஸ்ரீ:" நான் இதற்குத் தகுதியானவன் தானா”, என்று அடிக்கடி மக்கள் என்னிடத்தில் கேள்வி கேட்கிறார்கள். "என்னை சந்தித்தீர்கள்,ஆகையால் நீங்கள் தகுதியானவர்” என்று பதில் அளித்தேன்.இது அறிவியல்ரீதியான சூழ்நிலைச் ஆதாரத்தினால் கிடைப்பது. ஆகையால் என்னை யார் சந்தித்தாலும் அவர் தகுதியானவர் என்று புரிந்து கொள்ளவேண்டும். இவர் எந்த ஆதாரத்தில் என்னை சந்திக்கிறார்? அவர் தகுதியானவர் என்பாதலேயே அவர் என்னை வந்து சந்தித்திருக்கிறார். என்னை சந்தித்த பின்னரும் கூட அவருக்கு ஆத்மஅனுபவம் சித்திக்கவில்லை என்றால், அவரது கர்மவினை தடையாக இருக்கிறது என்று தான் பொருள்.
க்ரமிக் மார்க்கத்தில் நீங்கள் செய்ய வேண்டும், ஆனால் அக்ரம் மார்க்கத்தில்... ஒரு முறை ஒரு சகோதார் என்னிடத்தில் வினா எழுப்பினார் க்ரம், அக்ரம் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? நான் பதில் அளித்தேன், க்ரம் என்றால் எல்லோரும் சொல்வது போல் தவறானவற்றை அகற்றி, சரியானதை செய்வது. மீண்டும் மீண்டும் இதையே சொல்வது தான் க்ரமிக் மார்க்கம். க்ரம் மார்க்கத்தில் அனைத்தையும் துறப்பது பற்றிப் பேசுவார்கள். வஞ்சகம், பேராசை, ஆகியவற்றை அகற்றி நல்லவற்றையே செய்ய வேண்டும் என்பார்கள். இதை தானே நீங்கள் இது நாள் வரை கடந்து வந்திருப்பீர்கள்! இந்த அக்ரம் மார்க்கத்தில் நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. செய்கிறேன் - செய்கிறார் - செய்கிறோம், என்பதே இல்லை.
-
அக்ரம் விஞ்ஞானம் மிகப் பெரிய ஆச்சிரியம் என்று சொல்ல வேண்டும். இங்கே ஆத்மஞானம் அடைந்த பின்னர், உடனடியாக அடுத்த நாளே நபரிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. இதைக் கேள்விப்பட்டவுடனேயே மக்கள் இந்த விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டு,இங்கே ஈர்க்கப்படுகிறார்கள்.
அக்ரம் வழிமுறையில் அடிப்படையாக மாற்றம் உள்ளிருந்து தான் தொடங்குகிறது. க்ரமிக் மார்க்கத்தில்,தூய்மை உள்ளிருந்து ஏற்பட முடியாது. இதற்கான காரணம் திறன் இல்லாமை; அப்படிப்பட்ட எந்த ஒரு "கருவியும்" இல்லை என்பதால் தான் வெளிப்புற வழியை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த புற வழி எப்பொழுது உள்வரை சென்றடையும்? மனம்-வாக்கு-செயல், ஆகியவற்றின் ஒற்றுமை இருந்தால் தான் உள்ளே சென்றடையும், பிறகு செயல்பாட்டைத் தொடங்கும். ஆனால் இப்பொழுதுயெல்லாம் அடிப்படையில் மனம்வாக்கு-செயல், ஆகியவற்றில் ஒற்றுமையே இருப்பதில்லை.
16