Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 33
________________ பாரபட்சம் இன்றி இருப்பீர்கள், ஆதலால் உங்கள் குற்றங்களும் பிழைகளும் உங்களுக்குப் புலப்படும். யாருக்கு அவரது தவறுகள் புலப்படுகிறதோ, யாருக்கு ஒவ்வொரு கணமும் அவரது குற்றங்கள் புரிகிறதோ, அவை எங்கே எப்படி நடந்தாலும் சரி, அந்த நிலை தான் உங்கள் ஆத்மா முழுமையாக பிரகாசிக்கும் நிலை. "நான் சந்தூபாய் இல்லை. நான் சுத்தாத்மா” என்பதை தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொண்ட பின்னர், நீங்கள் பாரபட்சமின்றி நடக்கத் தலைப்படுவீர்கள். யாருடைய குற்றங்குறைகளும் தென்படாது, ஆனால் தன்னுடைய குற்றங்குறைகள் புலப்படும், அந்த நிலையில் இந்த ஞானம் மேலும் விருத்தியடைந்து உங்களுக்கு பலன்கள் அளிக்கத் தொடங்கும். குற்றமேதும் இல்லாத இந்த உலகில், யாருமே குறையேதும் இல்லாத நிலையில், நாம் யாரைக் குற்றம் கூற முடியும்? அனைத்துக் குறைகளும் அழிந்தால் தான், "தான்" என்ற அகந்தை அழியும். இந்த அகந்தை அழிக்கப்படாத வரை, உங்கள் குறைகளை நீங்கள் அழித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்களின் குற்றங்கள் தென்பட்டால், அது நம்முடைய தவறு தான். ஏதோ ஒரு கட்டத்தில் நீங்கள் உலகை குற்றமற்றதாக பார்த்தே ஆகவேண்டும். இவையெல்லாம் நமது முற்பிறவி கணக்கு தான். இந்த அளவு நீங்கள் புரிந்து கொண்டு விட்டாலும் கூட, இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 5 ஆணைகளைப் பின்பற்றுவதன் மூலம் குறை கூறாத பார்வை அதிகரிக்கும். நான் ஒட்டுமொத்த உலகையும் குறையில்லாததாகவே காண்கிறேன். உங்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு பார்வை வரும் போது, எந்தவிதமான புதிருக்கும் விடை கிடைத்து விடும். நான் அப்படிப்பட்ட ஒரு தெளிவான பார்வையை உங்களுக்கு அளிப்பேன். பிறகு உங்களது பல பாவங்களை அழிப்பேன், அதனால் நீங்கள் இந்தப் பார்வையை நிலைநிறுத்திக் கொண்டு குறை இல்லா உலகை காண இயலும். இந்தப் பார்வையுடன், கூடவே 5 ஆணைகளையும் நான் உங்களுக்கு அளிப்பேன். அவற்றை நீங்கள் பின்பற்றி நடக்கும் போது, நான் அளித்திருக்கும் ஞானம், எந்த பங்கமும் ஏற்படாமல் இருக்க உதவும். அப்போதிலிருந்து உங்களுக்கு ஏற்பட்டது அந்த மெய்யான பார்வை நீங்கள் உங்கள் தவறுகளைக் காணத் தொடங்கும் போது, உங்களுக்கு மெய்யான பார்வை ஏற்பட்டு விட்டதாக அர்த்தம். இல்லையென்றால் அனைவரும் இவ்வுலகத்தில் உறக்கத்தில் (நான் ஆத்மா என்ற அறியாமை) இருப்பது போலவே இருக்கிறார்கள். உங்கள் தவறுகள் கரைந்தனவா இல்லையா என்பது பற்றி நீங்கள் கவலையேதும் கொள்ளத் தேவையில்லை. உங்கள் விழிப்பு நிலை தான் முக்கியமானது. விழிப்புநிலை அடைந்த 30

Loading...

Page Navigation
1 ... 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64