________________
11. ஆத்மஞானம் அடைந்த பின்னர் ஆணைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம்
ஞானத்தைப் பாதுகாக்க ஆணைகள் இந்த ஞானம் உதித்த பின்னர் நீங்கள் ஆத்மாவை அனுபவிப்பீர்கள்; இதன் பின்னர் நீங்கள் செய்ய எஞ்சியிருப்பது என்ன? நீங்கள் ஞானியின் ஆணையைப் பின்பற்றி நடக்க வேண்டியது மட்டுமே. ஆணை தான் தர்மம், ஆணையே தவம். நான் விடுக்கும் ஆணைகள் உங்கள் உலக விவகாரங்களில் எந்த ஒரு தடையும் ஏற்படுத்தாது. நீங்கள் உலக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையிலும் கூட, இந்த உலக வாழ்க்கை உங்களை எந்த விதமாகவும் பாதிக்காது. இது தான் அக்ரம் விஞ்ஞானத்தின் மகத்துவம்.
அனைத்து இடங்களிலும் தவறான சேர்க்கை நிறைந்தது இந்த கலிகாலம். சமையலறை முதல் அலுவலகம் வரை, வீடு முதல் வீதி வரை, கார் முதல் ரயில் வண்டி வரை, அனைத்து இடங்களிலும் தவறான சேர்க்கை நிறைந்திருக்கிறது. இந்த தவறான சேர்க்கை இருப்பதனால் தான் நான் இரண்டே மணி நேரத்தில் அளித்திருக்கும், இந்த ஞானத்தை மோசமான சேர்க்கை விழுங்கி விடக் கூடும். அந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தான் நான் உங்களுக்கு 5 ஆணைகளை அளித்திருக்கிறேன். இது உங்களைப் பாதுகாத்து, உங்களின் உள்ளிருக்கும் நிலைக்கு எந்த பாதிப்பும் மாற்றமும் ஏற்படுத்தாமல் காப்பளிக்கும். நான் உங்களுக்கு அளிக்கும் ஞானம் அதே நிலையில் தான் இருக்கும். வேலி சேதப்பட்டால், ஞானம் அழிந்து விடும்.
நான் உங்களுக்கு அளித்திருக்கும் ஞானம் பகுத்துப் பார்க்கும் திறன் படைத்தது. இது இப்படியே பிரிந்த நிலையில் இழக்காமல் இருக்க நான் உங்களுக்கு 5 ஆணைகளை, (வாக்கியங்களை), அளித்திருக்கிறேன். இது உங்களை கலியுகத்தின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கும். மனம்-வாக்கு-செயல் ஆகியவற்றில் ஒருமையை ஏற்படுத்தி வைக்கும். பகுத்துப் பார்க்கும் ஞானம் என்ற விதை வளர்வதற்கு நீர் தேவை, இல்லையா? அதைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும், இல்லையா?
ஞானத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய ஆன்மீகப் பயிற்சிகள் என்ன? வினா : இந்த ஞானம் அடைந்த பின்னர் எந்த மாதிரியான ஆன்மீகப் பயிற்சிகளில் நாங்கள் ஈடுபடவேண்டும்?
தாதாஸ்ரீ : நீங்கள் 5 ஆணைகளை பின்பற்ற வேண்டும். அதைத் தாண்டி வேறு எந்த ஆன்மீக் பயிற்சியும் தேவையில்லை. மற்ற அனைத்து ஆன்மீகப்பயிற்சிகள் கர்மகளை ஏற்படுத்துபவை, ஆனால் இந்த 5 ஆணைகளும் உங்களை கர்மகளில் இருந்து விடுவிக்கும்.
21