Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 48
________________ என்பதைப் புரிந்து கொண்டு விட முடியும். கடந்த பிறப்பின்,காரணங்கள் தான் இப்பிறப்பின் அனைத்து நிகழ்வுகளும். பலர் பயணிக்கும் பாதையில் முட்கள் சிதறிக் கிடக்கின்றன, ஆயினும் கூட முட்கள் அப்படியே கிடக்கிறது, அகற்றப்படவில்லை, அவை பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் காலணிகளை அணிந்து கொள்ளாமல் வீட்டை விட்டு அகல்வதேயில்லை; ஆனால் ஒரு நாள் யாரோ ஒருவர்,"திருடன், திருடன்” என்று கூவுகிறார், அப்போது நீங்கள் காலணிகள் ஏதும் அணியாமல் வெறும் காலுடன் வெளியே செல்லும் போது உங்கள் கால்களில் முட்கள் குத்துகின்றன. நாம் அனுபவிக்க வேண்டிய பழைய கணக்கு. இது உங்கள் கணக்கின் இருப்பின் பலன். ஒருவர் உங்களைத் துன்பப்படுத்தினால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள், உங்கள் கணக்கில் இருப்பு வையுங்கள். நீங்கள் முன்பு கொடுத்ததை இப்போது திரும்ப பெற்று கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால், காரணமே இல்லாமல் யாரும் மற்றவருக்கு துக்கம் கொடுப்பதில்லை, அப்படிப்பட்ட ஒரு விதியே இங்கு இல்லை. இதன் பின்னணியில் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்கத் தான் செய்யும், ஆகையால் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பகவானிடத்தில் எப்படி இருக்கும்? பகவான் நியாய ரூபமானவரும் அல்ல, பகவான் அநியாயரூபமானவரும் அல்ல. யாருக்கும் துக்கம் ஏற்படக் கூடாது, இதுவே பகவானின் உரையாகும். நியாயம் அநியாயம் எல்லாம் மக்களின் மொழி. கள்வனது (திருடன்) மொழி, களவு புரிதல்; தானம் அளித்தல், தனது மொழியாக, தானமளிப்பவர் கருதுகிறார். இது மக்களின் குரலே, பகவானின் மொழி அல்ல. பகவானிடத்தில் இப்படிப்பட்டவை எதுவுமே கிடையாது. “எந்த ஜீவராசிக்கும் துக்கம் ஏற்படுத்தக் கூடாது” என்பது தான் பகவானின் அறிவுரை, இதுவே எனது ஆணையும் கூட. நம்முடைய தவறுகளின் காரணமாக மற்றவர்களை அநீதியாக காண்கிறோம் நம்மிடம் இருக்கும் தவறுகள் காரணமாகவே உலகம் முழுவதும் சீரில்லாதது போலத் தெரிகிறது. உலகம் ஒரு கணம் கூட சீரிழந்ததே இல்லை, எப்போதும் நியாயத்திலேயே அமைந்திருக்கிறது. இங்கிருக்கும் நீதிமன்றங்களின் நியாயத்தில் வித்தியாசங்கள் காணப்படலாம், அவை தவறாகக் கூட நீதி வழங்கலாம், ஆனால் இயற்கையின் நீதியில் எந்த மாறுபாடும் காணப்படுவதில்லை. 45

Loading...

Page Navigation
1 ... 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64