Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 58
________________ எப்போதுமே செய்ய மாட்டேன், என்று உறுதி பூணுகிறேன். இதைச் செயல்படுத்த எனக்கு சக்தி வழங்குங்கள். இந்த வகையில் பிரதிக்ரமணம் செய்யும் போது வாழ்க்கையும் இனிமையாகிறது. மோக்ஷமும் அருகே வாய்க்கிறது. "அதிக்ரமணத்துக்கு எதிராக ப்ரதிக்ரமணம் செய்யும் போது தான் மோக்ஷ சாம்ராஜ்ஜியம் சித்திக்கும்” என்று பகவான் அருளியிருக்கிறார். (முக்கோயில்) த்ரிமந்திர் அமைப்பதால் பயன்கள் மகவான் மஹாவீரர், ஸ்ரீ க்ருஷ்ண பகவான், ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி போன்ற மஹா புருஷர்கள் தோன்றுகிறார்களோ, அப்போது அவர்கள் மத வேறுபாடுகளைக் கடக்க செய்து, மக்களை ஆத்ம தர்மத்தில் நிலைக் கொள்ளச் செய்கிறார்கள். ஆனால் நாளாவட்டத்தில், இந்த மஹாபுருஷர்கள் இல்லாத காரணத்தால், மெல்ல மெல்ல மக்களிடம் மதபேதங்கள் வேற்றுமைகள் ஏற்பட்டு, சுகமும் அமைதியும் தேயத் தொடங்கின. அக்ரம் விஞ்ஞானி பரம பூஜனீய ஸ்ரீ தாதா பகவான், மக்களை ஆத்மதர்மம் அடையச் செய்யும் அதே வேளையில், மதத்தில் நிறைந்திருக்கும் "நீயா நானா” என்ற போட்டா போட்டிகளிலிருந்து விலக்கி, மக்களை குறுகிய ஒருதலைப்பட்சமான கண்ணோட்டங் களிலிருந்து விடுக்க, ஒரு புதுமையான, புரட்சிகரமான முன்னெடுப்பை மேற்கொண்டார். இது பாரபட்சமில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்துதல். மோக்ஷம் என்ற இலக்கை அடைய ஸ்ரீ மஹாவீரர் ஸ்வாமி பகவான், உலகிற்கு ஆத்ம ஞானம் அடையும் மார்க்கத்தைக் காட்டியருளினார். ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதோபதேசம் வாயிலாக அர்ஜுனனுக்கு "ஆத்மவத் சர்வபூதேஷூ”, (அதாவது அனைத்துலகும் ஆத்மமயமானது) என்று உபதேசித்து சரியான பார்வையை அளித்தார். ஜீவனுக்கும் சிவனுக்கும் இடையேயான வேறுபாட்டை அளிக்கும் போது நாம் சிவசொரூபமாக மாறி, சிதானந்த ரூபம்; நானே சிவன்,நானே சிவன் என்ற நிலையை எட்டுகிறோம். இதே போல அனைத்து தர்மங்களின், மஹான்களின் இதயகமலத்தில் ஆத்மஞானம் பெறுவதே இலக்காக இருந்தது. இந்த விஷயத்தை நாம் புரிந்து கொண்டு விட்டேமாமேயானால், அதன் பிறகு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்குவோம். ஒவ்வொருவரையும் நாம் ஆன்மீகப் பார்வை கொண்டு பார்க்கையில், ஒருமைப்பாடு உருவாகும். எந்த ஒரு மதத்தையும் விமர்சனம் செய்யத் தேவையில்லை, எந்த ஒரு மதத்தின் ஆதாரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற உணர்வு நீடித்திருக்கும். 55

Loading...

Page Navigation
1 ... 56 57 58 59 60 61 62 63 64