Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust
Catalog link: https://jainqq.org/explore/034329/1

JAIN EDUCATION INTERNATIONAL FOR PRIVATE AND PERSONAL USE ONLY
Page #1 -------------------------------------------------------------------------- ________________ ஆத்ம அனுபவம் பெற எளிய, சிறப்பான விஞ்ஞானம் Tamil ஞான புருஷ் தாதாஸ்ரீ (தாதா பகவான்) Page #2 -------------------------------------------------------------------------- ________________ ஞானி தாதா பகவானின் அருளுரைகள் தொகுப்பு : மதிப்பிற்குரிய தீபக்பாய் தேசாய் ஆத்ம அனுபவம் பெற எளிய, சிறப்பான விஞ்ஞானம் பதிப்பாளர் : அஜீத் சீ. படேல், தாதா பகவான் ஆராதனா ட்ரஸ்ட், 5, மமதாபார்க் சொஸைட்டி, உஸ்மான்புரா, அஹ்மதாபாத் - 380014 தொலைபேசி : (079)39830100 ஓமதிப்பிற்குரிய தீபக்பாய் தேசாய், த்ரிமந்திர், அடாலஜ், மாவட்டம் : காந்திநகர்,குஜராத், First Edition : 1000 November 2018 Price : ₹20/ விலைமதிப்பு உணர்வு. : மிகுந்த பணிவும், யான் யாதொன்றும் அறியேன் என்ற பதிப்பாளர் : அம்பா ஆஃப்செட், பார்ஸ்வநாத் சேம்பாஸ், உஸ்மான்புரா, அஹ்மதாபாத். Page #3 -------------------------------------------------------------------------- ________________ தாதா பகவான் யார்? ஜூன் மாதம் 1958 ஆம் ஆண்டின் ஒரு மாலைப் பொழுது சுமார் 6 மணி வேளை, கூட்டநெரிசல் நிறைந்த சூரத் இரயில் நிலையம், நடைமேடை எண். 3 இல் உள்ள இருக்கை ஒன்றின் மீது திரு. அம்பாலால் மூல்ஜீபாய் படேல் அமர்ந்திருந்தார். குடும்பஸ்தரான இவர் ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கே அமர்ந்திருந்த போது அடுத்த 48 நிமிடங்களில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. தன்னிச்சையான ஆத்ம அனுபவம் அம்பாலால் எம். படேல் அவர்களுக்குள்ளே மலர்ந்தது. இந்த நிகழ்வின் போது, நான் யார்? பகவான் யார்? உலகை யார் இயக்குகிறார்கள்? கர்மா என்பது என்ன? முக்தி யாது? உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மீக வினாக்களின் முழுமையான இரகசியங்களும் தெள்ளத்தெளிவாகப் புலப்பட்டன. இந்த வகையில் இயற்கை முன்பாக ஒரு ஒப்பில்லா பூரண காட்சியை கொண்டு சேர்த்தது இதுவே குஜராத்தின் சரோத்தர் பகுதியின் பாதரண் கிராமத்தைச் சேர்ந்த பங்குதாரரும், ஒப்பந்ததாரருமான திரு. அம்பாலால் மூல்ஜீபாய் படேலை, முழுமையாக ஆசைகளை அகற்றிய மஹானாக மாற்றியது. வியாபாரத்தில் தர்மம் இருக்க வேண்டும், தர்மததை வியாபாரமாக்க கூடாது', இந்த சித்தாந்தத்தை பின்பற்றியே தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாழ்ந்தார் இவர். வாழ்க்கையில் எப்போதுமே இவர் யாரிடமிருந்தும் பணம் பெற்றதில்லை. மாறாக, தனது வருமானத்தை பக்தர்களின் யாத்திரைக்கு செலவு செய்தார். எப்படி இவருக்கு ஆத்ம அனுபவம் வாய்க்கப் பெற்றதோ, அதே போல, இரண்டே மணி நேரத்தில் மற்ற ஆத்ம அனுபவம் நாடுபவர்களுக்கும், தனது அதிசயமான சித்திகள் கொண்ட ஞானபிரயோகத்தால் ஆத்மஞானம் கிடைக்கச் செய்கிறார். ஆத்மஞானம் உதிக்கச் செய்தார். ஞானபிரயோகம் வாயிலாக அவருக்கு அதிசயமான சித்திகள் கிடைத்தன. அதை அக்ரம் மார்க்கம் என்றழைத்தார். க்ரமம் என்றால் படிப்படியாக, க்ரமப்படி மேல்நோக்கிய பயணம். அக்ரம் அதாவது லிஃப்ட் மார்க்கம், படிகள் ஏறாமல் சுலபமான வழி. அவர் தானே, 'தாதா பகவான் யார்?' என்ற ரகசியத்தைப் பற்றிக் கூறுகையில், "உங்கள் கண்களுக்குத் தெரிபவர் தாதா பகவான் அல்ல, அவர் ஏம்.எம்.படேல் தான். நான் ஞானி, என் உள்ளே வெளிப்பட்டு இருப்பவர், அவர் தான் தாதா பகவான். தாதா பகவான் 14 லோகங்களின் நாதன். அவர் உங்களுக்குள்ளேயும் இருக்கிறார், அனைவருக்கு உள்ளேயும் இருக்கிறார். மேலும் என்னுள்ளே பூரணமான வடிவில் வெளிப்பட்டிருக்கிறார். தாதா பகவானுக்கு நானும் நமஸ்காரம் செய்கிறேன்.உங்களுள்ளில் வெளிப்படாத நிலையில் இருந்து கொண்டு இருக்கிறார். Page #4 -------------------------------------------------------------------------- ________________ அக்ரம் விஞ்ஞானம் ஆத்ம அனுபவம் பெற எளிய, சிறப்பான விஞ்ஞானம் 1. மனித வாழ்க்கையின் இலக்கு என்ன? ஓட்டுமொத்த வாழ்க்கையுமே தடம் புரண்டு போய் விட்டது. நாம் ஏன் வாழ்கிறோம் என்பது பற்றிய விழிப்புணர்வே இல்லை. இலக்கு இல்லாத ஒரு வாழ்க்கைக்கு, ஒரு பொருளே இல்லை. செல்வம் வருகிறது, கேளிக்கைகளில் ஈடுபடுகிறோம், நாள்முழுக்க எதையாவது பற்றிய கவலைகளில் தோய்ந்து விடுகிறோம். இதையெல்லாம் இலக்கு என்று நாம் எப்படி நினைப்பது? மனித வாழ்க்கையை நாம் இப்படி ஏன் விரயமாக்குகிறோம்? அப்படியென்றால் மனிதப் பிறப்பை அடைந்தவுடன், நாம் நம் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல என்ன செய்ய வேண்டும்? உலக இன்பங்களை நாம் விரும்பினால், நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உலக விதியை ஒரே வாக்கியத்தின் மூலம் புரிந்து கொள்ளுங்கள், உலகின் அனைத்து சமயங்களின் சாரம் இது தான் - 'மனிதன் சுகத்தை நாடுகிறான் என்றால், அனைத்து உயிருக்கும் சுகம் அளிக்க வேண்டும், துக்கத்தை விரும்புகிறான் என்றால், துக்கத்தை அளிக்கவேண்டும். எது சாதகமோ அதை அளியுங்கள். எங்களிடம் செல்வம் இல்லையே, நாங்கள் எவ்வாறு சுகத்தை அளிப்பது என்று ஒருவர் கேட்டால்? வெறும் செல்வத்தை அளிப்பதன் மூலம் மட்டுமே சுகம் அளிக்க இயலும் என்று இல்லை, அவர் தன்னிடத்தில் உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளலாம், துயரத்தில் இருப்போருக்கு ஏதேனும் தேவைப்பட்டால் அதைக் கொண்டு தரலாம், ஆலோசனைகள் அளிக்க வேண்டி வந்தால், அதை அளிக்கலாம்; இப்படி பல வழிகளில் உதவிகரமாக இருக்கலாம். Page #5 -------------------------------------------------------------------------- ________________ இருவகை இலக்குகள், உலக ஆதாயம், ஆத்ம ஆதாயம் நாம் இருவகை இலக்குகளைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். என்னவென்றால், ஒன்று, நாம் உலகில் இப்படி தான் இருக்க வேண்டும். யாருக்கும் கஷ்டம் ஏற்படாமல், யாரையும் துக்கத்துக்குள்ளாக்காமல் வாழ வேண்டும். இந்த வகையில் நாம் நல்ல மகான்களுடன், நல்ல மனிதர்களோடு வாழவேண்டும். கெட்ட பழக்கம் உள்ளவர்களின் தொடர்பு (குசங்கம்), நமக்கு ஏற்படக் கூடாது என்ற சில இலட்சியங்கள் இருக்க வேண்டும். இது முதல்ரக இலக்கு. மற்றோரு இலட்சியத்தின்படி, பிரத்யக்ஷமான ஒரு ஞானி கிடைத்து, அவரிடமிருந்து ஆத்மஞானம் வாயக்கப் பெற்று, அவர்களின் சத்சங்கத்தில் இருந்து கொண்டு அதன் மூலம் உங்களின் ஒவ்வொரு செயலும் சாத்தியமாகும். அனைத்துப் புதிர்களுக்கும் தீர்வு கிடைத்து, மோக்ஷம் சித்தக்கும். ஆக, மனிதனின் நிறைவான இலட்சியம் என்ன? மோக்ஷம் செல்வதே இலக்காக இருக்க வேண்டும்.உங்களுக்கும் மோக்ஷம் செல்ல வேண்டும் தானே? எவ்வளவு காலம் தான் நாம் திசையறியாமல் திரிந்து கொண்டிருப்போம்? கணக்கற்ற பிறவிகள் அலைந்து திரிந்த பிறகும் திரிவதில் சலிப்பு ஏற்படவில்லையா?எதனால் திரிந்து அலைய வேண்டி வந்தது? ஏனென்றால், 'நான் யார்?'என்ற வினாவிற்கான விடை நமக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் நமது மெய்யான இயல்பு பற்றி அறிந்திருக்கவில்லை. நாம் நமது மெய்யான இயல்பு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். 'நான் யார்' என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா? இத்தனை திரிந்தலைந்த பிறகும் இதை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா? வெறும் செல்வம் ஈட்டுவதிலேயேவா உங்கள் காலத்தைக் கழித்தீர்கள்? மோக்ஷத்திற்க்கு சற்றாவது செயல்புரிய வேண்டுமா, வேண்டாமா? மனிதன் உண்மையில் பரமாத்மாவாக மாற முடியும். நாம் பரமாத்மா நிலையை அடைவது தான் நிறைவான இலக்கு, இலட்சியம். மோக்ஷம், இரு நிலைகளில் வினா : பிறப்பிறப்பிலிருந்து விடுபடுதல் தான் நாம் பொதுவாக மோக்ஷம் என்று புரிந்து கொள்கிறோம். தாதாஸ்ரீ : ஆம், இது சரி தான், ஆனால் அது இறுதி முக்தி,இரண்டாவது நிலை. முதல் நிலை மோக்ஷம் என்பது வாழ்க்கையில் துக்கங்கள் இல்லாமல் இருப்பது தான். வாழ்க்கையின் துக்கங்களில் துக்கம் தொடாமல், உபத்திரவத்திலும் சமாதி நிலையில் இருப்பது தான் முதல் நிலை மோக்ஷம். இரண்டாம் நிலை மோக்ஷம் என்பது அனைத்து கர்மங்களும் முழுமையாக முடித்து விட்டு, பிறப்பு இறப்பிலிருந்து முக்தி அடைந்தால் தான் நிறைவான மோக்ஷம் ஏற்படும்; முதல் மோக்ஷம் இவ்வுலகில் இங்கே தான் அனுபவிக்க Page #6 -------------------------------------------------------------------------- ________________ இயலும். எனக்கு(தாதாஸ்ரீ) மோக்ஷம் கிடைத்து ஆகிவிட்டது இல்லையா! உலகில் நாம் வாழ்ந்தாலும், உலக பாதிப்புகள் ஏதுமின்றி இருக்க வேண்டும், இப்படிப்பட்ட மோக்ஷம் ஏற்பட வேண்டும். இப்படிப்பட்ட மோக்ஷத்தை அக்ரம் விஞ்ஞானத்தால் பெற முடியும். (படியில்லா ஆன்மீக விஞ்ஞானம், ஆத்ம அனுபவம் பெறுவதற்கு). 2 ஆத்ம ஞானத்தால் நிரந்தர ஆனந்தம் எல்லா ஜீவராசிகளும் எதைத் தேடுகிறது? சுகத்தை தேடுகிறான். ஆனால் கணநேரம் கூட சுகம் கிடைப்பதில்லை. திருமணத்திற்கு சென்றாலும், நாடகத்திற்கு சென்றாலும் மீண்டும் துக்கத்தின் நிழல் படியத் தொடங்கி விடுகிறது. சுகம் என்பது நிரந்தரமாக இருக்க வேண்டும். எந்த சுகத்திற்குப் பிறகு துக்கம் ஏற்படுகிறதோ, அதை நாம் எவ்வாறு சுகம் என்பது? அது மாயை ஏற்படுத்திய சுகம் என்பதாகும். அப்படிப்பட்ட சுகம் தற்காலிகமானது, கற்பானையானதாகும். ஒவ்வொரு ஆத்மாவும் எதைத் தேடுகிறது? எப்போதும் நிரந்தர சுகத்தையே தேடுகிறது. சுகம் 'இதில் கிடைக்கும், அதில் கிடைக்கும், அதை வாங்கவா, இப்படிச் செய்யவா, பங்களா கட்டினால் சுகம் கிடைக்குமா, வண்டி வாங்கினால் சுகம் கிடைக்குமா', என்று சிந்தித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதனால் எதுவும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, மேலும் மேலும் பிரச்சனைகளின் வலைப்பின்னலில் மனிதன் சிக்கிக் கொள்கிறான். சுகம், ஒவ்வொருவரின் உள்ளே இருக்கும் ஆத்மாவில் மட்டுமே இருக்கிறது. ஆகையால் ஆத்மாவை அடைந்தால் மட்டுமே நிரந்தரமான சுகத்தை அடையலாம். சுகமும் துக்கமும் உலகில் அனைவரும் இன்பத்தையே தேடுகிறார்கள். ஆனால் சுகத்தின் வரையறைகளை யாரும் நியமிப்பது இல்லை. எந்த சுகத்தை அனுபவித்த பிறகு, துக்கம் என்பதே ஏற்படாதோ, அது தான் முழுமையான சுகம். இப்படிப்பட்ட ஒரே ஒரு சுகம் இந்த உலகில் இருக்குமேயானால், அதைத் தேடிப் பாருங்கள்; நிரந்தரமான, அளவற்ற கணக்கில்லா சுகம் என்பது நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவில், தான் சுகம் இருக்கிறது. ஆனால் மனிதர்களோ அழிந்து போகக்கூடிய தற்காலிக பொருள்களில் சுகத்தை தேட கிளம்பி விட்டான். நிலையான சுகத்தைத் தேடல் யாருக்கு நிரந்தர சுகம் அடைந்தாகிவிட்டதோ, அவருக்கு பிறகு உலகத்தின் சுகதுக்கம் தொடவில்லையென்றால், அந்த ஆத்மாவுக்கு முக்தி கிடைத்து விட்டது. நிரந்தர சுகமே மோக்ஷம். வேறு மோக்ஷங்கள் பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு சுகம் தேவை. உங்களுக்கு சுகம் பிடிக்குமா, பிடிக்காதா? அதை கூறுங்கள் என்னிடம். Page #7 -------------------------------------------------------------------------- ________________ வினா: அதைத் தேடித் தானே அனைவரும் அலைந்து கொண்டிருக்கிறோம். தாதாஸ்ரீ : ஆம், ஆனால் தற்காலிக சுகங்கள் நமக்குத் தேவையே இல்லை. இப்படிப்பட்ட தற்காலிக சுகங்களைத் தொடர்ந்து துக்கமும் கூடவே வருகிறது என்பதால், அது நன்றாக இருப்பதில்லை. இதுவே நிரந்தரமான சுகமாக இருந்தால், துக்கமே அண்டாது. அதுபோல் இருக்கும் சுகம் தான் தேவை. அப்படிப்பட்ட ஒரு சுகம் கிடைத்து விட்டால், அது தான் மோக்ஷம். மோக்ஷம் என்பதன் பொருள் என்ன? வாழ்க்கையின், துக்கங்களினால், நாம் பாதிக்காமல் இருப்பதே மோக்ஷம். இல்லையெனில் யாதொருவரும் துக்கத்தில் பாதிப்படையாமல் இருக்க இயலாது. ஒரு புறம், வெளிபுறம் இருக்கும் விஞ்ஞானத்தை பற்றிய ஆய்வை உலக விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள், இல்லையா? அது ஒருவனுக்கு தற்காலிக சுகம் அனுபவித்தல் எல்லாம் வெளிபுற விஞ்ஞானம் என்பதாகும், மற்றொன்று உட்புற விஞ்ஞானம் என்று பெயர். அது ஒருவனை நிறைவான சுகத்தை நோக்கி கொண்டு செல்கிறது. ஆதலால் ஒருவனுக்கு நிரந்தர சுகம் அளிப்பது ஆத்ம விஞ்ஞானம் என்பதாகும். அதாவது எந்த ஒரு மனிதன் இப்படிப்பட்ட நிலையான சுகத்தை அடைகிறாரோ,அது தான் ஆத்ம விஞ்ஞானம். தற்காலிக சீரமைவுகள் மூலம் பெறப்படும் சுகங்கள் அனைத்தும் புற விஞ்ஞானம் அல்லது பருப்பொருள் விஞ்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. புறவிஞ்ஞானம் முடிவில் அழிவை அளிக்கக் கூடியது, அழியக் கூடியது. ஆனால் அக்ரம் விஞ்ஞானமோ நிலையானது, நிலையான தன்மை அளிக்க கூடியது. நிரந்தரமானது பின்பு நிரந்தரத்தை ஏற்படுத்துவது. 3. “நான்”, “எனது” தனித்தனியானவை "ஞானி" தான் நியாயமான விளக்கம்அளிப்பவர் "நான்” என்பது இறைவன், "எனது” என்பது மாயை. "எனது" என்பது "நான்” என்பதுடன் சார்ந்தது. "நான்" என்பது நிஜம். ஆத்மாவின் குணங்களை இந்த "நான்” என்பதில் பொருத்தினாலும் கூட, "உங்களின்” சக்திகள் மிகவும் அதிகரித்து விடும். மூல ஆத்மாவானது ஞானியின் துணை இல்லாமல் வாய்க்கப் பெறாது. ஆனால் இந்த "நானும்” "எனதும்" முற்றிலும் வேறுபட்டவை. இது அயல்நாடுகளில் வசிப்போர் உட்பட அனைவருக்கும் புரிந்துவிட்டால் அவர்களின் சங்கடங்கள் மிகவும் குறைந்து விடும். இது அறிவியல். அக்ரம் விஞ்ஞானத்தின் இந்த ஆன்மீக ஆராய்ச்சி முற்றிலும் புதிய வழிமுறை. “நான்” என்பது இறைமை, ஆனால் "எனது" என்பது உடைமை. 4 Page #8 -------------------------------------------------------------------------- ________________ "நான்” “எனது” என்பது வெவ்வேறு ஆனவை. உங்களை “நான்” என்பதையும் "எனது” என்பதையும் தனித்தனியே பிரியுங்கள் என்று சொன்னால், உங்களால் பிரிக்க முடியுமா? "நான்" என்பதையும், "எனது" என்பதையும் பிரிக்க விரும்புகிறீர்களா? உலகில் எப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? எப்படி பாலிலிருந்து க்ரீமைத் தனியே பிரித்தெடுக்கிறோமோ, அதே மாதிரியே "நான்”, “எனது” யை தனியே பிரித்தெடுக்க வேண்டும். உங்களிடம் "எனது" என்று ஏதேனும் பொருள் இருக்கிறதா? “நான்” என்பது தனித்து இருக்கிறதா, இல்லை அது "எனது” உடன் இணைந்து இருக்கிறதா? வினா : "எனது” இணைந்தே தான் இருக்கும் அல்லவா? தாதாஸ்ரீ : அப்படியென்றால் உங்களிடம் "எனது” என்று எதுவெல்லாம் இருக்கிறது? வினா : எனது வீடு, எனது வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களும். தாதாஸ்ரீ : அனைத்தும் உங்களுடையதா? அப்படியென்றால் உங்கள் மனைவி யாருக்கு உரியவர்? வினா : அவளும் எனக்குரியவள் தான். தாதாஸ்ரீ : அப்படியென்றால் பிள்ளைகள் யாருடையது? வினா : அவர்களும் என்னுடையவர்கள் தான். தாதாஸ்ரீ : சரி, அப்படியென்றால் இந்தக் கடிகாரம்? வினா: அதுவும் என்னுடையது தான். தாதாஸ்ரீ : இந்தக் கை யாருடையது? வினா : இந்தக் கையும் என்னுடையதே. தாதாஸ்ரீ : பிறகு, "எனது கை, எனது உடல், எனது கால்கள், எனது காதுகள், எனது கண்கள்” என்று கூறுவோம். இந்த உடலின் அனைத்து பாகங்களையும் "எனது" என்று கூறுகிறோம். அப்பொழுது "எனது” என்று கூறும் "நீங்கள்” யார்? இதைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? எனது பெயர் "சந்தூபாய்” சொல்லும்பொழுது பின்பு "நான் சந்தூபாய்” என்று கூறும் போது, இதில் ஏதேனும் முரண்பாடு இருக்கிறது என்று உங்களுக்குப் புரிகிறதா? வினா : புரிகிறது. தாதாஸ்ரீ : நீங்கள் சந்தூபாய், சரி. ஆனால் இதில் “நான்” என்பதும், "எனது" என்பதும் இரண்டும் இருக்கிறது. இந்த "நான்” என்பதும் "எனது” என்பதும் தண்டவாளங்களைப் போல் தனித்தனியானது. இணை கோடுகள் போல் இருக்கும், எப்போதும் இவை ஒன்றிணைவது இல்லை, இருந்தாலும் கூட நீங்கள் இவற்றை ஒன்றிணைந்தது என்று எண்ணுகிறீர்கள். இதை புரிந்து கொண்டு “எனது” என்பதைத் தனியே பிரித்து விடுங்கள். உங்களில் இருக்கும் "எனது” என்பதில் வரும் எல்லாவற்றையும் Page #9 -------------------------------------------------------------------------- ________________ தனித்திடுங்கள். உதாரணத்திற்கு, "எனது இருதயம்”, என்பதில் இருதயத்தை தனித்திடுங்கள். இந்த உடலில் வேறு எதை எதையெல்லாம் உங்களால் பிரிக்க முடியும்? வினா :கால்கள், புலனுறுப்புகள் தாதாஸ்ரீ : சரி, அனைத்தையும், ஐந்து புலன்களும், ஐந்து செயல் உறுப்புகள் மனதுபுத்தி-சித் (ஞானமும், திவ்ய பார்வை) - அஹங்காரம் அனைத்தும். பிறகு "எனது அஹங்காரம்”, சொல்வீர்களா? இல்லை, "நான் தான் அஹங்காரம்” என்று சொல்வீர்களா? வினா : எனது அஹங்காரம். தாதாஸ்ரீ : “எனது” அஹங்காரம் என்று சொல்வீர்களானால் அதை பிரித்து விடமுடியும். ஆனால் முன்னர் இருக்கும் "எனது” பகுதியில் எதுவெல்லாம் பங்கு கொள்கிறது என்பது பற்றி உங்களுக்கு திெயாததால், முழுமையாக உங்களுக்கு பிரிக்க முடியாவில்லை. உங்களின் விழிப்புணர்வு எல்லைக்குட்பட்டது. நீங்கள் சில வரைமுறை வரை தான் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் மொத்த (வெளிப்புறத்தை) மட்டுமே அறிவீர்கள், சூட்சமமானவற்றை, அதிசூட்சுமத்தைப் பற்றிய தெளிவு உங்களிடம் இல்லை. ஆதலால் ஞானி ஒருவர் தான் அதை பிரிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு உதிரிபாகத்தை எல்லாவற்றையும் பிரித்து கொண்டு போனால் “நான்” என்பதையும் “எனது” என்பதையும் பிரிக்க முடியும் அல்லவா? “நான்” என்பதையும் "எனது” என்பதையும் தனித்தனியாக பிரித்துக் கொண்டே சென்றால் கடைசியில் எது மிஞ்சும்? "எனது” என்பதை ஒரு புறம் வைத்தால், கடைசியில் என்ன மிஞ்சும்? வினா : “நான்”. தாதாஸ்ரீ : இந்த "நான்" தான் நீங்கள். இந்த "நான்” என்பதை தான் நீங்கள் உணர வேண்டும். அந்த இடத்தில் தான் எங்களின் (ஞானியின்) தேவை உங்களுக்கு ஏற்படும். நான் உங்களிடத்தில் இவை அனைத்தையும் தனித்தனியே பிரித்து விடுவேன். பிறகு நீங்கள் உங்களை "சுத்தாத்மாவாக” உணர்வீர்கள். இந்த அனுபவத்தைத் தவிர நான் உங்களுக்கு திவ்யப் பார்வையையும் அளிக்கிறேன். அப்போது தான் உங்களுக்கு அனைத்து உயிர்களிலும் இருக்கும் ஆத்மாவை பார்க்க இயலும். 4. “நான்” என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது? ஜபம் தபம், விரதமும் நியமமும் வினா : விரதம், தபம், நியமம் எல்லாம் அவசியமானவையா என்ன? தாதாஸ்ரீ : வேதியியல் நிபுணரிடம் இருக்கும் அனைத்து மருந்துகளுமே முக்கியமானவை தான். ஆனால், உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இதைப் போலவே விரதங்கள், தவங்கள், நியமங்கள் Page #10 -------------------------------------------------------------------------- ________________ ஆகிய அனைத்துமே அவசியம் தான். இதில் எந்தத் தவறும் இல்லை . ஜபம், தபம் என எதிலுமே தவறில்லை, ஆனால் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும், ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பிலும் உண்மை இருக்கிறது. வினா : தவம், க்ரியை என்னும் வாயிலாக முக்தி கிடைக்குமா? தாதாஸ்ரீ : தவம், க்ரியை வாயிலாக பலன் கிட்டுகிறது, முக்தி இல்லை. வேம்பை விதைத்தால், கசப்பான பலன்களே கிடைக்கும். மாமரக் கன்றை நட்டால், இனிப்பான பலன்கள் கிடைக்கிறது. உங்களுக்கு எந்த விதமான பலன்கள் தேவையோ, அதையொட்டிய விதைகளை நீங்கள் நடவேண்டும். மோக்ஷம் விரும்பத் தேவையான தவம் வேறுபட்டது, அது உள்ளார்ந்த தவம். வெளிப்புறத் தவங்களை தவம் என்ற புரிதல் இருக்கிறது. வெளியே புலப்படும் தவம், அந்தத் தவம் மோக்ஷமடைய உதவாது. ஆம், இவையனைத்தின் பலனாக புண்ணியம் கிடைக்கும், சந்தேகமில்லை. நீங்கள் மோக்ஷத்தை விரும்பினீர்கள் என்றால், அதற்கு உள்ளார்ந்த தவம், ஆழ்ந்த தவம் தேவை. வினா ! மந்திரஜபத்தால் மோக்ஷம் கிடைக்குமா அல்லது ஞான மார்க்கத்தால் மோக்ஷம் கிடைக்குமா? தாதாஸ்ரீ : மந்திரஜபம் உலகில் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருகிறது. மனதிற்கு அமைதி அளிப்பது மந்திரம்,உலகியல் சுகங்கள் வாய்க்கப் பெறும் மோக்ஷம். ஞானமார்க்கத்தைப் பின்பற்றாமல் மோக்ஷம் கிடைக்காது. அஞ்ஞானம் பந்தத்தை ஏற்படுத்துகிறது. ஞானம் முக்தியளிக்கிறது. இந்த உலகில் கிடைக்கும் ஞானம் என்பது புலன்கள் தொடர்பான ஞானம். இது மாயை, புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம் தான் உண்மையான ஞானம். வி யார் ஒருவர் தன்னைப் பற்றிய முழுமையான சொரூபத்தை உணர்ந்து கொண்டு மோக்ஷப் பாதையில் செல்கிறாரோ, அவருக்கு க்ரியைகள் தேவையில்லை. யாருக்கு உலகிய சுகங்கள் தேவைப்படுகிறதோ, அவருக்கு க்ரியைகள் தேவையாக இருக்கிறது. யார் மோக்ஷப் பாதையில் செல்ல முனைப்பாக இருக்கிறாரோ, அவருக்கு ஞானம், ஞானியின் ஆணை என்ற இரண்டு விஷயங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. “நான்” என்பதை ஞானி தான் அடையாளம் காட்டுவார். வினா : நீங்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று நீங்கள் கூறினீர்கள்; ஆனால் எங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள என்ன செய்ய வேண்டும்? தாதாஸ்ரீ - நீங்கள் என்னிடம் வாருங்கள். எங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று என்னிடத்தில் கூறுங்கள், அப்போது நான் உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டுகிறேன். Page #11 -------------------------------------------------------------------------- ________________ வினா : "நான் யார்” என்பதைத் தெரிந்து கொள்ளும் விஷயத்தில், இந்த உலகத்தில் இருந்து கொண்டே இது எப்படி சாத்தியமாகும்? தாதாஸ்ரீ ! அப்படியென்றால் எங்கே இருந்து கொண்டு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். இந்த உலகைத் தவிர உங்களால் வேறு ஏதாவது இடத்தில் இருந்து கொண்டு இதைத் தெரிந்து கொள்ள முடியுமா? இந்த உலகில் வாழும் அனைவரும் சம்ஸாரிகள் தாம், நாமனைவரும் இந்த உலகில் தான் வசிக்கிறோம். இங்கே தான் "நான் யார்” என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். “நீங்கள் யார்”, என்பதைத் தெரிந்து கொள்வதற்கே இந்த விஞ்ஞானம். என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு அதை உணர்த்துகிறேன். ஆத்ம அனுபவத்துக்கான எளிய வழி யார் முக்தி அடைந்து இருக்கிறார்களோ, அவர்களிடத்தில் சென்று, ஐயா எனக்கும் முக்திக்கான வழியைக் காட்டுங்கள் என்று கேட்க வேண்டும். இது தான் இறுதியான சிறப்பான தீர்வு. "நான் யார்?” என்ற ஞானம் உறுதிப்பட்டு விட்டால், அவர்களுக்கு மோக்ஷத்துக்கான வழி கிடைக்கும். ஆத்மஞானி கிடைக்காவிட்டால், அதுவரை ஆத்மஞானியின் புத்தகங்களைப் படித்து வரவேண்டும். ஆத்மா அறிவியல் ரீதியான ஒன்று. இது புத்தகங்களின் மூலம் கிடைக்க கூடிய பொருள் இல்லை. அது தன்னுடைய குண இயல்புகளுடன் (ஜீவனுள்ள மூலபொருள்) இருக்கிறது, அதுவே பரமாத்மா. அதை நாம் அடையாளம் கண்டு கொண்டோம் என்று சொன்னால், விடியல் ஏற்பட்டு விட்டது. அது வேறுயாரும் இல்லை,"நீங்கள்” தான் என்பது தெளிவாகி விட்டது. மோக்ஷ மார்க்கத்தில் தவம் - தியாகம் ஆகிய எதையும் செய்ய வேண்டி இருக்காது. ஞானி என்பவர் மட்டும் கிடைத்து விட்டால், ஞானியின் ஆணையே தர்மம், அவரது ஆணையே தவம், இதுவே ஞானம், தத்துவம், இயல்வு, தவம் ஆகும். இவையனைத்தின் நேரடிப்பலன் மோக்ஷம். "ஞானி” என்பவர் கிடைத்தால்தான் மோக்ஷ மார்க்கம் சுலபமாகவும், எளிமையாகவும் ஆகிவிடும். இது உப்புமா செய்வதைக் காட்டிலும் சுலபமாகிவிடும். 5 "நான்” என்பதை ஞானியின் மூலமாக அடைய முடியும் 1. தேவை - குருவா, ஞானியா? வினா :தாதாஸ்ரீயை சந்திக்கும் முன்பாக வேறு ஒருவரை குருவாக ஏற்றி இருந்தால் அப்போது என்ன செய்ய வேண்டும்? Page #12 -------------------------------------------------------------------------- ________________ தாதாஸ்ரீ : நீங்கள் அவரிடம் செல்லலாம். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செல்ல விரும்பினீர்கள் என்றால் செல்லுங்கள், செல்ல விரும்பவில்லை என்றால் செல்லாதீர்கள். அவருக்கு வருத்தம் ஏற்படக் கூடாது என்பதால், நீங்கள் அவரிடம் செல்ல வேண்டும். நீங்கள் அவரிடம் பணிவுடன் இருக்க வேண்டும். இங்கே "ஆத்மஞானம்” நாடி வரும் போது, யாரவது என்னிடத்தில், "நான் என் குருவைத் விட்டு விடலாமா? என்று கேட்டால், “விடாதீர்கள்” என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த குருவின் மகிமை காரணமாகத் தான் நீங்கள் இதுவரை வந்திருக்கிறீர்கள். உலகஞானம் கூட குருவில்லாமல் ஏற்படாது. மோக்ஷஞானமும் கூட குரு இல்லாமல் ஏற்படாது. வழிகாட்டுதலுக்கான குரு, வழிகாட்டுதல் தருபவர், தீர்மானமான ஞானத்தை அளிப்பவர் ஞானி. வழிகாட்டுதல் என்பது ஒப்பீட்டுக்குட்பட்டது, ஆனால் முடிந்த முடிவான தீர்மானமான ஞானம் நிஜமானது. ஒப்பீடு தொடர்பான விஷயங்களுக்கு குரு தேவை, மெய்யான விஷயங்களுக்கு ஞானி தேவை. அதாவது நடைமுறை விஷயங்களுக்கு குரு தேவை, முழுமையான ஞானத்துக்கு ஞானி தேவை. வினா : குரு இல்லாமல் ஞானம் சித்திக்காது என்று கூறப்படுகிறதே? தாதாஸ்ரீ : குருவானவர் வழிகாட்டுவார், வழிகாட்டியாக இருப்பார். ஆனால் "ஞானி” என்பவர் ஞானம் அளிப்பவர். ஞானி என்றால் அவருக்கு அறிந்து கொள்ள வேறு ஒன்றும் இல்லை. அதாவது ஞானியானவர் உங்களுக்கு அனைத்தையும் அளிக்கிறார். குருவானவர் உலகில் உங்களுக்கு வழி காட்டுவார். அவர் கூறியவாறு நீங்கள் நடந்தீர்கள் என்று சொன்னால், உலகில் நீங்கள் சுகமாக இருக்கலாம். ஆதி (மனவேதனை), வியாதி, உபாதி (மற்றவர்களினால் ஏற்படும் உபத்திரம்), நெருக்கடிகளிலும் சமாதி நிலையைத் தருபவர் "ஞானி”. வினா : ஞானம் குருவிடமிருந்து கிடைக்கும். ஆனால் அந்த குருவிற்கு தனது ஆத்மாவை அனுபவித்து உள்ளவராக இருந்தால் மட்டுமே, அவரிடமிருந்து ஞானம் கிடைக்கப் பெறும் இல்லையா? தாதாஸ்ரீ : அவர் "ஞானி”யாக இருக்க வேண்டும். பின்பு ஆத்ம அனுபவம் ஏற்படுத்துவதால் மட்டுமே ஒன்றும் ஏற்பட்டு விடாது. இந்த உலகம் எப்படி செயல்படுகிறது? தாங்கள் யார்? தான் யார் என்பது தொடர்பான விளக்கங்கள் அளித்தால் தான் முழுமையாக ஆத்மாவை பற்றிய தெளிவு கிடைக்கும். ஆனால் நாம் புத்தகங்களை மட்டுமே பின்பற்றுகிறோம், புத்தகங்கள் உதவி செய்யும் கருவிகளாகும். இது சாதாரணமான காரணமே தவிர,தனிச்சிறப்புடைய காரணம் இல்லை. தனிச்சிறப்புடைய காரணம் என்ன? "ஞானி”. Page #13 -------------------------------------------------------------------------- ________________ அர்ப்பண விதியை யார் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்? வினா : ஞானம் பெறும் முன்பாக செய்யப்படும் அர்ப்பண விதிப்படி, முதலில் ஒரு குருவிடம் அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தால், இங்கே மீண்டும் ஒரு அர்ப்பணம் செய்யப்படுமானால், இது சரி என்று சொல்ல முடியுமா? தாதாஸ்ரீ : அர்ப்பணவிதியை குரு செய்வதே இல்லை. இங்கே எதை எதை எல்லாம் அர்ப்பணம் செய்ய வேண்டும்? ஆத்மாவைத் தவிர அனைத்தையும். அதாவது மொத்த முழுவதுமாக யாரும் அர்ப்பணிப்பது இல்லை, அல்லவா? எதுவும் அர்ப்பணிக்கப்படுவதுமில்லை எந்த ஒரு குருவும் அப்படிச் செய்ய சொல்வதுமில்லை. அவர்கள் உங்களுக்கு வழியை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றுகிறார்கள். நான் (தாதாஸ்ரீ) குருவாக இருப்பதில்லை,நான்(தாதாஸ்ரீ) ஞானி,ஒருவன் பூரண ஆத்மாவின் தரிசனத்தை அடைய வேண்டும். என்னிடத்தில் எதையும் அர்ப்பணிக்க வேண்டாம், பகவானிடத்தில் (என் உள்ளில் இருக்கும் பூரண ஆத்மா) தான் அர்ப்பணம் செய்ய வேண்டும். ஆத்ம உணர்வு எந்த வகையில் ஏற்படுகிறது? வினா : "நான் ஆத்மா” என்கிற ஞானம் எந்த வகையில் ஏற்படுகிறது? அதை ஒருவன் எப்படி அனுபவிக்க முடியும்? தாதாஸ்ரீ : இந்த அனுபவத்தை ஏற்படுத்த தான் நாங்கள்"ஞானி”இருக்கிறோம். இங்கே நாங்கள் ஞானத்தை அளிக்கும் போது ஆத்மா, அனாத்மா இரண்டையும் பிரித்த பின், இரண்டை பற்றிய ஞானத்தை அளித்து உங்களை அனுப்பி வைக்கிறோம். ஞானம் என்பதை தனக்கு தானே பெற முடியாது. தனக்கு தானாகவே செய்ய முடிந்தால் அது துறவிகள், சன்னியாசிகள் எல்லோரும் செய்து முடித்திருப்பார்கள். ஆனால் "ஞானியின்” வேலை, இது ஞானிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்று. எப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள ஒரு மருத்துவரின் தேவை இருக்கிறதா இல்லையா? அல்லது மருந்துகளை நீங்களே உங்கள் வீட்டிலேயே தயாரித்து கொள்கிறீர்களா? மருந்துகள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் நீங்கள் எப்படி விழிப்போடு இருக்கிறீர்கள், ஏதேனும் தவறாக எடுத்துக் கொண்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று. ஆனால் ஆத்மா தொடர்பான விஷயத்தில் தனக்குதானே குளறுப்படியில் ஈடுபடுகிறார்கள்.சாத்திரங்களை குருவிடம் புரிந்து கொள்ளாமல்,தன்னுடைய சுய புத்தியால் புரிந்து கொண்டு, குடித்து விடுகிறார்கள். தவறான மருந்துகளை எடுத்துக் கொள்வது போல, அது குளறுபடியில் தான் முடியும். இதை பகவான் பொறுப்பற்றதன்மை என்று 10 Page #14 -------------------------------------------------------------------------- ________________ கூறியிருக்கிறார். இந்த பொறுப்பற்ற செயல்பாடு பல பிறப்புகளை பாதிக்கிறது. ஆனால் பிறப்பை பின்தொடரும் மரணம் என்பது, ஒரு ஜென்மத்தின் விளைவு. அக்ரம் ஞானத்தால் உள்ளங்கை நெல்லிக்கனி மோக்ஷம் ஞானி இப்போது உங்கள் முன்பாக இருக்கிறார் என்று சொல்லும் போது வழி கிடைக்கும். உங்களிடம் சிந்தனை அதிகம் இருக்கிறது, ஆனால் வழி புலப்படவில்லை. தவறான பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். ஞானிகள் கூட எப்போதாவது தான் தோன்றுவார்கள். அவர்கள் மூலமாக ஞானம் வாய்க்கப் பெறும் போது ஆத்ம அனுபவம் ஏற்படுகிறது. மோக்ஷம் என்பது உள்ளங்ககை நெல்லிக்கனியாக இங்கேயே கிடைக்க வேண்டும். இங்கே, இந்த உடலுடன் மோக்ஷம் அனுபவிக்க வேண்டும். இந்த அக்ரம் ஞானத்தால் இங்கேயே மோக்ஷம் சித்திக்கிறது. அனுபவமும் ஏற்படுகிறது. இதுவே உண்மை . ஞானி மட்டுமே ஆத்மா - அனாத்மாவை வேறுபடுத்தி காட்ட இயலும் இந்த மோதிரத்தில் பொன்னும், தாமிரமும் இரண்டும் கலந்து இணைந்திருக்கிறது. இதை நீங்கள் ஒரு கிராமத்துக்கு கொண்டு சென்று, ஐயா இதைத் தனித்தனியாக பிரித்து கொடுங்கள் என்று கேட்டால், யாராவது இதைச் செய்து விடுவார்களா? யாரால் செய்ய முடியும்? வினா : பொற்கொல்லரால் மட்டுமே செய்ய முடியும். தாதாஸ்ரீ : எவருடைய தொழில் அதுவோ, அவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அவரால் மட்டுமே பொன்னையும், தாமிரத்தையும் பிரித்தெடுக்க முடியும். ஏனென்றால் அவருக்குத் தான் இரண்டு உலோகங்களின் குண இயல்புகள் தெரியும். அதாவது பொன்னின் குண இயல்பு இப்படிப்பட்டது, தாமிரத்தின் குண இயல்பு இப்படிப்பட்டது என்று, இதைப் போலவே ஞானிக்கு, ஆத்மாவின் குண இயல்பு நன்கு தெரியும், அனாத்மாவின் குண இயல்புகளும் நன்கு புரியும். இந்த மோதிரத்தில் இருக்கும் பொன் - தாமிரக் கலவையாக உள்ளதால் பிரித்து விட முடியும். ஆனால் பொன் தாமிரம் சேர்மங்களாக இருந்தால், அவற்றைப் பிரிக்க முடியாது. ஏனென்றால், இங்கே குண இயல்புகளே வேறு விதமாக ஆகிவிடுகிறது. இதைப் போலவே ஒருஉயிரின் உள்ளே புலன் உணர்வு கொண்டவையும், ஜடப் பொருட்களும் சேர்மங்களாக இல்லை. ஆகையால் மீண்டும் தங்களது இயல்பைப் பெற முடியும். இதுவே சேர்மமாகி இருந்தால், ஒன்றுமே புலப்பட்டிருக்காது. புலனுணர்வின் குண இயல்புகள் பற்றியும் தெரிந்து இருக்காது, ஜடப் பொருட்களின் குண இயல்புகள் பற்றியின் குண இயல்புகள் பற்றியும் Page #15 -------------------------------------------------------------------------- ________________ தெரிந்து இருக்காது, மாறாக மூன்றாவதாக ஒரு குண இயல்பு உருவாகி இருக்கும். ஆனால் அப்படி இல்லை. அவை ஒரு கலவையாக மட்டுமே ஆகி இருக்கிறது. ஞானி, உலகின் மிகப் பெரிய விஞ்ஞானி ஞானி தான், உலகின் மிகப்பெரிய விஞ்ஞானி, அவருக்கு மட்டுமே தெரியும், அவரால் மட்டுமே இரண்டையும், தனியாக பிரிக்க முடியும். அவர் ஆத்மா-அனாத்மா ஆகியவற்றைப் பிரித்தெடுப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் பாவங்களைச் சுட்டுப் பொசுக்கி சாம்பலாக்கி விடுகிறார். திவ்ய பார்வையை அளிக்கிறார், பிறகு இந்த உலகம் என்பது என்ன? "இது எப்படி இயங்குகிறது?” “யார் இதை இயக்குகிறார்கள்?” போன்றவை, பற்றிய அனைத்து விதமான விளக்கங்களையும் அளிப்பார், அந்த நிலையில் தான் உங்கள் வேலை பூர்ணத்துவம் அடைகிறது. கோடிக்கணக்கான பிறவிகளின் பலனாக பூண்ணியம் உதிக்கும் பொழுது மட்டுமே ஞானியின் தரிசனம் கிடைக்கும்; இல்லையென்றால், தரிசனம் கிடைப்பதே இயலாத ஒன்றாகி விடும். ஞானத்தை அடைவதற்கு ஞானியை முதலில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை. தேடுபவருக்கு அவர் கண்டிப்பாக கிடைத்துவிடுவார். 6. ஞானி என்பவர் யார்? துறவி, ஞானி என்பவரை பற்றிய விளக்கம். வினா : துறவிகளுக்கும், ஞானிக்கும் இடையிலான வேறுபாடு என்ன? தாதாஸ்ரீ : துறவிகள் பலவீனங்களிலிருந்து விடுதலை அளிப்பவர்கள், நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பவர்கள்; தவறான செயல்களிலிருந்து விடுதலை அளித்து நல்ல விஷயங்களை உங்களிடம் ஒப்படைப்பவர்கள் துறவிகள். பாவங்களிலிருந்து உங்களை விலக்கி வைப்பவர்கள் துறவிகள். ஆனால் யார் பாவம் புண்ணியம் இரண்டிலிருந்து காப்பாற்றுகிறார்களோ அவரை "ஞானி” என்று சொல்வோம். துறவிகள் சரியான பாதையில் உங்களைக் கொண்டு செல்பவர்கள். ஞானிகளோ உங்களுக்கு முக்தியை அளிப்பவர்கள். ஞானி இறுதி இலக்கு உங்களுக்கு அளிப்பவர்கள். உண்மையான ஞானி யார்? யாரிடத்தில் அஹங்காரமும், "தான்” என்ற உணர்வும் இல்லையோ அவரே உண்மையான ஞானி. யாருக்கு ஆத்மா பற்றிய முழுமையான அனுபவம் ஏற்பட்டு விட்டதோ, அவரே ஞானி. ஆவரால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை பற்றிய விவரங்களை அளிக்க முடியும். அவரிடத்தில் அனைத்து வினாக்களுக்குமான விடைகள் உண்டு. ஞானி,என்றால் உலகின் அதிசயம், ஞானி, என்றால் ஒளிவிளக்கு. 12 Page #16 -------------------------------------------------------------------------- ________________ ஞானியை எப்படி அடையாளம் காண்பது வினா : ஞானியை எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது? தாதாஸ்ரீ - ஞானியை இயல்பாகவே அடையாளம் தெரிந்து கொள்ளலாம். இதற்காக எதுவும் செய்யத் தேவையே இல்லை. அவர்களின் நறுமணம் அவர்களுக்கான அடையாளமாக இருக்கிறது. அவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் சூழல்தனித்தன்மை உடையதாகும். அவர்களின் குரலும்மொழியும் தனிச்சிறப்புமிக்கவை. அவர்களின் சொற்களை வைத்து அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்களின் கண்களைப் பார்த்தவுடனேயே சட்டென்று புரிந்து விடும். ஞானிகளிடத்தில் அதிக நம்பகத்தன்மை காணப்படும்.மிகவும் வலுவான நம்பகத்தன்மை. புரிந்து கொள்பவர்களுக்கு, அவர்களின் ஒவ்வொரு சொல்லும் சாஸ்திரரூபமாக அமைந்திருக்கும். அவர்களின் மொழி, செயல், பணிவு, இனிமையாக இருக்கும், மனதைக் கொள்ளை கொள்பவையாக இருக்கும். இப்படி பல லட்சணங்களும் அறிகுறிகளும் நிறைந்து காணப்படும். ஞானி கவலையேதும் அற்றவராக இருக்கிறார். ஆத்மஞானி பரம சுகத்தில் திளைத்தவராக இருக்கிறார். அவருக்கு சற்றேனும் கூட துக்கம் என்பதே இருப்பதில்லை. ஆகையால், அவரிடம் இருக்கும் இடத்தில் அனைத்து நலன்களும் நிரம்பி இருக்கின்றது. யார், தான் சுகமாக இருக்கிறாரோ, கவலை இல்லாத நிலையில் இருக்கிறாரோ, அவரால் தான் மற்றவர்களின் துக்கம் போக்கி, சுகத்தை அளிக்க முடியும். யார் கரையை கடந்தவராக இருக்கிறாரோ, அவரால் தான் மற்றவரை கரை சேர்க்க முடியும். அவரால் இலட்சக்கணக்கானோர் கரை சேர முடியும். ஸ்ரீமத் ராமசந்த்ரஜீ, என்ன கூறினார் என்றால், "ஆசாபாசங்கள் சற்றும் இல்லாதவரே ஞானி, உலகப் பொருட்கள் எதன் மீதும் மோகம் இல்லை. உபதேசம் அளிக்க வேண்டும் என்று கூட சற்றும் உந்துதல் இல்லை. சீடர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இல்லை, யாரையும் சீர்திருத்த வேண்டும் என்ற நாட்டம் இல்லை, எந்த வகையான ஒரு கர்வமும் இல்லை, தான் ஆண்டான் என்ற உணர்வு இல்லை, “நான்” என்ற அகந்தை இல்லாதவர்”. 13 Page #17 -------------------------------------------------------------------------- ________________ 7. ஞானி - ஏ.எம்.படேல் (தாதாஸ்ரீ) "தாதா பகவான்” 14 லோகங்களை ஆளுபவர். அவர் உங்களுக்குள்ளேயும் இருக்கிறார். ஆனால் உங்களில் வெளிபடவில்லை. உங்களிடம் வெளிப்படாமல் மறைவாக இருக்கிறார். என் உள் இருப்பவர் வெளிப்பட்டிருக்கிறார். வெளிப்பட்டவர் பலன்களை அள்ளித் தருவார். ஒருமுறை அவர் பெயரை உச்சரித்தால் கூட, அதன் பலன்கள் கண்கூடு. இதை நன்குணர்ந்து உச்சரித்தால் பலமடங்கு பலன் அளிக்கும். உலகத்தில் தடைகள் இருந்தால்,விலகிவிடும். இங்கே உங்கள் கண்களுக்குத் தெரிபவர் "தாதா பகவான்” இல்லை. இங்கே உங்கள் கண்களுக்குத் தெரிபவரே "தாதா பகவான்” என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லையா? ஆனால் இங்கே உங்கள் கண்கள் முன்னால் இருப்பவர் பாதரண் பகுதியைச் சேர்ந்த ஒரு படேல் தான். நான் "ஞானி”, என்னுள்ளிருந்து வெளிப்பட்டு இருப்பவர் தான் தாதா பகவான். நான் ஒன்றும் பகவான் இல்லை. என்னுள்ளில் வெளிப்பட்டிருக்கும் தாதா பகவானை நானும் கூட வணங்குகிறேன். தாதா பகவானை நான் வேறொருவராக தான் காண்கிறேன். ஆனால் ஏதோ நானே தாதா பகவான் என்று மக்கள் நினைக்கிறார்கள். இல்லை, நானே எப்படி தாதா பகவானாக முடியும்? இங்கே இருப்பது பாதரணைச் சேர்ந்த படேல் தான். (இந்த ஞானம் அடைந்த பிறகு) தாதாவின் ஆணைப்படி நடக்க வேண்டும்.இது ஏ.எம்.படேலின் ஆணை அல்ல. இது தாதா பகவானுடையது, அவர் தான் 14 லோகங்களை ஆளுபவர், அவரது ஆணை. அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். என்னை ஒரு கருவியாகக் கொண்டு அனைத்து பேச்சும் வெளிப்பட்டிருக்கின்றன. ஆகையால் இந்த ஆணையை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இது என் ஆணை அல்ல. இது தாதா பகவானுடைய ஆணையாகும். நானும் அவரது ஆணையின் அடிபடையில் தான் வாழ்ந்து வருகிறேன். 8. க்ரமிக் மார்க்கம் - அக்ரம் மார்க்கம் மோக்ஷத்தை அடைய இரு வழிகள் உண்டு: ஒன்று “க்ரமிக் மார்க்கம்” மற்றது "அக்ரம் மார்க்கம்”. க்ரமிக் என்பதாவது,படிப்படியாக மேலேறிச் செல்வது. க்ரமிக் வழியில் உங்கள் உடைமைகள் - சொந்தங்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொண்டே போகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் மோக்ஷத்தைச் நெருங்கி கொண்டுக்கிறீர்கள், அதுவும் பல காலத்திற்குப் பிறகு. ஆனால் அக்ரம் விஞ்ஞானம் என்றால் என்ன? இதில் படிகளேறிச் செல்ல வேண்யடிதில்லை. லிஃப்டில் அமர வேண்டும், பின்பு 12ஆவது அடுக்குக்குச் சென்று அடைய வேண்டும். இப்படிப்பட்ட லிஃப்ட் வழி தான் 14 Page #18 -------------------------------------------------------------------------- ________________ இது. இது நேரடியாக லிஃப்டில், மனைவி குழந்தைகளோடு அமர்ந்து, மகன் மகள்களுக்கெல்லாம் திருமணம் முடித்துவிட்டு பின்பு மோக்ஷம் அடைய செய்கிறது. இவை அனைத்திலும் ஈடுபட்டால் கூட, உங்களுக்கு மோக்ஷம் கிடைக்கும். இப்படிப்பட்ட அக்ரம் வழியை, சிறப்புவழி என்றும் கூறுவார்கள். இது 10 இலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிப்படும். யார் இந்த லிஃப்ட் வழியில் அமர்கிறார்களோ, அவர்களுக்கு நன்மை ஏற்பட்டு விடும். நான் ஒரு கருவி தான். இந்த லிஃப்டில் அமர்பவர்களுக்கு வழி பிறந்துவிடும். நாம் மோக்ஷம் அடையத் தான் போகிறோம். அப்படி அமர கண்டிப்பாக சில அடையாளங்கள் தேவை இல்லையா? அதற்கான அடையாளங்கள் தான் க்ரோதம், இறுமாப்பு, மாயை, கருமித்தனம், பேராசை, பழிவாங்கும் உணர்வு இல்லாது இருப்பது. அப்போது இந்த வேலை முழுமை அடைந்தாகிவிட்டது. ஆத்ம அனுபவத்தை சுலபமாக பெற செய்கிறது - அக்ரம் மார்க்கம் க்ரமிக் மார்க்கத்தில் அதிக முயற்சிகள் செய்த பிறகே ஆத்மா இருக்கிறது, என்ற உணர்வு ஏற்படுகிறது, அதுவும் அதிக தெளிவில்லாத ஒன்றாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் இலக்கில் இருத்த வேண்டியிருக்கிறது. ஆனால் அக்ரம் மார்க்கத்திலோ நேரடியாக ஆத்ம அனுபவம் சித்திக்கிறது. தலைவலி ஏற்படுகிறதோ, பசிக்கிறதோ, பக்கவாதம் ஏற்படுகிறதோ வெளியே என்ன தான் கஷ்டங்கள் வந்தாலும், அவற்றின் பாதிப்பு ஏதும் இல்லாமல் நம் உள் ஆனந்தம் நிலை கொண்டு இருப்பதை உணர முடிகிறது. இதை தான் ஆத்ம அனுபவம் என்று அழைக்கிறோம். ஆத்ம அனுபவம் துக்கத்தை கூட சுகமாக மாற்றி விடுகிறது.மாறாக மாயையில் உழல்பவருக்கோ, சுகத்திலும் துக்கமான அனுபவமே ஏற்படுகிறது. அக்ரம் விஞ்ஞானம் காரணமாகவே இத்தனை விரைவாக "நான் சுத்தாத்மா” என்கிற சமநிலை சித்திக்கிறது. இது மிகவும் உயர் நிலையான விஞ்ஞானம். ஆத்மா மற்றும் புறப்பொருட்களுக்கு இடையில், அதாவது, உங்களுக்கும் அந்நியப் பொருட்களுக்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்தி வைத்து, இது உங்களுடையது, இது உங்களுடையது இல்லை, என்ற விழிப்பை ஓரே மணி நேரத்தில் ஒரு கோடு கிழித்து வேறுபடுத்தி விடுகிறோம். நீங்கள் சொந்த முயற்சியில் ஈடுபட்டீர்கள் என்று சொன்னால், இலட்சம் பிறவிகள் எடுத்தாலும், சாதிக்க முடியாது. 15 Page #19 -------------------------------------------------------------------------- ________________ 'என்னை' சந்திப்பவர்கள் அனைவரும் தகுதியானவர்களே வினா : இந்த மார்க்கம் இத்தனை சுலபமானது என்றால், இதற்குப் பாத்திரமானவரா என்று பார்க்கத் தேவையில்லையா? அனைவருக்கும் இது சாத்தியம் தானா? தாதாஸ்ரீ:" நான் இதற்குத் தகுதியானவன் தானா”, என்று அடிக்கடி மக்கள் என்னிடத்தில் கேள்வி கேட்கிறார்கள். "என்னை சந்தித்தீர்கள்,ஆகையால் நீங்கள் தகுதியானவர்” என்று பதில் அளித்தேன்.இது அறிவியல்ரீதியான சூழ்நிலைச் ஆதாரத்தினால் கிடைப்பது. ஆகையால் என்னை யார் சந்தித்தாலும் அவர் தகுதியானவர் என்று புரிந்து கொள்ளவேண்டும். இவர் எந்த ஆதாரத்தில் என்னை சந்திக்கிறார்? அவர் தகுதியானவர் என்பாதலேயே அவர் என்னை வந்து சந்தித்திருக்கிறார். என்னை சந்தித்த பின்னரும் கூட அவருக்கு ஆத்மஅனுபவம் சித்திக்கவில்லை என்றால், அவரது கர்மவினை தடையாக இருக்கிறது என்று தான் பொருள். க்ரமிக் மார்க்கத்தில் நீங்கள் செய்ய வேண்டும், ஆனால் அக்ரம் மார்க்கத்தில்... ஒரு முறை ஒரு சகோதார் என்னிடத்தில் வினா எழுப்பினார் க்ரம், அக்ரம் இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? நான் பதில் அளித்தேன், க்ரம் என்றால் எல்லோரும் சொல்வது போல் தவறானவற்றை அகற்றி, சரியானதை செய்வது. மீண்டும் மீண்டும் இதையே சொல்வது தான் க்ரமிக் மார்க்கம். க்ரம் மார்க்கத்தில் அனைத்தையும் துறப்பது பற்றிப் பேசுவார்கள். வஞ்சகம், பேராசை, ஆகியவற்றை அகற்றி நல்லவற்றையே செய்ய வேண்டும் என்பார்கள். இதை தானே நீங்கள் இது நாள் வரை கடந்து வந்திருப்பீர்கள்! இந்த அக்ரம் மார்க்கத்தில் நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. செய்கிறேன் - செய்கிறார் - செய்கிறோம், என்பதே இல்லை. - அக்ரம் விஞ்ஞானம் மிகப் பெரிய ஆச்சிரியம் என்று சொல்ல வேண்டும். இங்கே ஆத்மஞானம் அடைந்த பின்னர், உடனடியாக அடுத்த நாளே நபரிடம் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. இதைக் கேள்விப்பட்டவுடனேயே மக்கள் இந்த விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டு,இங்கே ஈர்க்கப்படுகிறார்கள். அக்ரம் வழிமுறையில் அடிப்படையாக மாற்றம் உள்ளிருந்து தான் தொடங்குகிறது. க்ரமிக் மார்க்கத்தில்,தூய்மை உள்ளிருந்து ஏற்பட முடியாது. இதற்கான காரணம் திறன் இல்லாமை; அப்படிப்பட்ட எந்த ஒரு "கருவியும்" இல்லை என்பதால் தான் வெளிப்புற வழியை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த புற வழி எப்பொழுது உள்வரை சென்றடையும்? மனம்-வாக்கு-செயல், ஆகியவற்றின் ஒற்றுமை இருந்தால் தான் உள்ளே சென்றடையும், பிறகு செயல்பாட்டைத் தொடங்கும். ஆனால் இப்பொழுதுயெல்லாம் அடிப்படையில் மனம்வாக்கு-செயல், ஆகியவற்றில் ஒற்றுமையே இருப்பதில்லை. 16 Page #20 -------------------------------------------------------------------------- ________________ மனம்-வாக்கு-செயலில், ஒற்றுமை இல்லை என்பதால் சிறப்பு வழி தான் - அக்ரம்விஞ்ஞானம் படிப்படியாக முன்னேறக்கூடிய மோக்ஷ மார்க்கத்தை உலகம் கண்டுபிடித்து இருக்கிறது, மனதில் இருப்பதையே பேச்சிலும் பேசி, அதுபோல் செயலிலும் செயல்படும். வரை தான் இது பலனளிக்கும். அப்படி இல்லாது போனால் மோக்ஷம் மார்க்கம் மூடப்படும் மனம்-வாக்கு-செயல், ஆகியவற்றின் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதால் தான், க்ரமிக் மார்க்கம் பலனளிப்பதாக இல்லை. இதனால் க்ரமிக் மார்க்கத்தின் அடித்தளம் தகர்ந்து விட்டது என்பதால் தான் அக்ரம் மார்க்கம் தோன்றியிருக்கிறது. இங்கே அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது; நீங்கள் எப்படி இருந்தாலும் சரி, நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி, இங்கே நீங்கள் என்னை சந்தித்தீர்கள் அல்லவா, ஆதலால் அமருங்கள்! அதாவது நாங்கள் வேறு எந்த ஒரு புறச் சிக்கல்கள் பற்றி கருத்தில் கொள்வதில்லை. 'ஞானியின் கருணையால் தான் சித்தி வினா : நீங்கள் அக்ரம் மார்க்கம் பற்றிக் கூறினீர்கள், இது உங்களைப் போன்ற ஞானிகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம், சுலபமாக இருக்கலாம், ஆனால் எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு, உலகில் உழல்பவர்களுக்கு, வேலை செய்பவர்களுக்கு கடினமாக இருக்கிறதே, இதற்கு என்ன தீர்வு? தாதாஸ்ரீ : ஞானியிடத்தில் பகவான் பிரசன்னமாகி இருக்கிறார், 14 லோகங்களின் நாயகர் வெளிப்பட்டிருப்பார், அப்படிப்பட்ட ஒரு ஞானி உங்களுக்குக் கிடைத்து விட்டால், உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? உங்கள் பலத்தால் சாதிக்க முடியாது. அவரது கருணையால் மட்டுமே இது சித்திக்கும். கருணையால் அனைத்தும் மாறி விடும். ஆகையால் இங்கே நீங்கள் எதை வேண்டிக் கொண்டாலும், அவையனைத்தும் நிறைவேறும். நீங்கள் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை. நீங்கள் ஞானியின் ஆணையின் அடிப்படையில் மட்டும் இருந்தால் போதும். இது தான் அக்ரம் விஞ்ஞானம். அதாவது பிரத்யக்ஷமாக விளங்கும் பகவானிடமிருந்து நீங்கள் வேண்டியதை,பெற்றும் கொள்ள வேண்டும். அவர் ஒவ்வொரு கணமும் உங்களுடனேயே இருக்கிறார். வினா : அவரிடம் அனைத்தையும் அர்ப்பணித்து விட்டால், அவரே அனைத்தையும் பார்த்துக் கொள்வாரா? தாதாஸ்ரீ : அவரே அனைத்தும் சாதித்துக் கொடுப்பார். நீங்கள் எதுவுமே செய்யத் தேவையிருக்காது. செய்வது என்று வந்து விட்டாலே, கர்மத்தில் பிணைக்கப்பட்டு விடுவீர்கள். நீங்கள் வெறுமனே லிஃப்டில் உட்கார வேண்டும். லிஃப்டில் 5 ஆணைகளை கடைப்பிடிக்க வேண்டும். லிஃப்டில் அமர்ந்த பின்னர் உள்ளே குதிக்காதீர்கள், கையை வெளியே நீட்டாதீர்கள், இதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும். இது 17 Page #21 -------------------------------------------------------------------------- ________________ புண்ணியசாலிகளுக்கு மட்டுமே எப்போதாவது இப்படிப்பட்ட மார்க்கம் சித்திக்கும். உலகின் பதினோராவது அதிசயம் என்று அழைக்கப்படுகிறது. அக்ரம் மார்க்கத்தில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாரோ, அவரது வேலை நடந்து முடிந்து விட்டது என்று கருதிக் கொள்ளுங்கள். "அக்ரம் மார்க்கம்” தொடர்ந்து கொண்டு இருக்கிறது நான் பெற்ற இன்பம் நீங்களும் அடைய வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறேதும் எண்ணம் இல்லை. இப்படி உங்கள் நலனுக்காக ஏற்பட்ட விஞ்ஞானம் எளிதில் மறைந்து விடாது. என் காலத்திற்குப் பின்னர் ஞானிகளின் வம்சாவளியை விட்டுச் செல்வேன். இந்த ஞானியின் சந்ததியினரை,விட்டு விட்டுச் செல்வேன். அதற்குப் பின்னர் ஞானிகளின் சங்கிலித் தொடர் தொடர்ந்த வண்ணம் இருக்கும். ஆகையால் வாழும் ஞானியைத் தேடுங்கள். அவரில்லாமல் தீர்வு என்பது ஏற்படாது. நான் என் கைகளாலேயே சிலருக்கு சித்தியளிக்க இருக்கிறேன். என் காலத்திற்கு பிறகு யவரேனும் இருக்க வேண்டும் அல்லவா? வருங்கால தலைமுறைக்கு இந்த மார்க்கம் தேவைபடும் அல்லவா? 9. ஞானவிதி என்றால் என்ன? வினா: உங்கள் ஞானவிதி என்றால் என்ன? தாதாஸ்ரீ: ஞானவிதி செயல்முறையானது ( அறிவியல் ரீதியாக ஆத்ம அனுபவத்தை ஏற்படுத்துவது), உடலில் உள்ள ஆத்மாவையும், அனாத்மாவையும் பிரித்து விடுவது என்று பொருள். சுத்தமான ஆத்மாவையும் மற்ற அனாத்மாவையும் பிரிப்பது என்பதாகும். வினா : இந்த சித்தாந்தம் என்னவோ சரி தான், ஆனால் இதற்கான வழிமுறை என்ன, என்பதை அறிந்து கொள்ள வேண்டுமே? தாதாஸ்ரீ : இதில் எந்த ஒரு கொடுக்கல் வாங்கலும் கிடையாது, இங்கே அமர்ந்து கொண்டு, நான் கூறுவது போலவே பிசகாமல் அப்படியே கூற வேண்டும். ("நான் யார்" என்பதை அடையாளம் தெரிந்து கொள்ளும் இந்த ஞானம், இரண்டே மணி நேரத்தில் ஏற்படும்; இதில் 48 நிமிடங்கள், ஆத்மா - ஜடத்தை பிரிக்கும், பேத விஞ்ஞானத்தின் வாக்கியங்களை உச்சரிக்க வேண்டும். இதை அனைவருமாக இணைந்து உரைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் எடுத்துக் காட்டுகளுடன், "5 ஆணைகள்”அளிக்கப்பட்டு, விரிவான விளக்கத்துடன் புரிய வைக்கப்படுகிறது. புதிய கர்மவினை ஏற்படாதிருக்கும் வகையில் எப்படி எஞ்சிய உங்கள் வாழ்க்கையை வாழ்வது என்பது பற்றி தெளிவுறுத்தப்படும். பழைய கர்மவினையைக் கரைக்கும் வழிகளும் 18 Page #22 -------------------------------------------------------------------------- ________________ கற்பிக்கப்படும். "நான் சுத்தாத்மா” என்ற விழிப்புணர்வு உங்களுக்குள்ளே நீடித்து நிலைக்கும். 10. ஞானவிதியில் என்ன நிகழ்கிறது? நான் ஞானம் அளிக்கும் போது, என்னற்ற கடந்த வாழ்க்கையின் கர்மவினைகள் சாம்பலாகி விடுகிறது; அப்போது ஆத்மாவை சுற்றி இருக்கும் அறியாமையின் பல அடுக்குகள் அழிக்கபடுகின்றன. அந்த நேரத்தில் பகவானின் கருணை பொழிந்து, ஆத்மா பற்றிய விழிப்பு நிலை ஏற்படுகிறது. விழிப்புநிலை ஏற்பட்ட பின்னர் விழிப்புணர்வு மறைவதில்லை, நிரந்தரமாக விழிப்புணர்வுடன் இருக்க முடியும். "நான் தான் சுத்தாத்மா' என்ற உறுதிப்பாடு நிரந்தரமான விழிப்புணர்வுடன் இருக்கும். ஆத்ம அனுபவத்தால், "நான் இந்த உடல்” என்ற உணர்வை அழித்துவிடுவதால், அதனால் புதிய கர்மங்களின் பாதிப்பை நிறுத்திவிடுகிறது. அஞ்ஞானத்திலிருந்து முதல் முக்தி ஏற்படுகிறது, பின்னர் இரண்டொரு பிறவிகளில் இறுதி முக்தி பிறக்கிறது. ஞானாக்னியில் கர்மங்கள் பஸ்மமாகின்றன இந்த ஞானம் வழங்கப்படுகிற அன்று என்ன நடக்கிறது? ஞானாக்னியால் கர்மங்கள் பஸ்மமாகிறது; இந்த நிகழ்வில் மூன்று வகையான கர்மங்களில் இருவகை கரமங்கள் சாம்பலாகின்றது. ஆனால் ஒரு வகையான கர்மவினை எஞ்சியிருக்கிறது. மூன்று வகையான கர்மங்களை, உதாரணமாக இணையாக்கினால், நீர், நீராவி, பனிக்கட்டி போல இருப்பதாகும். நீராவி, மற்றும் நீரைப் போல் இருக்கும் கர்மம் அழிகிறது, ஆனால் பனிகட்டி போல் இருக்கும் கர்மம் அழிவதில்லை, ஏனென்றால் அது திரண்டு திடவுருவாகி இருக்கிறது, பலனளிக்க தயாரான நிலையில் இருப்பதால் அந்த கர்மத்தில் இருந்து தப்பித்துவிட முடியாது. ஆனால் நீர் போலவும், நீராவி போலவும் இருக்கும் கர்மங்களை ஞானாக்னி முடிவுக்கு கொண்டு வருகிறது, ஆகையால் தான் ஞானம் அடைந்தவுடனேயே மக்கள் லேசாக இருப்பதை போன்ற உணர்வு பெறுகிறார்கள், அவர்களின் விழிப்புநிலை சட்டென்று பெருகிவிடுகிறது. கர்மவினைகள் சாம்பலாகாத வரையில், மனிதனின் விழிப்பு நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. பனிக்கட்டி வடிவத்திலான கர்மத்தை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அதையுமே கூட எப்படி எளிமையாக அனுபவிப்பது என்பது தொடர்பான அனைத்து வழிகளையும் நான் விளக்கியிருக்கிறேன், "தாதா பகவானின் எல்லையில்லாத கருணை, வாழ்க, வாழ்க" என்று முழங்குங்கள், த்ரிமந்திரத்தைக் கூறுங்கள், நவகலமோ (ஒன்பது ஆழமான உள்நோக்கங்களை) கூறுங்கள். துக்கங்களை அலட்சிய படுத்துதல் தான் முக்திநிலையின் முதல் அனுபவம் என்று சொல்லப்படுகிறது. நான் உங்களுக்கு ஞானம் வழங்கிய அடுத்த நாள் முதலாகவே 19 Page #23 -------------------------------------------------------------------------- ________________ உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்படத் தொடங்கி விடும். பிறகு இந்த உடலின் சுமை, கர்மவினைகளின் சுமை அனைத்தும் உடைந்து விடும். இது இரண்டாவது அனுபவம். பிறகு ஆனந்தம் மிகப் பெரிய அளவில் ஏற்படும், அதனை சொற்களால் வர்ணிக்க இயலாது. வினா : உங்களிடத்தில் கிடைக்கும் ஞானம், அது தானே ஆத்மஞானம்? தாதாஸ்ரீ - உங்களுக்குக் கிடைப்பது ஆத்மஞானம் இல்லை. உங்களுக்குள்ளே ஏற்படுவது தான் ஆத்மஞானம். நீங்கள் நான் கூறுவதை திருப்பிச் சொல்லும் பொழுது உங்கள் பாவங்கள் சாம்பலாகி, உங்களுக்குள்ளே ஞானம் வெளிபடுகிறது. அது உங்களுக்குள்ளே வெளிப்பட்டு விட்டது இல்லையா? மஹாத்மா (ஆத்ம ஞானம், ஞானவிதிமூலம் அடைந்தவர்களை குறிக்கும் சொல்) : ஆம், வெளிப்பட்டு விட்டது. தாதாஸ்ரீ : ஆத்ம அனுபவம் பெறுவது என்பது சுலபமானது என்றா நினைக்கிறீர்கள்? ஞானாக்னியில் (ஞானவிதியில்) பாவகர்மங்கள் சாம்பலாகிறது, பிறகு என்ன நடக்கிறது? ஆத்மாவும், அனாத்மாவும் பிரிக்கப்படுகின்றன, மூன்றாவதாக, இறையருள் பொழிவதால் தூண்டப்பட்ட தொடர் விழிப்புநிலை நிறுவப்படுகிறது. தூண்டப்பட்ட ஆத்மாவின் முக்தி ஆற்றல் (பிரக்ஞை), மோக்ஷம் வரை கொண்டு செல்ல மிகவும் உதவுகிறது. அமாவாசையின் இரண்டாவது நாளில் இருந்து தொடங்கி பௌர்ணமி வரை பன்னெடுங்காலமாக, இலட்சோபலட்சம் ஜென்மங்கள் ஆகிவிட்டன, மக்கள் பல அமாவாசைகளை சந்தித்து வருகிறார்கள். அதாவது நிலவில்லா இரவுகள், இருள்சூழ்ந்த இரவுகள்,ஒளியே இல்லாது வாழ்கிறார்கள். நான் ஞானம் அளிக்கும் போது இருள் விலகி, முழுநிலவு தோன்றுகிறது. முதல் ஒளியானது, இரண்டாவது நாள் நிலவின் ஒளியளவுக்கு ஒளி வீசும். முழுமையான ஞானத்தை அளித்த பின்பும், அமாவாசையின் இரண்டாவது நாளின், இரவு நிலவொளி அளவே ஒளி ஏற்படுகிறது. பிறகு இந்தப் பிறவியில் முழுநிலவு ஏற்படும் வரை முயல வேண்டும். எப்படி அமாவாசையின் இரண்டாவது நாளுக்குபிறகு திரிதியையான 3 ஆம் நாள் நிலவு, பிறகு சதுர்த்தி, பஞ்சமி என முழுநிலவு உண்டாகிறது, அதுபோல் தான், நிறைஞானமான கேவல்ஞானம் (முழுமையான ஞானம்) ஏற்படும். எந்த ஒரு புதிய கர்மமும் ஏற்படாது. கர்மம் ஏற்படுவது நின்றுவிடும். க்ரோதம், அகந்தை, கபடம், பேராசை ஆகியவை காணாமல் போகும். நீங்கள், உங்களை சந்தூபாய் என்று கருதி வந்த அந்த மாயை விலகியது, மேற்கொண்டு நான் உங்களுக்கு அளித்த ஆணைகளின்படி இருங்கள். நீங்கள் ஞானவிதிக்குட்படும் போது, அனைத்து பாவங்களையும் வீழ்த்திவிட்டதால், உங்கள் தவறுகள் உங்களுக்குப் புலனாகும். நீங்கள் மோக்ஷமடைய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அப்போது உங்களுக்குப் புரியும். 20) Page #24 -------------------------------------------------------------------------- ________________ 11. ஆத்மஞானம் அடைந்த பின்னர் ஆணைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் ஞானத்தைப் பாதுகாக்க ஆணைகள் இந்த ஞானம் உதித்த பின்னர் நீங்கள் ஆத்மாவை அனுபவிப்பீர்கள்; இதன் பின்னர் நீங்கள் செய்ய எஞ்சியிருப்பது என்ன? நீங்கள் ஞானியின் ஆணையைப் பின்பற்றி நடக்க வேண்டியது மட்டுமே. ஆணை தான் தர்மம், ஆணையே தவம். நான் விடுக்கும் ஆணைகள் உங்கள் உலக விவகாரங்களில் எந்த ஒரு தடையும் ஏற்படுத்தாது. நீங்கள் உலக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையிலும் கூட, இந்த உலக வாழ்க்கை உங்களை எந்த விதமாகவும் பாதிக்காது. இது தான் அக்ரம் விஞ்ஞானத்தின் மகத்துவம். அனைத்து இடங்களிலும் தவறான சேர்க்கை நிறைந்தது இந்த கலிகாலம். சமையலறை முதல் அலுவலகம் வரை, வீடு முதல் வீதி வரை, கார் முதல் ரயில் வண்டி வரை, அனைத்து இடங்களிலும் தவறான சேர்க்கை நிறைந்திருக்கிறது. இந்த தவறான சேர்க்கை இருப்பதனால் தான் நான் இரண்டே மணி நேரத்தில் அளித்திருக்கும், இந்த ஞானத்தை மோசமான சேர்க்கை விழுங்கி விடக் கூடும். அந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்கத் தான் நான் உங்களுக்கு 5 ஆணைகளை அளித்திருக்கிறேன். இது உங்களைப் பாதுகாத்து, உங்களின் உள்ளிருக்கும் நிலைக்கு எந்த பாதிப்பும் மாற்றமும் ஏற்படுத்தாமல் காப்பளிக்கும். நான் உங்களுக்கு அளிக்கும் ஞானம் அதே நிலையில் தான் இருக்கும். வேலி சேதப்பட்டால், ஞானம் அழிந்து விடும். நான் உங்களுக்கு அளித்திருக்கும் ஞானம் பகுத்துப் பார்க்கும் திறன் படைத்தது. இது இப்படியே பிரிந்த நிலையில் இழக்காமல் இருக்க நான் உங்களுக்கு 5 ஆணைகளை, (வாக்கியங்களை), அளித்திருக்கிறேன். இது உங்களை கலியுகத்தின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கும். மனம்-வாக்கு-செயல் ஆகியவற்றில் ஒருமையை ஏற்படுத்தி வைக்கும். பகுத்துப் பார்க்கும் ஞானம் என்ற விதை வளர்வதற்கு நீர் தேவை, இல்லையா? அதைச் சுற்றி வேலி அமைக்க வேண்டும், இல்லையா? ஞானத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய ஆன்மீகப் பயிற்சிகள் என்ன? வினா : இந்த ஞானம் அடைந்த பின்னர் எந்த மாதிரியான ஆன்மீகப் பயிற்சிகளில் நாங்கள் ஈடுபடவேண்டும்? தாதாஸ்ரீ : நீங்கள் 5 ஆணைகளை பின்பற்ற வேண்டும். அதைத் தாண்டி வேறு எந்த ஆன்மீக் பயிற்சியும் தேவையில்லை. மற்ற அனைத்து ஆன்மீகப்பயிற்சிகள் கர்மகளை ஏற்படுத்துபவை, ஆனால் இந்த 5 ஆணைகளும் உங்களை கர்மகளில் இருந்து விடுவிக்கும். 21 Page #25 -------------------------------------------------------------------------- ________________ வினா : அப்படி என்ன தான் இந்த 5 ஆணைகளில் அடங்கியிருக்கிறது? தாதாஸ்ரீ: இந்த 5 ஆணைகளும் ஒரு வேலி போன்றது; இவற்றைப் பின்பற்றுவதால், உங்களுக்குள்ளே இருக்கும் பெருஞ்செல்வம் களவு போகாது. நான் உங்களுக்கு எந்த நிலையில் அளித்தேனோ, அதே நிலையில் பாதுகாப்பாக இருக்கும். வேலி தளர்ந்து போயிற்று என்றால் அந்நியர்கள் இதில் ஊடுறுவி பாழ்படுத்தி விடுவார்கள். பிறகு இதை சீர்செய்ய மீண்டும் நான் உங்களை நாடி வரவேண்டி இருக்கும். நீங்கள் இந்த 5 ஆணைகளைப் பின்பற்றும் வரை நீடித்த நிரந்தர சமாதிநிலைக்கான உத்திரவாதம் நான் அளிக்கிறேன். ஆணைகளைப் பின்பற்றுவதன் மூலம் விரைவான முன்னேற்றம் வினா : ஞானம் ஏற்பட்ட பிறகு மஹாத்மாக்களின் விரைவான முன்னேற்றம் எதை சார்ந்தது? அவர் தனது முன்னேற்றத்தை எவ்வாறு விரைவுபடுத்த முடியும்? தாதாஸ்ரீ : 5 ஆணைகளை ஒருவர் பின்பற்றி நடக்கும் வரை அனைத்தும் விரைவாக நடைபெறும். இதற்கு 5 ஆணைகள் தான் காரணம். இந்த 5 ஆணைகளைப் பின்பற்றி நடக்கும் போது அனைத்து மறைப்புக்களும் (அறியாமைகள்) விலகி, சக்திகள் வெளிப்படுகின்றன. வெளிப்படாத சக்திகள் வெளிப்படும். 5 ஆணைகள் பின்பற்றப்படும் போது இறைத்தன்மையான ஐஸ்வர்யம் வெளிப்படுகிறது. அனைத்து விதமான சக்திகளும் வெளிப்படுகிறது. இவையனைத்தும் ஆணைகளைப் பின்பற்றுவதால் நடைபெறும். ஆணைகளை நம்பிக்கையோடு, உண்மையாக பின்பற்றுவது தான் மிகவும் முக்கியமான விஷயம். தன் புத்தியைப் பயன்படுத்தாது, இந்த ஆணைகளை மட்டுமே பின்பற்றுவதன் மூலமாக என்னைப் போன்று ஆகிவிடுவார். எவர் ஒருவர் 5 ஆணைகளை ஊட்டமளித்து, மாற்றம் செய்யாமல் பின்பற்றுகிறார்களோ, அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. மனவுறுதியோடு ஆணைகளைப் பின்பற்ற வேண்டும். தாதாவின் ஆணைகளைப் பின்பற்றுவது என்று முடிவெடுப்பது தான் மிகப் பெரிய விஷயம். நீங்கள் அந்தத் தீர்மானத்தை செய்வது தான் மிகவும் முக்கியம். ஆணைகள் பின்பற்றப்படுகின்றனவா, இல்லையா, என்பதை சுமையாக்கி கொள்ள வேண்டாம். எந்த அளவு ஆணைகள் பின்பற்றப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு நல்லது. ஆனால் ஆணைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்க வேண்டும். வினா :சரி, ஆணைகளை முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லையா? தாதாஸ்ரீ : பரவாயில்லை என்று இல்லை. ஆணைகளைப் பின்பற்றியே தீருவேன் என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும். காலை விழித்தெழுந்தவுடனேயே, "நான் 5 22 Page #26 -------------------------------------------------------------------------- ________________ ஆணைகளையும் ஒன்று விடாமல் பின்பற்றுவேன்” என்று நீங்கள் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இந்த தீர்மானம் உங்களை ஆணையில் இருக்க செய்யும், இந்தத் தீர்மானம் தான் நான் வேண்டுவது. ஆணைகளைப் பின்பற்றுவதை நீங்கள் மறந்தீர்கள் என்றால் பிரதிக்ரமணம் செய்ய வேண்டும். அதாவது "ஹே தாதா, 2 மணி நேரத்துக்கு உங்கள் ஆணைகளைப் பின்பற்றுவதை நான் மறந்து விட்டேன், ஆனால் நான் உங்கள் ஆணைகளைப் பின்பற்ற விரும்புகிறேன், என்னை மன்னித்தருளுங்கள்” என்று நீங்கள் மன்னிப்பு கோரினீர்கள் என்றால், நீங்கள் இதுவரை எழுதிய தேர்வுகளிலும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று விடுவீர்கள். உங்கள் மீது பழி இருக்காது. இடர்பாடுகள் விலகும். நீங்கள் மீண்டும் ஆணைகளைப் பின்பற்றும் வழிக்குத் திரும்பி விடுவீர்கள். எனது ஆணைகளைப் பின்பற்றும் போது உலகம் எந்த விதத்திலும் உங்களை தீண்டாது. ஆணையைப் பின்பற்றுவதன் மூலம் மெய்யான முன்னேற்றம் நான் உங்களுக்கு ஞானம் அளித்திருப்பதன் வாயிலாக உங்களை ஆத்மா அல்லாதவைகளிடமிருந்து பிரித்திருக்கிறேன். "நான் சுத்தாத்மா” என்று உணர்வது, 5 ஆணைகளைப் பின்பற்றுவது தான் மெய்யான புருஷார்த்தம் (ஆன்மீக முயற்சி). வினா : மெய்யான (ரியல்) புருஷார்த்தத்துக்கும், ஒப்பீட்டளவிலான (ரிலேடிவ்) புருஷார்த்தத்துக்கும் இடையே என்ன வேறுபாடு? தாதாஸ்ரீ: மெய்யான புருஷார்த்தத்தில் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இல்லை. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால் மெய்யான புருஷார்த்தம் என்பதன் பொருள் "பார்ப்பது”, "அறிவது" என்று பொருள். அப்படியென்றால் ஒப்பீட்டளவிலான புருஷார்த்தம் என்றால்? உள்ளார்ந்த நோக்கம், அதாவது மனோபாவம் இருத்தல் என்று பொருள். நான் இதைச் செய்வேன் என்று கருதுவது. சந்தூபாயாக நீங்கள் செய்து கொண்டிருந்தது மாயையான புருஷார்த்தம். ஆனால் "நான் சுத்தாத்மா” என்று நீங்கள் செய்யும் புருஷார்த்தம், 5 ஆணைகளைப் பின்பற்றும்போது செய்யும் புருஷார்த்தம் தான் மெய்யான புருஷார்த்தம். வினா - நீங்கள் விதைத்த இந்த ஞானம் தான் பிரகாசம். இது தான் ஜோதி இல்லையா? தாதாஸ்ரீ : ஆம், அதுவே. ஆனால் இது விதை வடிவில் விதைக்கப்பட்டிருக்கிறது. மெல்ல மெல்ல பௌர்ணமியாக மலரும். ப்ரக்ருதியும்,ஆத்மாவும் (மனித இயல்பு, ஆத்மா) பிரிந்த பிறகு மெய்யான ஆன்மீகப் புருஷார்த்தம் ஆரம்பம் ஆகும். எப்போது புருஷார்த்தம் தொடங்கப்பட்டு விட்டதோ, அது நிலவின் இரண்டாம் நாளிலிருந்து பௌர்ணமி வரை கொண்டு சென்று விடும். ஆம். இந்த ஆணைகளை நீங்கள் பின்பற்றினால் இப்படி நடக்கும். 23 Page #27 -------------------------------------------------------------------------- ________________ வி . நீங்கள் வேறேதும் செய்ய வேண்டாம், ஆணைகளைப் பின்பற்றியபடி மட்டும் இருந்தால் போதும். வினா : தாதா, ஆத்ம அனுபவம் ஏற்பட்ட பிறகான, புருஷார்த்தம் பற்றி சற்று விளக்குங்களேன். அந்த நபரின் உலக வாழ்க்கை உரையாடல் எவ்விதமாக இருக்கும்? தாதாஸ்ரீ : ஞானவிதி வாயிலாக ஆத்ம அனுபவம் அடைந்த நமது மஹாத்மாக்கள் உலக வாழ்வின் 5 ஆணைகளை பின்பற்றி நடப்பவர்கள். இந்த 5 ஆணைகளும் தான் நிஜமான புருஷார்த்தம். தாதா என்பவர் 5 ஆணைகள் தான். 5 ஆணைகளைப் பின்பற்றுதல் தான் புருஷார்த்தம். இந்த 5 ஆணைகளைப் பின்பற்றுவதின் பயன் என்ன? அனைத்தையும் "அறிந்தவர் - பார்ப்பவர்” (ஆத்மாவின் குணம்) என்ற நிலையில் இருக்க உதவி செய்யும். யவரேனும் என்னை நிஜமான புருஷார்த்தம் என்ன என்று கேட்டால்? அதற்கு என் விடை, அனைத்தையும் "அறிந்தவர் - பார்ப்பவர்” என்ற நிலையில் இருப்பது தான். இந்த 5 ஆணைகளும் உங்களுக்கு இந்த நிலையைக் காக்க கற்றுத் தரும். மெய்யுணர்வோடு யார் இந்த 5 ஆணைகளையும் பின்பற்றுகிறார்களோ, அந்த நபருக்குக் கண்டிப்பாக என் அருள் சித்திக்கும். 12. ஆத்ம அனுபவத்தின் 3 படிநிலைகள் - அனுபவம், விழிப்புநிலை, உறுதிப்பாடு வினா : ஆத்ம அனுபவத்தின் பின்பு என்ன ஏற்படுகிறது? தாதாஸ்ரீ : ஆத்ம அனுபவம் ஏற்பட்ட பின்னர்,"நான் இந்த உடல்” என்ற உணர்வு அற்றுப் போகிறது, அதாவது புதிய கர்மங்கள் கட்டுவது நிறைவடைந்து விடுகிறது. இதைவிட வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்? முன்னர் சந்தூபாய் என்னவாக இருந்தார், இன்று அவர் என்னவாக இருக்கிறார் என்பது தெளிவாகும். இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? ஆத்ம அனுபவம் ஏற்படும் முன்பு இந்த உடல் தான் நான் என்ற அனுபவம் இருந்தது, இப்போது ஆத்ம அனுபவம் ஏற்பட்டிருப்பதால். “நான் சுத்தாத்மா” என்ற உணர்வை பெறுகிறோம். உறுதிப்பாடு என்றால் 100 சதவீதம்முழுமையான நம்பிக்கை "நான் சுத்தாத்மா தான் என்ற நிலைப்பாடு உண்டாகி விட்டது; "நான் சுத்தாத்மா” என்ற நம்பிக்கை மறைந்தாலும், உறுதிப்பாடு என்பது சிதையாது. நம்பிக்கை மாறலாம், ஆனால் உறுதிப்பாடு மாறாது. எடுத்துக்காட்டாக நாம் ஓரிடத்தில் ஒரு மரக்கட்டையை வைக்கிறோம், அதன் மீது ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்தோம் என்றால், அது வளைந்து கொடுக்குமே ஒழிய அதன் 24 Page #28 -------------------------------------------------------------------------- ________________ இடத்திலிருந்து விலகாது, இது தான் உறுதிப்பாடு விஷயத்திலும் நடக்கிறது. அது நிரந்தரமாக தங்கியிருக்கும். என்னதான் கர்மங்களின் உதயம் உண்டானாலும், மோசமான நிலைகள் ஏற்பட்டாலும், தன்னிருப்பை மாற்றாது, "நான் சுத்தாத்மா” என்ற நிலைப்பாடு மறைந்து போகாது. அனுபவம், விழிப்புநிலை, உறுதிப்பாடு என்ற மூன்றும் நீடித்து நிலைத்திருக்கும். உறுதிப்பாடு என்றும் இருக்கும். விழிப்பு நிலை என்பதுசில வேளைகளில் தான் இருக்கும். வியாபாரத்திலோ, வேறு தொழிலிலோ ஈடுபடும் போது மீண்டும் விழிப்பு நிலை தவற நேரலாம், ஆனால் வேலை முடிந்த பிறகு, மீண்டும் விழிப்பு நிலை வட்டத்தில் வந்து விடுவீர்கள். அனுபவம் எப்பொழுது ஏற்படும் என்றால் வேலையிலிருந்து, எல்லாவற்றிலிருந்து விடுபட்டு, தனிமையாக இருக்கும் போது அனுபவத்தின் சுவையை நீங்கள் சுவைக்கலாம். அனுபவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். அனுபவம்,விழிப்பு நிலை,உறுதிப்பாடு, இவற்றில் உறுதிப்பாடு என்பது முக்கியமானது, இது தான் அனைத்திற்கும் ஆதாரமானது. இது ஆதாரமாக அமைந்த பின்னர்,விழிப்பு நிலை உதிக்கும். அதன் பின்னர் "நான் சுத்தாத்மா” என்ற நிரந்தரமான விழிப்பு நிலை நிலைத்திருக்கும். சற்று அமைதியாக விழிப்புஉணர்வுடன் இருக்கும் போது, "அறிந்தவன் - காண்பவன்” என்ற நிலையில் இருப்பது தான் அனுபவம். 13. நேரடி சத்சங்கத்தின் (ஆத்மாவை பற்றிய சொற்பொழிவு) முக்கியத்துவம் கேள்விகளுக்கான விடையறிய சத்சங்கம் அவசியம் இந்த அக்ரம் விஞ்ஞான வழியின் வாயிலாக உங்களுக்கும் ஆத்ம அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது உங்களுக்கு எளிதாக வாய்த்திருக்கிறது. நேரடி சத்சங்கம் உங்களுக்கு பலன் தரும், மேலும் முன்னேற்றம் அடைய உதவுகிறது. சிறப்பாக, இதை ஞானியுடன் தொடர்பில் இருக்கையில் நீங்கள் நன்கு புரிந்து கொள்ள இயலும். இந்த ஞானத்தை நுண்ணியமாக ஆழ்ந்து ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். ஏனேன்றால், இந்த ஞானம் ஒரே மணி நேரத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பெரிய தன்மை கொண்ட ஞானம்! ஒரு கோடி ஆண்டுகளில் ஏற்படாத ஞானம் உங்களுக்கு ஒரே மணி நேரத்தில் வாய்த்திருக்கிறது. ஆனால் இது அடிப்படை ஞானம், இதை விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? இதை நன்கு விவரமாகத் தெரிந்து கொள்ள நீங்கள் என் முன்னே அமர்ந்து கொண்டு வினாக்களைத் தொடுத்தால் தானே நான் உங்களுக்குத் தெளிவாக்க முடியும்! இதனால் தான் சத்சங்கம் மிகவும் அவசியம் என்று நான் அடிக்கடி கூறுவது வழக்கம். நீங்கள் இங்கே அமர்ந்து கேள்விகளை 25 Page #29 -------------------------------------------------------------------------- ________________ கேட்டால், உங்களுக்குள்ளேயே அவற்றுக்கான விடைகள் தாமாகவே புலப்படத் தொடங்கும். உ உங்களுக்கு உளைச்சல் அளிக்கும் வினாக்களை நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும். விதை விதைத்த பிறகு நீர் தெளிப்பது அவசியம் வினா : ஞானம் பெற்ற பின்னர் "நான் சுத்தாத்மா” என்ற எண்ணத்தை முன்னிறுத்த வேண்டி இருக்கிறதே, இது கடினமாக இருக்கிறது? தாதாஸ்ரீ : இல்லை, இதை முன்னிறுத்த வேண்டியதே இல்லை, அது தானாகவே முன்னிறுத்திக் கொள்ளும். அப்படி ஏற்பட என்ன செய்ய வேண்டும்? அதற்கு நீங்கள் என்னிடத்தில் வந்து போய் கொண்டு இருக்க வேண்டும். சத்சங்கம் என்ற தண்ணீரை, விதை போல் இருக்கும் ஞானத்திற்கு ("நான் சுத்தாத்மா”), தெளிக்கவில்லை என்பதால் தான் இந்த இடர்பாடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. நீங்கள் உங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்று சொன்னால் வியாபாரம் எப்படி நடக்கும்? வினா : வியாபாரம் படுத்துத் தான் போகும். தாதாஸ்ரீ : ஆம், இங்கும் அப்படித் தான். ஞானம் பெற்றுக் கொண்டால், அதற்கு நீர் வார்க்கத் தான் வேண்டும், அப்போது தான் செடி தழைத்து வளரும். சிறிய செடியாக இருந்தாலும் கூட, அதற்கும் நீர் தெளிக்கத் தான் வேண்டும். அவ்வப்பபோது சிறிதளவு நீர் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். வினா : வீட்டில் நாங்களே தண்ணீரை தெளிக்கிறோமே. தாதாஸ்ரீ : இல்லை, நீங்கள் வீட்டில் தெளிப்பது எல்லாம் சரிப்பட்டு வராது. நேருக்கு நேராக, ஞானி உங்கள் மத்தியில் இருக்கிறார், ஆனால் உங்களுக்கு,அவர்களின் மதிப்பைப் பற்றி தெரியவில்லை. நீங்கள் பள்ளி சென்றீர்களா இல்லையா? எத்தனை ஆண்டுகள் சென்றிருப்பீர்கள்? வினா: பத்தாண்டுகள் தாதாஸ்ரீ : அப்படியென்றால் பள்ளியில் நீங்கள் என்ன பயின்றீர்கள்? மொழியையா! இந்த ஆங்கிலத்தைக் கற்க நீங்கள் பத்தாண்டுகள் கழித்து இருக்கிறீர்கள் என்றால், இங்கே என்னிடம் 6 மாதங்கள் கழித்தால் போதும் என்று கூறுகிறேன். 6 மாதங்கள் என்னைப் பின் தொடர்ந்தீர்கள் என்றால், உங்கள் வேலை முழுமையடையும். உறுதிப்பாடு பலமாக இருந்தால் தடைகள் அகலும் வினா :உலகத்தைச் சார்ந்த பணிகள் அதிகம் இருப்பதால், இங்கே சத்சங்கத்திற்கு வருவது கடினமாக இருக்கிறது. தாதாஸ்ரீ : உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால், மற்றது தகர்ந்து போகும். உங்கள் உள்மனதில் உங்கள் எண்ணம் பலமாக இருக்கிறதா என்று நீங்கள் தான் கவனிக்க வேண்டும். 26 Page #30 -------------------------------------------------------------------------- ________________ உலக வாழ்வில் இலாபங்களுக்கான உத்திரவாதம் அளிக்கும் சத்சங்கம் இங்கே என்னிடத்தில் பல வியாபாரிகள் வருகிறார்கள், அவர்கள் ஒருவேளை தங்கள் கடைகளுக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாகச் சென்றால், 500, 1000 ரூபாய் இழப்பு ஏற்படலாம். அவர்களிடத்தில் நான் கூறுவதாவது, "நீங்கள் என்னிடத்தில் வருவதால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது; இதே நீங்கள் வழியில் ஏதோ ஒரு கடையில் அரைமணி நேரம் செலவு செய்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்படும். இங்கே வந்தீர்கள் என்றால், பொறுப்பு என்னுடையது; ஏனென்றால் நான் எந்த கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடுவதில்லை. நீங்கள் உங்கள் ஆத்மநலனுக்காகவே இங்கே வருகிறீர்கள். ஆகையால் தான், நீங்கள் இங்கே வருவதால், உங்களுக்கு நஷ்டமேதும் ஏற்படாது என்கிறேன்”. தாதாவின் சத்சங்கத்தின் அற்புதங்கள் கர்மத்தின் உதயம் மிகவும் தீவிரமாக இருக்குமேயானால், அதன் விளைவுகளும் அந்த அளவு கடுமையாக இருக்கும் என்பதால் நீங்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் சத்சங்கத்தில் தான் கர்மத்தின் கடுமையை தனித்து கொள்ள முடியும். இப்படி, தொடர்ந்து வாழ்நாளில் என்ன மாதிரியான கர்மங்கள் உதிக்கும் என்று கூற முடியாது!! வினா : விழிப்புநிலை சிறப்பாக ஏற்பட என்ன வழி? தாதாஸ்ரீ : நீங்கள் சத்சங்கத்தில் இருந்தால் மட்டுமே போதுமானது, அது தான் வழி. வினா : ஒருவர் உங்களுடன் 6 மாதங்கள் வந்தமர்ந்திருந்தால், அவரிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பிக்கும், பின்னர் சூட்சுமமான (நுண்ணிய) மாற்றங்களும் ஏற்படும் என்று தானே கூறுகிறீர்கள்? தாதாஸ்ரீ ! ஆம். இங்கே அமர்ந்திருப்பதாலேயே மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விடும். ஆகையால், ஒருவர் ஞானியிடம் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 2, 3, 5 மணி நேரங்கள், எத்தனை மணி நேரம் செலவழிக்கிறீர்களோ, அத்தனைக்கத்தனை இலாபம் தானே!! ஞானம் அடைந்த பிறகு, "இனிமேல் நாம் ஏதும் செய்ய வேண்டியதில்லை” என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல, நிரந்திர விழிப்புநிலையின் அதிகரிப்பு, இன்னும் ஏற்படவில்லையே. ஞானியின் அருகே இருத்தல் வினா : ஞான விதிப்படி ஆத்மஞானம் பெற்ற மஹாத்மாக்கள் முழுமை நிலை அடைய தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்? 27 Page #31 -------------------------------------------------------------------------- ________________ தாதாஸ்ரீ: எந்த அளவு முடிகிறதோ, அந்த அளவு "ஞானியிடம்” தனது வாழ்க்கையை கழிக்க வேண்டும், என்ற முனைப்புஇருக்க வேண்டும். இரவு பகல் என எங்கிருந்தாலும்,அவர்கள் தாதாவின் அருகிலேயே இருத்தல் வேண்டும். ஆத்ம ஞானியின்பார்வைக்குள் இருக்க வேண்டும். சத்சங்கத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் வேளையில் உங்கள் கர்மங்களின் சுமைகள் சற்றே இளகிக் கொடுக்கும்; மற்ற இடங்களில் அதன் சுமை மிகவும் கனக்கும். நீங்கள் சத்சங்கத்தில் இருக்கும் வேளைகளில் உங்கள் வியாபாரத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்ற உத்திரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன். விளைவுகளை நீங்கள் அலசிப் பார்த்தீர்களேயானால், நிறைவாக உங்களுக்கு இலாபமே கிடைத்திருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இது என்ன ஒரு வாடிக்கையான சாதாரண சத்சங்கமா? ஆத்மலாபத்திற்காகவே நேரத்தை செலவு செய்யும் ஒருவருக்கு எப்படி நஷ்டம் ஏற்படும்? அவருக்கு இலாபம் தவிர வேறு ஒன்றுமே ஏற்படாது. இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே பயன் கிட்டும். இங்கே சத்சங்கத்தில் நீங்கள் இருக்கும் வேளையில் உங்கள் நேரம் வீணாகாது, இது பொன்னான காலம். பகவான் மஹாவீரர் வாழ்ந்த காலத்தில், சத்சங்கத்தில் பங்கு பெற மக்கள் நடையாய் நடந்து செல்ல வேண்டியிருந்தது; ஆனால் இன்றோ நம்மிடத்தில் பேருந்துகள், கார்கள், ட்ரெயின்கள் என சத்சங்கம் வந்து அடைய பல வழிகள் வாய்த்திருக்கின்றன. நேரடியான சத்சங்கத்தில் பங்கு பெறுவது தான் சிறப்பு இங்கே அமர்ந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தாலும் கூட, உங்களுக்குள்ளே மாற்றங்கள் தாமே நிகழும், ஏனென்றால் இது சத்சங்கம்; சத் என்பது ஆத்மா,சங்கம் என்றால் சேர்க்கை. ஞானி என்பவர், (சத்) ஆத்மாவின் முழுமையான விழிப்பு நிலை வெளிப்பட்டவர் ஆவார். இது நிறைவான சத்சங்கம் என அழைக்கப்படுகிறது. சத்சங்கத்தில் இருக்கும் வேளையில், அனைத்தும் காலியாகி விடும், ஏனென்றால் என்னருகே நீங்கள் அமர்ந்திருக்கும் போது, என்னைப் பார்க்கும் போதே உங்களுக்கு எனது சக்திகள் வந்தடையும், உங்கள் விழிப்புநிலை பலமடங்கு அதிகரிக்கும். நீங்கள் சத்சங்கத்தில் நிலைத்திருக்க முயல வேண்டும். இந்த சத்சங்கத்தில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டீர்களென்றால், உங்கள் வேலை நிறைவேறும். வேலை நிறைவேறுதல் என்றால் என்ன? முடிந்தமட்டும் தரிசித்துக் கொண்டிருங்கள்,முடிந்தமட்டும் சத்சங்கத்தில் நேரடியாக லாபம் பெற வேண்டும் என்று 28 Page #32 -------------------------------------------------------------------------- ________________ வேண்டி கொள்ளுங்கள். அப்படி நடக்கவில்லை என்றால், அதற்கு வருந்துங்கள். ஞானியின் தரிசனத்தை செய்து அவருடைய அருகில் நீங்கள் அமர்ந்திருக்க வேண்டி கொள்ளுங்கள். 14. தாதாவின் புத்தகங்கள் சஞ்சிகைகளைப் படிப்பதன் முக்கியத்துவம் ஆப்தவாணி, எப்படி செயல்படுகிறது! இவை ஞானியின் சொற்கள்,இவை புத்தம்புதிதாய் இருக்கின்றன. இதன் பொருள் தற்காலத்துக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன, ஆகையால் அவற்றைப் படிக்கும்போதே உங்களின் நிலை மாறுவதை நீங்கள் உணரலாம். ஆனந்தம் உங்களுக்குள்ளே ஊற்றெடுக்கும். இவை ஒரு ஞானியின் சொற்பொழிவு. ஆசாபாசங்கள் ஏதும் இல்லாததால், இவை செயல்படும். பகவானது சொற்பொழிவு விருப்பு வெறுப்பு ஏதும் இல்லாதவையாக இருந்ததால்தான், அவை இன்று வரை ஜீவனோடு இருக்கின்றன. இப்படித்தான் ஞானியின் சொற்பபொழிவு, பலன் அளிக்க கூடியவை.முக்தி அடைவதற்கு, ஞானியின் சொற்பொழிவு ஒன்றேதீர்வானது. நேரடி சத்சங்கம் அமையவில்லை என்றால்... வினா : தாதா, ஒருவேளை நேரடி பரிச்சயத்தில் இருக்கமுடியவில்லை என்றால், அப்போது புத்தகங்கள் உதவியாக இருக்குமா? தாதாஸ்ரீ ! அனைத்தும் உதவும். இங்கு இருக்கும், தாதாவின் அனைத்து சாதனங்களும் (புத்தங்கள்) தாதாவின் வார்த்தைகளே. இது தான் தாதாவின் நோக்கம், அதாவது அனைத்துமே உதவிகரமாக இருக்கும். வினா ! ஆனால் நேரடி பரிச்சயத்திற்கும், மற்ற சாதனங்களுக்கும், இடையிலான வேறுபாடு இருக்கிறது, அல்லவா? தாதாஸ்ரீ : வேறுபாட்டைப் பார்க்கத் தொடங்கினோமேயானால், அனைத்திலும் வேறுபாடுகளைக் காணலாம். ஆகையால் சமயத்திற்கு ஏற்றவாறு எது செய்ய வேண்டுமோ அது செய்ய வேண்டும். தாதா இங்கே இல்லாத போது நீங்கள் என்ன செய்ய முடியும்? தாதா கண்டிப்பாக புத்தகங்களில் இருக்கிறார், அவற்றைப் படியுங்கள். புத்தகங்களில் தாதாஜி இருக்கிறார் இல்லையா? இல்லையென்றால் கண்களை மூடிக் கொண்டு வேண்டுங்கள் உடனடியாக தாதாவை காண முடியும். 15.5 ஆணைகள் வாயிலாக உலகம் குற்றமற்றதாகும் "சொரூபஞானம்” இல்லையென்றால் உங்கள் தவறுகள் புலப்படாது. ஏனென்றால், "நான் தான் சந்தூபாய், என்னிடத்தில் எந்தக் குறைகளும் இல்லை, நான் புத்திசாலி, கௌரவமானவன்” என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும். "சொரூபஞானம்” என்ற "ஆத்மஞானம்” அடைந்த பிறகு, நீங்கள் மனம் - வாக்கு - உடல் ஆகியனவற்றில் எந்த 29 Page #33 -------------------------------------------------------------------------- ________________ பாரபட்சம் இன்றி இருப்பீர்கள், ஆதலால் உங்கள் குற்றங்களும் பிழைகளும் உங்களுக்குப் புலப்படும். யாருக்கு அவரது தவறுகள் புலப்படுகிறதோ, யாருக்கு ஒவ்வொரு கணமும் அவரது குற்றங்கள் புரிகிறதோ, அவை எங்கே எப்படி நடந்தாலும் சரி, அந்த நிலை தான் உங்கள் ஆத்மா முழுமையாக பிரகாசிக்கும் நிலை. "நான் சந்தூபாய் இல்லை. நான் சுத்தாத்மா” என்பதை தெள்ளத்தெளிவாகப் புரிந்து கொண்ட பின்னர், நீங்கள் பாரபட்சமின்றி நடக்கத் தலைப்படுவீர்கள். யாருடைய குற்றங்குறைகளும் தென்படாது, ஆனால் தன்னுடைய குற்றங்குறைகள் புலப்படும், அந்த நிலையில் இந்த ஞானம் மேலும் விருத்தியடைந்து உங்களுக்கு பலன்கள் அளிக்கத் தொடங்கும். குற்றமேதும் இல்லாத இந்த உலகில், யாருமே குறையேதும் இல்லாத நிலையில், நாம் யாரைக் குற்றம் கூற முடியும்? அனைத்துக் குறைகளும் அழிந்தால் தான், "தான்" என்ற அகந்தை அழியும். இந்த அகந்தை அழிக்கப்படாத வரை, உங்கள் குறைகளை நீங்கள் அழித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்களின் குற்றங்கள் தென்பட்டால், அது நம்முடைய தவறு தான். ஏதோ ஒரு கட்டத்தில் நீங்கள் உலகை குற்றமற்றதாக பார்த்தே ஆகவேண்டும். இவையெல்லாம் நமது முற்பிறவி கணக்கு தான். இந்த அளவு நீங்கள் புரிந்து கொண்டு விட்டாலும் கூட, இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 5 ஆணைகளைப் பின்பற்றுவதன் மூலம் குறை கூறாத பார்வை அதிகரிக்கும். நான் ஒட்டுமொத்த உலகையும் குறையில்லாததாகவே காண்கிறேன். உங்களுக்கும் அப்படிப்பட்ட ஒரு பார்வை வரும் போது, எந்தவிதமான புதிருக்கும் விடை கிடைத்து விடும். நான் அப்படிப்பட்ட ஒரு தெளிவான பார்வையை உங்களுக்கு அளிப்பேன். பிறகு உங்களது பல பாவங்களை அழிப்பேன், அதனால் நீங்கள் இந்தப் பார்வையை நிலைநிறுத்திக் கொண்டு குறை இல்லா உலகை காண இயலும். இந்தப் பார்வையுடன், கூடவே 5 ஆணைகளையும் நான் உங்களுக்கு அளிப்பேன். அவற்றை நீங்கள் பின்பற்றி நடக்கும் போது, நான் அளித்திருக்கும் ஞானம், எந்த பங்கமும் ஏற்படாமல் இருக்க உதவும். அப்போதிலிருந்து உங்களுக்கு ஏற்பட்டது அந்த மெய்யான பார்வை நீங்கள் உங்கள் தவறுகளைக் காணத் தொடங்கும் போது, உங்களுக்கு மெய்யான பார்வை ஏற்பட்டு விட்டதாக அர்த்தம். இல்லையென்றால் அனைவரும் இவ்வுலகத்தில் உறக்கத்தில் (நான் ஆத்மா என்ற அறியாமை) இருப்பது போலவே இருக்கிறார்கள். உங்கள் தவறுகள் கரைந்தனவா இல்லையா என்பது பற்றி நீங்கள் கவலையேதும் கொள்ளத் தேவையில்லை. உங்கள் விழிப்பு நிலை தான் முக்கியமானது. விழிப்புநிலை அடைந்த 30 Page #34 -------------------------------------------------------------------------- ________________ பின்னர் புதிய தவறுகள் ஏற்படாது, பழைய தவறுகள் ஏதேனும் இருப்பின் அவை வெளியேற தொடங்கும். நாம் அந்தத் தவறுகள் மீது தான் கவனம் செலுத்த வேண்டும். தவறுகள் ஏற்படுப்படாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும். குறைகள் எந்த அளவோ, அந்த அளவு ப்ரதிக்ரமணம் (கழிவிரக்கம்) தேவை "உங்களிடம் கணக்கேயில்லாத குற்றங்குறைகள் இருந்தால், நீங்கள் அந்த அளவுக்கு கழிவிரக்கம் என்ற "பிரதிக்ரமணங்களை” மேற்கொள்ள வேண்டும். உங்களிடம் இருக்கும் அனைத்து வகை தவறுகளும் உங்களுக்குக் கண்கூடாகத் தெரியும். ஞானியிடமிருந்து ஞானம் பெற்ற பிறகு தோஷங்கள் தெரியத் தொடங்கும், இல்லையென்றால் நம்மிடம் இருக்கும் தோஷங்கள் புலப்படாது. நமது குறைகள் தெரியாது என்பது ஒருபுறம், மற்றவர்களுடையவை நிறையவே தெரியும். இந்த தவறான பார்வையின் பெயர் "மித்யாத்வம்”. நமக்குள்ளே இருக்கும் குற்றங்கள் மீது பார்வை இந்த ஞானம் அடைந்த பிறகு உங்களுக்குள்ளே தோன்றும் தவறான எண்ணங்கள், எதிர்மறையான சிந்தனைகள், நல்ல, ஆக்கபூர்வமான எண்ணங்களையும் பார்க்க இயலும். நல்ல எஎண்ணங்கள் மீது எந்தப் பற்றும் இருக்காது, தீயவை மீது வெறுப்பும் இருக்காது. எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லாததால் நல்லது கெட்டது பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஞானிகள் எதைப் பார்க்கிறார்கள்? அவர் உலகை குறைபாடற்றதாக பார்க்கிறார்கள். ஏனென்றால், உலகில் நடப்பவை அனைத்தும் "வெளியேற்றமாகவே” (டிஸ்சார்ஜ்) இருக்கிறது, இதில் பாவம் மனிதர்கள் என்ன செய்ய முடியும்? உங்களை யாராவது திட்டினால், அது ஒரு "வெளியேற்றம்”. உங்கள் "பாஸ்” உங்களுக்குக் கஷ்டங்கள் கொடுத்தால், அதுவும் ஒரு "வெளியேற்றம்” (டிஸ்சார்ஜ்) தான். "பாஸ்" ஒரு காரணம் மாத்திரமே. உலகத்தில் யாரும் குற்றவாளி இல்லை. நீங்கள் உலகத்தில் பார்க்கும் தவறுகள் அனைத்தும் உங்களுடையது தான். இதன் காரணமாகவே உலகம் நிலைத்திருக்கிறது. மற்றவர்களின் குற்றம் குறைகளைப் பார்ப்பதனால் பழிவாங்கும் உணர்வு ஏற்படுகிறது. ஆத்மாவை குறித்த அறியாமையே உங்களின் தவறுகளை காண பாதகமாக இருக்கிறது. மற்றவர்களின் தவறுகளை பார்ப்பதற்கு இணையாக ப்ரதிக்ரமண் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் கணக்கில்லா தவறுகள் நிறைந்த (பாத்திரம்) மனிதன் என்றால் அதற்கு ஏற்றவாரு அவ்வளவு ப்ரதிக்ரமன்கள் செய்ய வேண்டும் (ப்ரதிக்ரமன்,என்பது நாம் செய்த தவறுகளை யோசித்து முன்நிறுத்தி, அதற்கு வருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, பின்பு 31 Page #35 -------------------------------------------------------------------------- ________________ மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருக்க, உறுதி எடுத்து கொள்ள வேண்டும்). ஞானி ஞானம் கொடுத்த பின்பு நீங்கள் உங்களின் எல்லா தவறுகளையும் பார்க்க இயலும். ஜெய் சத் சித் ஆனந்தம் et அனைத்திடங்களும் அனுசரித்து நடக்கவும் இந்த வாக்கியத்தை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள் அனைத்து இடங்களிலும் அனுசரித்து நடக்கவும்” என்ற இந்த வரியை மட்டும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கைக்கொள்ளப் பழகி விட்டீர்கள் என்றால், உங்களால் அதிகம் சாதிக்க முடியும். உங்களுக்குள்ளே இயல்பாகவே அமைதி நிறையத் தொடங்கும். இந்த பயங்கரமான கலியுகத்தில் நீங்கள் அனுசரித்துக் கொள்ளப் பழகவில்லை என்றால், உங்கள் பொன்னான வாழ்வு வீணாகிப் போகும். உலக வாழ்வில் வேறு எதுவும் உங்களால் கற்க முடியவில்லை என்றாலும் கூட பாதகமில்லை, ஆனால் அனுசரித்துக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் எதிரே இருப்பவரால் அனுசரித்துப் போக இயலவில்லை, ஆனால் நீங்கள் அனுசரித்து நடக்கிறீர்கள் எனும் போது, நீங்கள் அனைத்து கஷ்டங்களையும் கடக்கும் படைத்தவர்களாவீர்கள். மற்றவர்களிடம் அனுசரித்து நடக்க முடிந்தவர்களிடம் துக்கத்தின் சாயல் இருக்காது. "அனைத்து இடங்களிலும் அனுசரித்து நடக்கவும்”. ஒவ்வொருவரிடத்திலும் அனுசரித்து நடத்தல் என்பதே மிகப் பெரிய மனித இயல்பு. இந்தக் காலத்தில பலவகையான இயல்பு படைத்தவர்கள் இருக்கிறார்கள், இந்த நிலையில் அனைவரிடமும் அனுசரித்து நடக்காமல் எப்படி இருக்க முடியும்? என்னை விட்டு விலகி இரு என்று இந்த ஐஸ்க்ரீம் உங்களிடம் கூறவில்லை. அதை உண்ண உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உண்ணாதீர்கள். ஆனால் இந்த வயதானவர்கள் அதைப் பார்த்தவுடனேயே சிடுசிடுப்பாகி விடுகிறார்கள். இவை எல்லாம் கால மாற்றத்தின் விளைவுகள். இந்த சிறுவயதுக்காரர்கள் காலத்திற்கேற்ப நடக்கிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், "உலகத்திற்கேற்ப மாறுங்கள்” என்கிறோம். பையன் புதுத் தொப்பி அணிந்தான் என்றால், "என்ன கண்றாவியை போட்டுக்கிட்டு வந்திருக்கே?” என்று கேட்கிறோம், இப்படிக் கூறக் கூடாது. இப்படி கூறுவதற்கு பதிலாக 32 Page #36 -------------------------------------------------------------------------- ________________ எப்படி அனுசரித்து நடக்க வேண்டும் என்றால், "இத்தனை அழகான தொப்பியை எங்கிருந்து வாங்கி வந்தாய்?, என்ன விலை? மிகவும் மலிவாக கிடைத்ததா?” என்று வினவ வேண்டும். சிரமங்களில் சுகத்தைக் காண வேண்டும் என்று தான் நமது சமயம் நமக்கு எடுத்துரைக்கிறது. "இந்தப் போர்வை அழுக்காக இருக்கிறது” என்று இரவில் எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. உடனே நான் அனுசரித்து நடக்கத் தீர்மானித்தேன்; அதன்பின் அந்தப் போர்வை எனக்கு நன்றாகவும் மென்மையாகவும் இருக்கத் தொடங்கியது. ஐம்புலன்கள் அளிக்கும் அறிவு சிரமங்களையே நம் கண்முன்னே நிறுத்துகிறது; மாறாக ஆத்மஞானமோ சுகங்களைக் காட்டுகிறது. ஆகையால் ஆத்மாவிலேயே நிலைத்திருங்கள். நல்லவை-கெட்டவை பற்றிய நமது கருத்துக்கள் தான் நம்மை வாட்டுகின்றன. நாம் இரண்டையுமே சமநோக்கிலேயே காண வேண்டும். ஒன்றை நாம் நல்லது என்று கூறும் வேளையில், மற்றவை தீயவையாக நாம் பார்க்கிறோம், இது நம்மை வாட்டுகிறது. உண்மை பேசுபவரிடத்திலும், பொய்யுரைப்பவரிடத்திலும் நாம் அனுசரித்து நடக்க வேண்டும். "உங்களுக்கு மூளையே இல்லை” என்று கூறுபவரிடம், "அது முதல் இருந்தே இல்லைங்க, நான் கொஞ்சம் மந்தம் தான், இன்னைக்குத் தான் இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வந்திருக்கு, எனக்கு சின்ன வயதிலேர்ந்தே தெரியும்” என்று கூறுங்கள். இப்படி உங்கள் எதிர்வினை இருந்தால், சச்சரவு ஏற்படாது. அவர்கள் மீண்டும் உங்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள். மனைவியிடத்தில் அனுசரித்தல் ஏதோ காரணமாக நாம் வீடு திரும்ப காலதாமதமாகி விட்டால், மனைவி "இத்தனை நேரமா எங்க போயிருந்தீங்க? என்னால இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது” என்று கோபித்துக் கொண்டால், "ஆமா, நீ சொல்றது சரிதான், நீ சொன்னா நான் திரும்பி போயிடறேன், இல்லை நீ சொன்னா நான் உள்ளே வர்றேன்” என்று கூறிப் பாருங்கள். அப்போது அவர், "இல்லை, திரும்பி போகாதீங்க, இங்கேயே இருங்க” என்பார். நீங்கள் மீண்டும், "நீ சாப்பிடுன்னு சொன்னா வீட்டுல சாப்பிடறேன், இல்லைன்னா சாப்பிடாமயே படுத்துக்கறேன்” என்றால், அவர், "இல்லை, இல்லை, வந்து சாப்பிடுங்க” என்பார். இது தான் அனுசரித்தல். காலையில் எழுந்தவுடன், அருமையான தேநீர் அருந்தக் கொடுப்பார். நீங்கள் மட்டும் கடுமையாக நடந்திருந்தீர்கள் என்றால், அவரும் அதே கடுமையை உங்களிடம் காட்டியிருப்பார், காலையில் தேநீர் தருவதிலும் இந்தக் கடுமை நீடித்திருக்கும், இந்த நிலை அடுத்த 3-4 நாட்கள் தொடர்ந்திருக்கும். 33 Page #37 -------------------------------------------------------------------------- ________________ உணவு உண்ணும் வேளையில் அனுசரித்தல் அனைத்து இடங்களிலும் அனுசரித்து நடப்பது என்பது தான் ஒழுக்கமுடைய வாழ்க்கைத் தொடர்புகளின் பொருள். இது அனுசரித்து நடத்தல் இருக்க வேண்டிய உலகம். கருத்து வேறுபாடுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். ஆகையால் தான் நான் "அனைத்து இடங்களிலும் அனுசரித்து நடக்கவும்,” என்ற சூத்திரத்தை அளித்திருக்கிறேன். வடிசாற்றில் அதிக உப்பு இருந்தால், அனுசரித்து நடக்க வேண்டும் என்று தாதாஜி கூறியிருக்கிறாரே என்று நினைவில் கொள்ளுங்கள், சற்று குறைவாக வடிச்சாற்றை குடிக்கவும். ஆம், ஊறுகாய் வேண்டும் என்று தோன்றினால், சற்று ஊறுகாய் கொண்டு தா என்று கேட்டுக் கொள்ளுங்கள். சண்டை கூடாது, வீட்டில் சண்டை ஏற்படக் கூடாது. சிரமமான சூழ்நிலைகளிலும் அனுசரித்து நடக்கப் பழகி விட்டீர்கள் என்றால், வாழ்க்கை சுகமான, சீராண பயணமாக அமையும். விருப்பமில்லை என்றாலும், ஏற்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்களிடத்தில் யாரெல்லாம் அனுசரித்துப் போகவில்லையோ, அவர்களிடம் எல்லாம் நீங்கள் அனுசரித்து செயல்படுங்கள். தினசரி வாழ்வில் மாமியார்- மருமகளுக்கு இடையேயாகட்டும், ஓரகத்திகளுக்கு இடையேயாகட்டும், அனுசரிப்பு காணப்படவில்லை என்றால், யாரொருவர் உலகவலையில் இருந்து விடுபட நினைக்கிறார்களோ, அவர்கள் அனுசரித்துத் தான் போக வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒருவர் கோளாறு ஏற்படுத்திக் கொண்டிருந்தால், மற்றவர் உறவை சீர் செய்வதில் ஈடுபடவேண்டும். அப்போது தான் உறவு நிலைக்கும், அமைதி நிலவும். உலகைச் சார்ந்த விஷயங்களில், உங்கள் கருத்தே சரி என்று சாதிக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து இடங்களிலும் அனுசரித்துச் செல்பவன் தான் மனிதன். மேம்படுத்தவா அல்லது அனுசரித்துச் செல்லவா? ஒவ்வொரு விஷயத்திலும் எதிரில் இருப்பவரை அனுசரித்து நடந்தால், வாழ்க்கை எத்தனை இனிமையாக ஆகிவிடும். மரணம் நம்மை வந்து தழுவும் வேளையில், நாம் எதைக் கொண்டு செல்கிறோம்? "மனைவியை திருத்துங்கள்” என்று ஒருவர் கூறினால், நான் உங்களுக்கு என்ன அறிவுரை சொல்கிறேன் என்றால் "அவரை சரிசெய்ய முயலும் வேளையில் நீ தான் கோனித்து போவாய்” என்பேன். ஆகையால் மனைவியை திருந்த செய்யும் செயலில் ஈடுபட வேண்டாம், அவர் எப்படி இருந்தாலும், அது சரிதான் என்று கூறுங்கள். நிரந்தரமாக நீங்கள் அவருடன் தான் இருக்க வேண்டும் என்றால் நிலைமை வேறு; ஆனால் இது ஒரு ஜென்மத்துக்குத் தானே, பிறகு நீங்கள் எங்கே செல்வீர்கள் என்று யார் அறிவார்கள்? இருவரின் மரணக்காலம் வேறுவேறு, இருவரின் கர்மபலன்கள் வேறுவேறு. இங்கே எந்தக் கொடுக்கலோ வாங்கலோ இல்லை. அடுத்தபடியாக அவர் எங்கே 34 Page #38 -------------------------------------------------------------------------- ________________ செல்வார் என்பதை யாரால் சொல்ல முடியும்? நீங்கள் அவரை இந்த ஜென்மத்தில் திருத்திகிறீர்ர்கள்,ஆனால் அவர் அடுத்த பிறவியில் வேறு ஒருவருடைய மனைவி ஆவார். ஆகையால் அவரை திருத்த முயற்சியில் ஈடுபடாதீர்கள். அவருமே கூட உங்களை திருத்தும் முயற்சியிலும் ஈடுபடத் தேவையில்லை. அவர் எப்படி இருந்தாலும், அவர் பொன்னானவர் என்று வாழ வேண்டும். ஒருவர் மற்றவரின் இயல்புகளை மேம்படுத்துவது என்பது இயலாத காரியம். நாயின் வால் வளைந்திருந்தால், அது வளைந்தே தான் இருக்கும். ஆகையால் நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும், அனுசரித்துச் செல்ல வேண்டும். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே இருக்கட்டும். எல்லா இடங்களிலும் அனுசரியுங்கள். கடினமானவர்களிடத்திலும் அனுசரித்துச் செல்லுங்கள் அனைத்து வீடுகளிலும் சண்டை சச்சரவு காணப்படுகிறது, ஆனால் இந்த வீட்டில் மட்டும் சண்டை இல்லை என்று அண்டை அயலார்கள் கூறும் அளவுக்கு நீங்கள் அனுசரித்து நடக்க வேண்டும். யாரிடத்தில் அனுசரித்து நடக்க முடியவில்லையோ, அங்கே தான் உங்கள் சக்திகளை மேம்படுத்த வேண்டும். எங்கே சாதகமான சூழ்நிலை இருக்கிறதோ, அங்கே சக்தி இயல்பாகவே இருக்கிறது. இயலாமை என்பது ஒரு பலவீனம். என்னால் எப்படி அனைவரிடமும் அனுசரித்து நடக்க முடிகிறது? எந்த அளவுக்கு நீங்கள் அனுசரித்து நடக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் சக்திகள் அதிகரித்து, உங்கள் பலவீனங்கள் பொடிபடும். அனைத்துத் தவறான புரிதல்களும் விலகும் போது தான் சரியான புரிதல் என்பது ஏற்படும். மென்மையான இயல்பு உடையவர்களிடம் அனைவரும் அனுசரித்துச் செல்வார்கள், ஆனால் கடினமான, தீவிரமான, கோபமான இயல்பு உடையவர்களிடம் உங்களால் அனுசரிக்க தெரிந்து விட்டால், நீங்கள் உண்மையிலேயே சாதித்து விட்டீர்கள். நீங்கள் கோபப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. இந்த உலகில் எதுவும் நமக்கு பொருந்தாது, ஆனால் நாம் அவற்றுக்கேற்ப பொருந்தும் தன்மையை ஏற்படுத்திக் கொண்டால் அது நன்மையளிக்கும். மாறாகநாம், அதை பொருந்துமாறு மாற்ற முயற்சித்தால், உலகம் கோணலாகவே தெரியும். ஆதலால் அனைத்து இடங்களிலும் அனுசரித்து செயல்படுங்கள். நாம் எதிர்கொள்பவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாகவோ, கடினமானவர் களாகவோ இருந்தால், அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்கச் செய்ய வேண்டும். ரயில் நிலையத்தில் சரக்கு சுமப்பவரின் சேவைகள் நமக்குத் தேவைப்பட்டால், அவர் நம்மிடம் பேரத்தில் ஈடுபட்டால், நாம் சற்று கூடுதல் பணம் கொடுத்தாவது சம்மதிக்க செய்ய வேண்டும். இல்லையென்றால், மூட்டையை நாமே தான் சுமக்க வேண்டும். 35 Page #39 -------------------------------------------------------------------------- ________________ குற்றம் கூறாதீர்கள், அனுசரித்துச் செல்லுங்கள் வீட்டில் அனுசரித்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும். சத்சங்கம் சென்ற பின், காலதாமதமாக நீங்கள் வீடு திரும்பினால், வீட்டில் என்ன கூறுவார்கள்? "கொஞ்சமாவது நேரம் காலம் பத்தின எண்ணம் இருக்கணுமா இல்லையா?” என்பார்கள். ஏன் ஒரு கணவன் இப்படி அவதிக்குள்ளாக வேண்டும்? இது அவரது கடந்த பிறப்பின் கர்மபலன் தான். அவரது முந்தைய பிறப்பில் அவர் மற்றவர்களை அதிகம் சாடியிருக்கிறார். அப்போது அவரிடம் அதிகாரம் இருந்தது. இப்போது அவரிடத்தில் அதிகாரம் இல்லாத நிலையில், அவர் முனகாமல் அனுசரித்து நடக்கப் பழக வேண்டும். ஆகையால் இந்த பிறப்பில் கூட்டிக் கழித்து விடுங்கள். எதிரில் இருப்பவர் பழித்துப் பேசினா, அதை கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள், குறை சொல்லாதீர்கள். ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடக்க வேண்டும் என்ற உறுதி மேற்கொண்டால், அவர்கள் கண்டிப்பாகத் தீர்வு காண்பார்கள். ஒருவர் அதிகம் விறைத்துக் கொண்டிருந்தால், மற்றவர் அனுசரித்து நடந்தால், தீர்வு பிறக்கும். அனைத்து இடங்களிலும் அனுசரித்துச் செல்லவில்லை என்றால், உங்களுக்குப் பித்து பிடித்துப் போகும். மற்றவர்களுடன் ஏற்பட்ட இடைவிடாத சச்சரவு தான் உங்களின் இந்தப் பித்துப்பிடித்த நிலைக்குக் காரணம். யார் அனுசரித்து நடக்கும் கலையைக் கற்றவர்களோ, அவர்களே மோக்ஷப் பாதையில் முன்னேறுபவர்கள். தினசரி வாழ்க்கையில் அனுசரித்துச் செல்வதன் பெயர் தான் ஞானம். அனுசரித்துச் செல்லப் பழகியவர்களால் தான் கரையைக் கடக்க முடியும். இதுவே ஒருவரின் மிகப் பெரிய வெற்றி. சிலரிடம் இரவில் நேரம் கழித்துத் தூங்கும் பழக்கம் இருக்கிறது, சிலரிடமோ சீக்கிரம் உறங்கும் பழக்கம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரு சாராரிடத்தில் சமநிலை எவ்வாறு ஏற்படும்? ஒரு குடும்பத்தில் இப்படிப்பட்ட இருவகைப் பட்டவாகள் வசிக்க நேர்ந்தால் என்னவாகும்? வீட்டில் ஒருவர் உங்களிடம், "நீ ஒரு முட்டாள்” என்றால், அவர் அப்படிப்பட்ட வாக்கியங்களைத் தான் பயன்படுத்துவார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவருடன் மேலும் மேலும் நீங்கள் வாதம் புரியத் தொடங்கினால், நீங்கள் தான் களைத்துப் போவீர்கள். அவர் உங்களோடு மோதலில் ஈடுபட்டார், திரும்ப நீங்களும் அவருடன் மோதினீர்கள் என்று சொன்னால், நீங்களும் பார்வை இழந்தவர் ஆகிவிட்டீர்கள் என்று உறுதி ஆகிவிட்டது. 36 Page #40 -------------------------------------------------------------------------- ________________ நான் ஒருவருடைய இயல்பு தன்மையை புரிந்து கொள்வேன். ஆகையால் நீங்கள் மோத நினைத்தாலும் நான் அதை அனுமதிக்க மாட்டேன். இல்லையென்றால் இரண்டு பேருக்கும் விபத்து ஏற்படும். பிறகு இருவரின் உள்ளே இருக்கும் உதிரிபாகங்கள் சிதைந்து விடும். ஒரு வண்டியின் பம்பர் உடைந்தால், உள்ளே இருப்பவர்களின் நிலை என்னவாக இருக்கும்? மோசமாக இருக்கும் இல்லையா! ஆகையால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரின் இயல்பை, அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள். சச்சரவு என்பது தினசரி ஏற்படுகிறதா? உங்கள் கர்மங்கள் உதிக்கும் போது தான் ஏற்படும், அப்பொழுது நாம் அனுசரித்துப் பழக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டில் மனைவியுடன் சண்டை ஏற்பட்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவரை ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று, அவருடன் சேர்ந்து உணவு உண்டு மகிழ்விக்க வேண்டும். உங்கள் உறவில் ஏற்பட்ட கசப்பு நீடித்திருக்க விடக்கூடாது. நீங்கள் உண்ணும் தட்டில் என்ன அளிக்கப்பட்டிருக்கிறதோ, அதை உண்ண வேண்டும். உங்கள் முன் வந்திருப்பது ஒரு நிகழ்வு; இதை எதிர்த்து நீங்கள் செயல்பட்டால், விளைவு உங்களுக்கு எதிராகவே அமையும், என்று பகவான் கூறியிருக்கிறார். ஆகையால் நமது தட்டில் நமக்குப் பிடித்தவை,பிடிக்காதவை என இரண்டும் வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றிலிருந்து சற்றாவது நாம் உண்ண வேண்டும். யாரால் அனுசரித்து நடக்க முடியவில்லையோ, அவரை எப்படி மனிதன் என்று அழைப்பது? யார் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடக்கப் பழகினவர்களோ, அவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது, அவர்கள் வீட்டில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. உங்கள் மனைவியுடன் நீங்கள் மகிழ்வாக இருக்க விரும்பினால், நீங்கள் அனுசரித்து நடக்கப் பழக வேண்டும். இல்லையென்றால், பகை தான் ஏற்படும். மனிதர்களின் வாழ்வு சில கோட்பாடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடக்கப் பழக வேண்டும். யார் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து நடக்கப் பழகியவர்களோ, அவர் தான் மனிதன், அவரே பாராட்டுதல்களுக்கும்,புகழுக்கும் உரியவராவார். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ப அனுசரித்து நடக்கத் தெரிந்தவர்களுக்கு மோக்ஷப் பாதை வழி திறக்கும். இது ஒரு மிகப் பெரிய ஆயுதம். அனுசரித்து நடக்காமல் இருந்தால் அது மூடத்தனம் மற்றவருக்கு நீங்கள் கூறுவது ஏற்றுகொள்ளப்படுவதாக இருக்க வேண்டும். மற்றவருக்கு நீங்கள் கூறுவது உடன்பாடு இல்லையென்றால், தவறு உங்களுடையது தான். 37 Page #41 -------------------------------------------------------------------------- ________________ உங்கள் தவறை நீங்கள் திருத்திக் கொண்டால் தான் உங்களால் அனுசரிக்க முடியும். அனைத்து இடங்களிலும் அனுசரித்துச் செல்லுங்கள் என்பது தான் பகவான் மஹாவீரர் அளிக்கும் செய்தி. அனுசரித்துச் செல்லாமல் இருப்பது என்பது மூடத்தனம். அனுசரித்தல் தான் நீதி. எந்த ஒரு பிடிவாதமும் நீதியல்ல. என்னிடத்தில் யாரும் அனுசரித்துப் போகாமல் இருந்ததில்லை. இங்கே வீட்டில் இருக்கும் 4 பேர் கூட அனுசரித்துப் போவதில்லை. அனுசரித்துச் செல்ல தெரியுமா, தெரியாதா? கற்பீர்களா, கற்க மாட்டீர்களா? நம்மிடத்தில் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறோமோ,அப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் கவனிப்பதிலிருந்து தான் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் பார்ப்பதைக் கொண்டு தான் கற்றுக் கொள்வீர்கள், என்பது தான் உலக இயல்பு. இதை யாரும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. இந்த உலகத்தில் உங்களுக்குத் தெரிந்தவை மிகக் குறைவாகவே இருந்தால், அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. உங்கள் வேலை பற்றி உங்களுக்குக் குறைவாகவே தெரிந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும், அனுசரித்து நடக்க உங்களுக்குத் தெரிய வேண்டும். இதை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் துன்பப்படுவீர்கள். இந்தச் செய்தியை நீங்கள் வாழ்வில் கடைபிடித்து வெற்றியாளர்களாக மாறுங்கள். மோதல்களைத் தவிருங்கள் மோதல்களில் ஈடுபடாதீர்கள் "யாருடனும் மோதலில் ஈடுபடாதீர்கள். அதைத் தவிர்த்து நடங்கள்”. எனது இந்த வாக்கியத்தை ஆராதித்து நீங்கள் நடந்தீர்கள் என்றால், கண்டிப்பாக மோக்ஷத்தை அடைவீர்கள். எனது ஒரே ஒரு வாக்கியத்தை நீங்கள் முற்றுமுழுவதுமாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், உங்கள் சாதனை முழுமை பெறும். மோக்ஷம் சித்திக்கும், இது உறுதி. எனது இந்த ஒரு வார்த்தையை உங்களால் ஒரு தினம் பின்பற்ற முடிந்தால் விசித்திரமான சக்திகள் உங்களுக்குள் உதயமாகும். எத்தனை கடுமையான சச்சரவுகள் இருந்தாலும், உங்களுக்குள்ளே இருக்கும் அளவரியா சக்திகளிடத்தில் அவற்றைத் தீர்க்கும் ஆற்றல் உண்டு. தவறுதலாக யாருடனாவது மோதல்நிலை ஏற்பட்டு விட்டால், அதைத் தீர்க்க முயலுங்கள். எந்த ஒரு வன்மமும் இல்லாமல்,அந்த சச்சரவிலிருந்து சுமுகமான முறையில் வெளியே வாருங்கள். 38 Page #42 -------------------------------------------------------------------------- ________________ போக்குவரத்து விதிகளால் விபத்துக்களுக்கு தடை ஒவ்வொரு மோதலிலும் இருதரப்பும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நீங்கள் எதிராளிக்கு துக்கம் ஏற்படுத்தும் அதே நேரத்தில், உங்களுக்கு துக்கம் ஏற்படுவதிலிருந்து தப்ப முடியாது. ஆகையால் தான் நான் போக்குவரத்து விதிகள் பற்றிய எடுத்துக்காட்டை அளிக்கிறேன். நீங்கள் ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தால், அதில் உங்களுக்கு மரணம் ஏற்படலாம், விபத்தில் ஆபத்து இருக்கிறது. ஆகையால் யாருடனும் மோதலில் ஈடுபடாதீர்கள். இதைப் போலவே சராசரி வாழ்க்கையின்செயல்களில் யாருடனும் மோதாதீர்கள். யாராவது உங்களுடன் மோதும் நோக்கத்தில் வந்தாலோ, துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்ற சுடுசொற்களைப் பேசினாலோ, மோதலை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது; அப்படியே ஒருவேளை பாதிப்பு ஏதேனும் ஏற்பட நேர்ந்தால், எதிராளியின் மனது உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். அந்த வேளையில் நீங்கள் அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுங்கள். உங்களின் புரிதல் அதிகரிக்க அதிகரிக்க, உங்களால் மோதல்களைத் தவிர்க்க இயலும். மோதலைத் தவிர்ப்பதன் மூலம் தான் மோக்ஷத்தை அடைய முடியும். உலகம் சச்சரவுகள் - மோதல்களின், முடிவாக உண்டானது. பழிவாங்குதலின் விளைவால் தான் ஏற்பட்டது உலகம் என்றார் பகவான். ஒவ்வொரு மனிதன் மட்டுமில்லாது, ஒவ்வொரு உயிரினத்திடமும் வஞ்சம் குடிகொண்டிருக்கிறது. ஆத்மசக்தி அனைவரிடமும் ஒன்றுபோல நிறைந்திருக்கிறது. இந்த உடலின் பலவீனத்தின் காரணத்தால் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் சகித்துக் கொள்ளும் அதே வேளையில் வன்மம் இல்லாமல் இருப்பதில்லை. மீண்டும் அடுத்த பிறவியில் மனதில் குடிகொண்டிருக்கும் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறார். ஒரு நபர் எத்தனை கடுமையான சொற்களை உதிர்த்த போதிலும், அவருடன் நாம் மோதலில் ஈடுபட கூடாது. நமது சொற்களால் மற்றவர்களுக்கு துக்கம் ஏற்படுமேயானால், அது மிகப் பெரிய குற்றம். 39 Page #43 -------------------------------------------------------------------------- ________________ சகித்துக் கொள்ளாதீர்கள், தீர்வு காணுங்கள் மோதலைத் தவிர்ப்பது என்றால் அதை சகித்துக் கொள்ளுதல் அல்ல. எத்தனை காலம் தான் பொறுத்துக் கொள்வீர்கள்? சகித்துக் கொள்வதும், ஒரு "ஸ்ப்ரிங்கை” அழுத்திக் கொண்டிருப்பதும் ஒன்று தான். ஒரு "ஸ்ப்ரிங்கை” எத்தனை நேரம் தான் அழுத்தியே வைத்திருக்க முடியும்? ஆகையால் சகித்துக் கொள்வது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டியதே இல்லை. தீர்வு காண கற்று கொள்ளுங்கள். அஞ்ஞான நிலையில், சகிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் "ஸ்ப்ரிங்” விடுபடும் போது, அதிக சேதத்தை ஏற்படுத்தும். மற்றவர்களின் செயல்பாடுகளை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறதென்றால், அது உங்கள் கடந்தகாலக் கர்மங்களின் விளைவுகளே. ஆனால் இந்தக் கணக்கு பற்றி உங்களுக்குத் தெரியாது, இது ஏதோ புதிதாக உங்களைக் குறிவைத்து தொடுக்கப்படுகிறதாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். புதிய கணக்குகளை யாரும் தொடங்குவதில்லை. நாம் கொடுத்ததை தான் திரும்ப பெறுகிறோம்.பழைய மிச்சங்கள் தான் உங்களை பாதிக்கின்றன. உங்கள் கடந்த பிறவியின் கர்ம கணக்கின் விளைவாகவே உங்களை இவை அண்டுகின்றன, எதிராளி கருவி மாத்திரமே. மோதல் உங்களின் தவறே இந்த உலகில் ஏற்படும் மோதல்கள் அனைத்தும் உங்களின் தவறு தான் காரணமே தவிர, எதிரில் இருப்பவரின் தவறேதுமில்லை . மனிதர்கள் எப்படியும் மோதலில் ஈடுபடவே செய்வார்கள். "ஏன் மோதலில் ஈடுபட்டீர்கள்? என்று கேட்டால், "அவர்கள் தான் ஈடுபட்டார்கள்” என்ற பதில் வரும். அவர் தான் கண்ணிழந்தார் என்றால், மோதலில் ஈடுபட்டு நீங்களும் பார்வைத்திறன் இழந்துவிட்டீர்கள். மோதல் ஏற்பட்டால், அதற்கு நீங்கள் தான் காரணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். தவறு உங்களுடையது தான் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டால், உங்களுக்குத் தீர்வு கிடைக்கும், புதிர் அவிழும்."எதிராளியின் தவறு” என்று தேடித் திரிந்தோமென்றால், புதிருக்கான விடை கிடைக்காமலேயே போய் விடும். "தவறு என்னுடையது தான்” என்று நீங்கள் ஏற்கும் போது, உலகம் நம்மை பாதிக்காது. இதை விட்டால் வேறு தீர்வு ஏதும் கிடையாது. யாருடனாவது மோதல் ஏற்பட்டது என்றால், அது நமது அஞ்ஞானத்தின் அறிகுறி. 40 Page #44 -------------------------------------------------------------------------- ________________ ஒரு சிறுவன் கல்லை வீசி, அது ஏற்படுத்திய காயத்தால் ரத்தம் பெருகுகிறது என்றால் என்ன செய்வீர்கள்? கோபப்படுவீர்கள் இல்லையா? நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பாதையில் மலை மீதிருந்து ஒரு கல் விழுந்து, அது உங்களுக்கு காயமேற்படுத்தினால் என்ன செய்வீர்கள்? கோபப்படுவீர்களா? இல்லையே, காரணம் என்ன? இங்கே மலையிலிருந்து கல் விழுந்தது, அங்கேயோ கல்லை சிறுவன் வீசினான், ஆனால் மலையிலிருந்து கல் உருண்டு விழுந்தது,யார் அந்தக் கல்லை உருட்டினார்கள்? புரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் வினா : எனக்கு மோதலில் ஈடுபட வேண்டும் என்று இல்லை ஆனால் எதிரில் உள்ளவர் வந்து என்னுடன் மோதலில் ஈடுபடும் போது நான் என்ன செய்வது? தாதாஸ்ரீ : இந்தச் சுவற்றோடு ஒருவர் மோதிக் கொண்டிருந்தால், எத்தனை நேரம் வரை அப்படி மோதிக் கொண்டிருப்பார்? சுவர் மீது மோதுவதால் காயம் ஏற்பட்டால், அப்போது சுவற்றை என்ன செய்வீர்கள்? தலையை வைத்து, சுவர் மீது மோதலில் ஈடுபட்டீர்கள், இப்போது சுவற்றுக்குத் தண்டனை அளிப்பீர்களா? இதை போல் உங்களோடு மோதலில் ஈடுபடும் நபரை, சுவராக கருதிக் கொள்ளுங்கள். அவர்கள் அனைவரையும் சுவர்களாக நீங்கள் கருதினால், எந்த கஷ்டமும் இருக்காது. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும். சுவற்றை திட்டுவதற்கு சக்தி உங்களிடம் இருக்கிறதா? அதே போல்தான் மற்ற மனிதர்களுடன் வீணாக கூப்பாடு போடுவதில் என்ன பயன்? அவர்களின் கையில் எந்த அதிகாரமும் இல்லை, ஆதலால் நீங்கள் சுவர் போல ஆகிவிடுங்கள். நீங்கள் உங்கள் மனைவியைத் திட்டிக் கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் அவருக்குள்ளேயும் பகவான் இருக்கிறார், அவர் நீங்கள் அவரை திட்டுவதாக அல்லவா கருதுவார்? அவர் உங்களைத் திட்டினார் என்றால், நீங்கள் சுவர்போல ஆகிவிட்டால், உங்களுக்குள்ளே இருக்கும் பகவான் உங்களுக்கு உதவியாக இருப்பார். ஒருவரிடத்தில் கருத்து வேறுபாடு கொள்வதும், சுவர் மீது மோதுவதும் இணையானவையே. இவை இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது. சுவர் மீது யார் மோதினாலும், எதிரில் இருப்பது என்னவென்று தெரியாத காரணத்தாலேயே மோதுகிறார். இப்படித்தான் எல்லோரும் சுவரை போல் தான் இருக்கிறார்கள். எதிரில் இருக்கும் தீர்வு அவருக்குப் புலப்படுவதில்லை , ஆகையால் வேறுபாடு ஏற்படுகிறது. தவறு மோதுபவர் மீது தானே, தவிர சுவர் மீது இல்லை , சரிதானே!! இந்த உலகிலும் பல சுவர்கள் இருக்கின்றன. சுவர் மீது மோத நேர்ந்தால், அதற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் மோத நீங்கள் இறங்கப் போவதில்லையே!!! கோபம், ஆணவம், வஞ்சம், 41 Page #45 -------------------------------------------------------------------------- ________________ பொறாமை, பேராசை எல்லாம் புலப்படாததாலேயே உண்டாகின்றன. இந்த உலகில் அனைத்துமே சுவர்கள் தான். சுவர் மீது மோதினால் யார் தவறு, யார் சரி என்று நிரூபிக்க செல்கிறீர்களா? அதுபோல் கருத்து வேறுபாடு ஏற்படுதவற்கு காரணமும் தீர்வு என்ன என்று புலப்படாமல் போவதுதான். மோதல்கள் ஆத்மசக்தியைக் குறைக்கின்றன உங்கள் ஆத்மசக்திகள் முழுவதையும் ஒன்று குறைக்கிறது என்று சொன்னால், அது மோதல்கள் தாம். சற்று மோதினாலும், அவ்வளவு தான். அடுத்தவர் நம்மோடு மோதினால் நாம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்பாட்டை இழந்து மோதலில் ஈடுபடக் கூடாது. மோதல் மட்டும் இல்லாது போனால், மனிதன் மோக்ஷம் அடைவான். ஒருவர் "நான் மோதலில் ஈடுபட மாட்டேன்” என்பதை மட்டும் கற்றுக் கொண்டு செயல்படுத்தினாரேயானால், அவருக்குஎந்த குருவின் தேவையும் இருப்பதில்லை. ஒன்றிரண்டு பிறவிகளில் அவர் நேரே மோக்ஷம் அடைந்து விடுவார். அடுத்தோரிடத்தில் எக்காரணம் கொண்டும் "மோதலில் ஈடுபட மாட்டேன்” என்ற உறுதிப்பாட்டை ஒருவர் மேற்கொண்டு கடைப்பிடிக்கத் தொடங்கினால், அது தான் சரியான நம்பிக்கையான "சமகித்” (மெய்யான நோக்கம்) என்பதன் தொடக்கம். கடந்த பிறவியில் மோதல்கள் காரணமாக இழந்த அனைத்து சக்திகளும் இப்போது உங்களிடம் மீண்டும் வந்து குடிகொள்ளும். ஆனால் இப்போது புதிய மோதல்களில் நீங்கள் ஈடுபட்டால், அவையனைத்தும் உங்களை விட்டுச் சென்று விடும். நீங்கள் மோதல்களைத் தவிர்த்தால், சக்திகள் விடாமல் அதிகரித்து கொண்டே இருக்கும். உலகில் மோதல் ஏற்படக் காரணமாக இருப்பது வஞ்சம் என்ற பழிவாங்கும் உணர்வு. இது தான் உலகின் மூலக்காரணமாக இருக்கிறது. யார் தனது பழிவாங்கும் உணர்வையும், மோதல் உணர்வையும் முற்றிலும் நிறுத்திவிட்டார்களோ, அவர் மோக்ஷம் அடைந்து விடுவர். அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்; வஞ்சமும், பகையும் மனதிலிருந்து விடை பெற்றால், அன்பு பிறக்கும். அன்பு தடையாக இல்லை, பழிவாங்கும் எண்ணம் விடைபெற்றால் அன்பு உருவாகும். இயல்பறிவு எல்லாவிடங்களிலும் பொருந்தும் ஒருவர் உங்களோடு மோத முயல்கிறார், ஆனால் நீங்கள் அவருடன் மோதலில் ஈடுபடவில்லை எனும் போது, "இயல்பறிவு” உண்டாகிறது. மாறாக நீங்கள் அவருடன் மோதினீர்கள் என்று சொன்னால், உங்கள் இயல்பறிவு உங்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும். உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் மோதக் கூடாது. மற்றவர்கள் உங்களிடம் மோதினால் உங்களின் இயல்பறிவு அதிகரிக்கிறது. மோதல் சமயங்களில் நீங்கள் எப்படி 42 Page #46 -------------------------------------------------------------------------- ________________ நடந்து கொள்ள வேண்டும் என்பதை, உங்கள் ஆத்மா உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறது, இதுதான் ஆத்மாவின் சக்தி; ஒருமுறை அப்படி உங்களுக்குக் காட்டி விட்டால், அந்த ஞானம் உங்களை விட்டு விலகாது. இப்படி மேலும் மேலும் நீங்கள் செய்து பழகும் போது, உங்களின் "இயல்பறிவு” அதிகரிக்கும். ஒரு சுவற்றைப் பற்றி தப்பான எண்ணம் வந்தால், பெரிய பாதகம் இல்லை, ஏனென்றால் பாதிப்பு ஒருதலைப் பட்சமானது. ஆனால் ஒரு உயிருள்ள ஜீவனை பற்றி தப்பான எண்ணம் கொண்டால், பாதிப்பு இருதரப்பினருக்கும் ஏற்படும். ஆனால் பின்னர் நாம் ப்ரதிக்ரமணத்தில் ஈடுபட்டால், அனைத்துத் தவறுகளும் மறைந்து போகும். ஆகையால் எங்கெல்லாம் மோதல்கள், உரசல்கள் ஏற்படுகின்றனவோ, ப்ரதிக்ரமணத்தில் ஈடுபடுங்கள், மோதல்கள் முடிவடைந்து விடும். யார் ஒருவர் மோதலில் ஈடுபடுவதில்லையோ, அவருக்கு மூன்றே பிறவிகளில் மோக்ஷம் சித்திக்கும், இதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். மோதல் ஏற்பட்டு விட்டால், உடனடியாக பிரதிரமணத்தில் ஈடுபட்டு விடுங்கள். மோதல்கள் ஏற்படுவது இயல்பு தான். பாலியல் தொடர்புகள் இருக்கும் வரை இப்படிப்பட்ட மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும். பாலுறவும்,புலனின்பங்களும் தான் மோதல்களுக்கான வேரடிக் காரணம். யார் பாலியல் உணர்வுகளை வென்றவர்களோ, அவர் அனைத்தையும் வென்றவராவார். அவரை தோற்கடிக்கவே முடியாது, அப்படிப்பட்டவர், பார்ப்போர் அனைவரையும் கவர்கிறார். எது நடந்ததோ, அது நியாயமே இயற்கை நீதி நிறைந்ததே இயற்கை என்றுமே நீதி தவறாதது. ஒரு கணம் கூட, அதில் அநீதியைக் காண முடியாது. எந்தக் காலத்திலும் இயற்கை, நீதி தவறி நடந்ததே இல்லை. நீதிமன்றத்தில் அநீதி இழைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இயற்கை அநியாயமாக நடந்ததே கிடையாது. இயற்கையின் நீதியை நீங்கள் புரிந்து கொண்டால், "எது நடந்ததோ, அது நியாயமே” என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். அப்போது, நீங்கள் இந்த உலகிலிருந்து விடுதலை அடைவீர்கள்; மாறாக இயற்கையிடம் சற்றுக்கூட அநீதி இருப்பதாக நீங்கள் கண்டால், அது தான் உங்கள் துயரங்களுக்கான காரணமாக அமையும். இயற்கை என்றுமே நீதி நிறைந்தது என்பதை, புரிந்து ஏற்பதன் பெயர் தான் "ஞானம்”. "இருப்பதை அப்படியே”,ஏற்றுக் கொள்ளாதது அஞ்ஞானம் (அறியாமை). 43 Page #47 -------------------------------------------------------------------------- ________________ நீதியைத் தேடி மனிதன் அலையும் போது தான் உலகில் போர்களும், போராட்டங்களும், பூசல்களும் ஏற்பட்டிருக்கின்றன. உலகம் நீதிமயமானது. ஆகையால் இந்த உலகில் நீதி எங்கே, எனத் தேடி அலையாதீர்கள். எது நடந்ததோ, எது நடக்கிறதோ, அவையனைத்துமே நீதி தான், நியாயம் தான். இந்த நீதியைத் தேடித் தான் மக்கள் சட்டங்களையம், நீதிமன்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்; ஆனால் அவற்றில் நீதி இருப்பதாக நினைத்துக் கொண்டால், அது நம் முட்டாள்தனம். மாறாக, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும், அதுவே நீதி. நியாயம், அநியாயம், அது பூர்வ ஜென்ம கர்ம பலன்களாகும். நாம் அவற்றுடன, இந்த ஜென்மத்தின் கணக்கை ஒப்பிட்டு நியாயத்தை தேடுகிறோம். நீங்கள் பிறகு நீதிமன்றம் தானே செல்ல வேண்டும்! நீங்கள் ஒருவரை ஒரு முறை திட்டினால், அவர் உங்களை 2-3 முறை திட்டுவார். ஏனென்றால் அவர் மனதில் உங்களுக்கு எதிராக நிறைய கோபம் இருக்கிறது. அப்போது மனிதர்கள் என்ன சொல்வார்கள்? இவர் ஒருமுறை தானே திட்டினார், அவர் ஏன் 3 முறை திட்டினார் என்பார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது, இல்லையா? நம்மை அவர் 3 முறை திட்டியதின் காரணம் என்ன? பழைய கணக்கு முழுவதையும், பாக்கி இல்லாமல் கொடுப்பது தான் இயற்கையின் நீதி. ஒரு பெண் தன் கணவருக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால், அதுவும் இயற்கையின் நியாயம். மனைவி மோசமானவள் என்று கணவன் கருதுகிறார், மனைவியும் தன் கணவன் மோசமானவன் என்றே கருதுகிறார். ஆனால் இந்த நிகழ்வுகள் முழுவதும் இயற்கையின் நீதி. இந்தப் பிறவியின் கடும் உழைப்பின் பலன் இது, ஆனால் கடந்த பிறவியின் கணக்கு வேறு இருக்கிறது. நம் முன் ஜென்ம கணக்கு பாக்கி இருக்கிறது, இல்லையெனில் நம்முடைய இருப்பில் இருப்பதை யாராலும் எதையும் எடுக்க முடியாது. யாரிடத்திலும் எதையும் எடுத்துச் செல்லும் சக்தி கிடையாது, அப்படி ஏதாவது எடுக்கப்பட்டால், அது முந்தைய கணக்கின் காரணமாகவே. இந்த உலகில் மற்றவர்களுக்கு தீயது விளைவிக்க கூடிய ஒருவர் இதுவரை பிறந்ததில்லை. இயற்கை அந்த அளவு துல்லியமாகவும், விதிமுறைக்குட்பட்டும் உலகை செயல்படுத்துகிறது. விளைவுகளைக் கொண்டு காரணத்தை அறிய முடியும் அனைத்தும் விளைவுகள் தாம்; தேர்வுகளின் முடிவுகளைப் போன்றவை. கணக்குப் பாடத்தில் 95 மார்க்குகளும், ஆங்கிலப் பாடத்தில் 25 மதிப்பெண்களும் கிடைத்திருக்கிறது; இவற்றிலிருந்து நீங்கள் எங்கே தவறு செய்திருக்கிறீர்கள் என்று புரியாதா? இதைப் போலவே வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளைக் கொண்டு, இதன் காரணங்கள் நமது தவறுகளே 44 Page #48 -------------------------------------------------------------------------- ________________ என்பதைப் புரிந்து கொண்டு விட முடியும். கடந்த பிறப்பின்,காரணங்கள் தான் இப்பிறப்பின் அனைத்து நிகழ்வுகளும். பலர் பயணிக்கும் பாதையில் முட்கள் சிதறிக் கிடக்கின்றன, ஆயினும் கூட முட்கள் அப்படியே கிடக்கிறது, அகற்றப்படவில்லை, அவை பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் காலணிகளை அணிந்து கொள்ளாமல் வீட்டை விட்டு அகல்வதேயில்லை; ஆனால் ஒரு நாள் யாரோ ஒருவர்,"திருடன், திருடன்” என்று கூவுகிறார், அப்போது நீங்கள் காலணிகள் ஏதும் அணியாமல் வெறும் காலுடன் வெளியே செல்லும் போது உங்கள் கால்களில் முட்கள் குத்துகின்றன. நாம் அனுபவிக்க வேண்டிய பழைய கணக்கு. இது உங்கள் கணக்கின் இருப்பின் பலன். ஒருவர் உங்களைத் துன்பப்படுத்தினால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள், உங்கள் கணக்கில் இருப்பு வையுங்கள். நீங்கள் முன்பு கொடுத்ததை இப்போது திரும்ப பெற்று கொள்ள வேண்டும். ஏனென்று சொன்னால், காரணமே இல்லாமல் யாரும் மற்றவருக்கு துக்கம் கொடுப்பதில்லை, அப்படிப்பட்ட ஒரு விதியே இங்கு இல்லை. இதன் பின்னணியில் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணம் இருக்கத் தான் செய்யும், ஆகையால் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். பகவானிடத்தில் எப்படி இருக்கும்? பகவான் நியாய ரூபமானவரும் அல்ல, பகவான் அநியாயரூபமானவரும் அல்ல. யாருக்கும் துக்கம் ஏற்படக் கூடாது, இதுவே பகவானின் உரையாகும். நியாயம் அநியாயம் எல்லாம் மக்களின் மொழி. கள்வனது (திருடன்) மொழி, களவு புரிதல்; தானம் அளித்தல், தனது மொழியாக, தானமளிப்பவர் கருதுகிறார். இது மக்களின் குரலே, பகவானின் மொழி அல்ல. பகவானிடத்தில் இப்படிப்பட்டவை எதுவுமே கிடையாது. “எந்த ஜீவராசிக்கும் துக்கம் ஏற்படுத்தக் கூடாது” என்பது தான் பகவானின் அறிவுரை, இதுவே எனது ஆணையும் கூட. நம்முடைய தவறுகளின் காரணமாக மற்றவர்களை அநீதியாக காண்கிறோம் நம்மிடம் இருக்கும் தவறுகள் காரணமாகவே உலகம் முழுவதும் சீரில்லாதது போலத் தெரிகிறது. உலகம் ஒரு கணம் கூட சீரிழந்ததே இல்லை, எப்போதும் நியாயத்திலேயே அமைந்திருக்கிறது. இங்கிருக்கும் நீதிமன்றங்களின் நியாயத்தில் வித்தியாசங்கள் காணப்படலாம், அவை தவறாகக் கூட நீதி வழங்கலாம், ஆனால் இயற்கையின் நீதியில் எந்த மாறுபாடும் காணப்படுவதில்லை. 45 Page #49 -------------------------------------------------------------------------- ________________ ஒரு கணம் கூட அந்த நியாயத்தில் தவறு ஏற்படுவதில்லை. அப்படி அநியாயமாக இருந்தால், ஒருவர் கூட மோக்ஷம் அடைய முடியாது. நல்லவர்களுக்கு, துன்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது, இல்லையா? ஆனால் உள்ளபடியே யாராலும் அப்படி துன்பங்களை மற்றவருக்கு ஏற்படுத்த முடியாது. ஏனென்றால், நீங்கள் மற்றவருடைய வாழ்க்கை நிகழ்வுகளில் குறுக்கிடாமல் இருந்தால்,உலகின் எந்த சக்தியாலும், உங்களை தீண்ட முடியாது. இவையனைத்து பிரச்சினைகளும், உங்கள் வினையின் பயனே. உலகம் நியாயம் நிறைந்தது இந்த உலகு பொய்மையானது இல்லை. உலகம் நியாயரூபமானது. இயற்கை எக்காலத்திலும் அநியாயமாக செயல்பட்டதில்லை. இயற்கை ஓரிடத்தில் மனிதனை வெட்டுகிறது, விபத்துக்குள்ளாக்கிறது, இவையனைத்தும் நியாயரூபமே. நியாயத்துக்கு புறம்பாக இயற்கை நடந்ததே இல்லை. தவறான புரிதல் காரணமாக ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள், வாழ்க்கைவாழும் கலையும், அவர்களுக்கு தெரிவதில்லை. எப்போது பார்த்தாலும் கவலைமயமாக இருக்கிறார்கள். ஆகையால் நடப்பவை அனைத்தும் நியாயமானவையே என்று ஏற்றுக் கொள்ளுங்கள். "நடப்பவை அனைத்தும் நியாயமே” என்பதைப் புரிந்து ஏற்று கொண்டு விட்டால், உலகம் என்ற கடலைக் கடந்து விடலாம். இந்த உலகில் ஒரு கணம் கூட அநியாயம் நடப்பதில்லை, நியாயமே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நம் புத்தயானது தான் நம்மை சிக்க வைத்து, இதை "எப்படி நியாயம் என்பீர்கள்?” என்று கேட்கத் தூண்டுகிறது. ஆகையால் அடிப்படை விஷயமாக நான் கூற விரும்புவது என்னவென்றால், இவை அனைத்தும் இயற்கை சார்ந்தது, புத்தியின் பிடியிலிருந்து நீங்கள் விலகி விடுங்கள் என்பது தான். புத்தி தான் இப்படிப்பட்ட எண்ணங்களின் பிடியில் நம்மை சிக்க வைக்கிறது. ஒரு முறை இயற்கையின் நீதி புரிந்து கொண்ட பிறகு, புத்தியின் அறிவுரையை மதிக்காதீர்கள். நடப்பவை அனைத்தும் நியாயமானவையே. நீதிமன்றத்தில், நியாயம் தவறுதலாகக் கூட அமையலாம், ஏறுக்குமாறாகக் கூட இருக்கலாம், ஆனால் இயற்கையின் நியாயத்தில் எந்த தவறும் இருக்காது, எப்பொழுதும் துல்லியமானதாகும். நியாயத்தை தேடும் வேலையில் வாழ்க்கை கழிந்து விடுகிறது. நான் இவருக்கு என்ன தீங்கிழைத்தேன், என்னை ஏன் இப்படி துன்பப்படுத்துகிறார்? என்று மனிதன் மனதில் கேள்வி எழலாம். நியாயம் தேடுவதற்கு சென்ற அனைவருக்கும் தோல்வியே மிஞ்சியது, ஆகையால் நியாயத்தைத் தேடி அலையாதீர்கள். இந்தத் தேடலில் உங்களுக்குத் தான் அழிவு ஏற்படுமே தவிர, தீர்வு பிறக்காது. கடைசியில் நீங்கள் நின்ற இடத்திலேயே, எந்த 46 Page #50 -------------------------------------------------------------------------- ________________ முன்னேற்றமும் காணாது, நின்று கொண்டே இருக்க நேரும். இது வெறும் அஹங்காரத்தின் வெளிப்பாடு. தவறான நம்பிக்கைகளின் முற்றுகை தான் மோக்ஷ மார்க்கம் அனைத்து கேள்விகளின் முடிவுதான் மோக்ஷ மார்க்கம். புத்தி உங்களுக்கு எப்பொழுது எல்லாம் நியாயத்தை தேடுகிறதோ, அப்பொழுது எது நடக்கிறதோ அதுவே நியாயம், என்று அதனிடம் கூறுங்கள். புத்தி நியாயத்தேடலில் ஈடுபடும், இவர் என்னை விடச் சிறியவர், எனக்கு மரியாதை அளிப்பதில்லை என்று. அவர் மரியாதை அளித்தாலும் நியாயம், அளிக்கவில்லை என்றாலும் நியாயமே. எந்த அளவுக்கு புத்தி குறைவாக வாதம் புரிகிறதோ, அந்த அளவுக்கு புத்தி விகல்பம் இல்லாததாகும். நியாயம் தேடிப் புறப்பட்டால், உங்கள் முன்பு அதிகத் தேர்வுகளும் மாற்றுக்களும் ஏற்படும். இயற்கையின் நீதி, மாற்றுக்கள் இல்லாத நிலையை நோக்கிக் கொண்டு செல்லும். நடந்து முடிந்தவை தான் நியாயம். இயற்கை, அனைத்துக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. மேலும், மத்தியஸ்தம் செய்ய ஐவரை நியமித்தால், தீர்ப்பு அவனுக்கு எதிராகவே முனையும், துயரங்கள் மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அவர் யார் கூறுவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார். அந்த வகையில் அவரது பிரச்சனைகள் அதிகரித்து, அவர் மேலும் மேலும் பிரச்சனைகளின் வலையில் வசமாக சிக்கிக் கொள்ள நேரும், அவதிப்பட நேரும். மாறாக அவர் முதலிலிருந்தே நடந்து முடிந்ததை, நீதியாக ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும். உ இயற்கை என்றுமே நீதிப்படியே நடந்து வருகிறது, நிரந்தரமாக நியாயம் அளித்து வருகிறது; ஆனால் இதற்கான சான்று விளக்கங்களை, அதனால் அளிக்க இயலாது. இதற்கான சான்று விளக்கங்களை, ஒரு ஞானியால் மட்டுமே அளிக்க இயலும். எப்படி இது நியாயமாகும் என்று அவரால் மட்டுமே கூற முடியும். உங்கள் வினாக்கள் அனைத்துக்கும் விடை கிடைத்தால், நீங்கள் சுதந்திர மனிதன். பாதிக்கப்படுபவரின் தவறே இயற்கையின் நீதிமன்றத்தில்..... உலகில் பல நீதிபதிகள் இருக்கின்றார்கள், ஆனால் கர்ம உலகத்தில், ஒரே ஒரு இயற்கை நீதி தான் இருக்கிறது: "பாதிக்கப்படுபவரின் தவறே”. இது ஒன்றே நியாயம், இதன் வழியே, அனைத்துலகம் இயங்குகிறது, மாறாக, உலக நீதியோ, மாயையான ஒன்று. இது தான் உலகை நீடிக்கச் செய்கிறது. 47 Page #51 -------------------------------------------------------------------------- ________________ ஒரு கணம் கூட, உலகம் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதில்லை. யாருக்கு நற்பலன்கள் அளிக்க வேண்டுமோ, அவர்களுக்கு வெகுமதி அளிக்கிறது, யாருக்குத் தண்டனை அளிக்க வேண்டுமோ, அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது. உலகம் நியாயத்துக்கு வெளியே இருப்பதில்லை. நியாயத்திலேயே அமைந்திருக்கிறது. முழுமையான நியாயவடிவானதாக இருக்கிறது. ஆனால், தன்னுடைய அஞ்ஞான கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முடியாததால், இது புலப்படாது, புரியாது. தூய்மையான கண்ணோட்டம் அடைந்தால் நியாயம் புலப்படும், புரியும். சுயநலக் கண்ணோட்டம் இருந்தால், நியாயம் எப்படி புலப்படும்? நாம் ஏன் பாதிக்கப்படுகிறோம்? நாம் ஏன் துன்பப்படுகிறோம், இதைத் தெரிந்து கொள்ள முயலுங்களேன்? நாம், நமது தவறுகளால் கட்டுண்டு கிடக்கிறோம், மற்றவர்கள் நம்மை வந்து கட்டிப் போடவில்லை. இந்தத் தவறுகள் சிதையும் போது, நாம் முக்தர்கள் ஆகிறோம். நாம் இயல்பாகவே முக்தர்கள் தான் என்றாலும், தவறுகள் காரணமாகவே, நாம் துன்பத்தில் உழல வேண்டியிருக்கிறது. உலகின் இயல்பு, பற்றிய ரகசியஞானம், மக்களின் இலட்சியமாக இருப்பதே இல்லை, இதனால் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. அஞ்ஞானம் பற்றிய தகவல்கள், அனைவருக்கும் தெரிந்து தான் இருக்கிறது. ஜேப்படித் திருட்டு உங்களிடம் செய்யப்பட்டிருந்தால், யாருடைய தவறு? இவரிடம் ஜேப்படித் திருட்டு ஏன் நடக்கவில்லை, உங்களிடம் மட்டும் ஏன் நடந்தது? யார் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? "பாதிக்கப்படுபவரின் தவறு” தான் காரணம். வேதனைப்படுவது தன்னுடைய தவறின் காரணத்தால் யார் துக்கத்தை அனுபவிக்கிறார்களோ, அது அவர்களின் தவறு காரணமாகவே, யார் சுகத்தை அனுபவிக்கிறார்களோ, அது அவர்களுக்குக் கிடைத்த வெகுமதி. ஆனால், மாயை காரணமாக, நாம் கருவியாக பயன்படுபவரைப் பிடித்து நொந்து கொள்கிறோம். பகவானின் மெய்யான சட்டம், என்னவென்றால்,யாருடைய தவரோ அவரே பிடிக்கப்படுவார். இந்தச் சட்டம் துல்லியமானது, இதை யாராலும் மாற்ற முடியாது. யாருக்கும் சுகதுக்கங்களை ஏற்படுத்தும் எந்த ஒரு அதிகாரமும், இந்த உலகில் இல்லை . கண்டிப்பாக நம்மிடத்தில் தவறு ஏதோ இருக்க வேண்டும், அப்போதுதான் மற்றவர்கள் குறை கூறுவார்கள், அல்லவா? அதனால் அந்தத் தவற்றை நாம் ஏன் அழித்து விடக் கூடாது? இந்த உலகில், ஒரு உயிர் மற்றதொரு உயிருக்கு தீங்கேதும் செய்துவிட 48 Page #52 -------------------------------------------------------------------------- ________________ முடியாது, அத்தனை சுதந்திரம் இங்கே இருக்கிறது; அப்படியிருந்தும் தீங்கு செய்கிறது என்றால், இது நமது முந்தைய தவறுகளின் விளைவுகளே. இந்தத் தவறுகளை திருத்தி விட்டால், மிச்சம் மீதி என்று எதுவும் இருக்காது. இந்த உலகம் துக்கத்தை அனுபவிக்க ஏற்பட்ட ஒன்று அல்ல, சுகத்தை அனுபவிக்க உண்டானது. யாருடைய கணக்கில் எத்தனை வரவு இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தான் அனுபவிக்க முடியும். சிலர் வெறும் சுகத்தை மட்டுமே அனுபவிக்கிறார்கள், இது எதனால்? சிலர் வெறும் துக்கத்தையே அனுபவிக்கிறார்கள், இது எதனால்? இது அவரவர் கொண்டு வந்திருக்கும் கணக்கு இருப்பின்படி நடக்கிறது யாரெல்லாம் துக்கப்படுகிறார்களோ, அது அவர்கள் செய்த தவறுகளின் விளைவால் தான், மற்றவர்களின் தவறு அல்ல. யார் துக்கம் தருகிறார்களோ, அவர்கள், உலக கண்ணோட்டத்தின்படி தவறு செய்தவர்கள்; ஆனால் பகவானின் சட்டத்தின்படி, வேதனை படுபவர்களே தவறு செய்தவர்கள். விளைவுகள், நமது தவறுகளின் காரணமாகவே நாம் துக்கம் அனுபவிக்கும் போதெல்லாம், அது நமது தவறுகளின் விளைவுகளே. நமது தவறு இல்லை என்றால், நாம் துக்கம் அனுபவிக்கவே முடியாது. நமக்கு சற்றேனும் துக்கத்தை அளிக்க கூடியவர், இந்த உலகில் யாருமே இருக்க முடியாது. அப்படியே ஒருவர் துக்கம் அளித்தால், அது நமது தவறே ஆகும். அடுத்தவரின் தவறு இதில் ஏதும் இல்லை , அவர் கருவியாக மாத்திரமே இயங்குகிறார். ஆகையால், நாம் அனுபவிப்பது நமது தவறுகளின் விளைவே. "வேதனை படுபவரின் தவறே” கணவன் மனைவிக்கு இடையே, கடுமையான சண்டை ஏற்படுகிறது, பிறகு இருவரும் படுத்து உறங்குகிறார்கள்; அப்போது நீங்கள் சத்தம் போடாமல் அவர்கள் இருவரையும் கவனித்தீர்கள் என்று சொன்னால், மனைவி அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பார், ஆனால் கணவனோ அமைதியிழந்து, இப்படியும் அப்படியுமாக திரும்பித் திரும்பிப் படுத்துக் கொண்டிருப்பார். இதிலிருந்து கணவனின் தவறுதான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். கணவன் குறட்டை விட்டுத் தூங்கும் போது, மனைவி இப்படியும் அப்படியுமாகத் திரும்பித் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தால், மனைவி தான் தவறு செய்திருக்கிறாள் என்றாகிறது. தவறு செய்தவர்கள், அவதிப்படுவார்கள். இது மிகவும் ஆழமான ஒரு அறிவியல். உலகம் எப்போதுமே கருவியாக இருப்பவரையே, குறை சொல்லும் இயல்புடையது. Page #53 -------------------------------------------------------------------------- ________________ பகவானின் சட்டம் என்ன? எந்த ஒரு காலகட்டத்திலும், எந்த ஒரு இடத்திலும், யார் அனுபவிக்கிறார்களோ அவர் தான் தவறிழைத்தவர், என்று கடவுளின் சட்டம் உரைக்கிறது. ஜேப்படித் திருடன், திருடிய பிறகு சந்தோஷமாக இருக்கிறான், அவன் இனிப்புகளைத் தின்று கொண்டிருக்கிறான், ஹோட்டலில் சிற்றுண்டி உண்டு, தேநீர் அருந்தி ஆனந்தமாக இருக்கிறான்; அதே வேளையில், பணத்தைப் பறி கொடுத்தவர் துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அதனால் துக்கம் அனுபவிப்பவருடைய தவறு தான். இவர் முன்பு எங்கேயாவது களவு புரிந்திருக்கலாம், இன்று பிடிப்பட்டிருக்கிறார், வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார். இயற்கையின் நீதியில், இவர் தான் கள்வன். ஆனால் திருட்டு புரிந்தவன், பிடிபடும் போது, திருடன் என்று பழிக்கப்படுவான். அடுத்தவரிடத்தில் தவறைக் காண்கிறது உலகம், இப்படிச் செய்யும் போது, நமது பிழைகள் இரட்டிப்பாகி, வாழ்க்கைகளில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள் என்றால், பிரச்சனைகள் குறையத் தொடங்கும். இவ்வுலகின் நீதி என்னவென்றால், கண்களால் காண்பதையே, தவறு என்பது. ஆனால் இயற்கையின் நீதி என்னவென்றால், யார் வேதனை படுகிறார்களோ, அவர்களின் தவறு. சற்று கூட யாருக்கும் துக்கம் அளிக்காத நிலையில், மற்றவர்கள் உங்களுக்கு கொடுக்கும் துக்கத்தை அமைதியாக ஏற்று கொண்டால், உங்களின் கடந்தகாலக் கணக்குகள் முடிவுக்கு வரும், நீங்கள் விடுபடுவீர்கள். கர்மத்திலிருந்து விடுதலை அளிப்பவர் உபகாரி உலகில் யாருடைய தவறும் இல்லை, தவறை கண்டுபிடிப்பவரின் தவறுதான். அவரவர், தத்தமது கர்மவினைகளின் பலன்களையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது குற்றங்களைப் புரிகிறார்கள் என்பது இல்லை. அவர்கள் இன்று அனுபவிப்பவை எல்லாம் கடந்த பிறவியின் பலாபலன்களே. இன்று அவர் அதற்கு வேண்டி வருத்தப்படலாம், ஆனால் முந்தய ஒப்பந்தத்தின் பலன் தான். கர்மபலனை எதிர் கொண்டே ஆக வேண்டும். மருமகள், மாமியாரிடம் சண்டை போட்ட பிறகு கூட, சந்தோஷமாக இருக்கிறார், ஆனால் மாமியார் தான் வேதனை படுகிறார் என்றால், தவறு மாமியாருடையது தான். உங்கள் ஓரகத்தியோடு மோதிய பிறகு நீங்கள் துக்கம் அனுபவிக்க நேர்ந்தால், தவறு உங்களுடையது தான்; நீங்கள் அவருடன் மோதாமல் இருந்த போதும், அவர் உங்களுக்கு துக்கம் அளித்தால், கடந்த பிறவியின் பாக்கி செலுத்தப்படுகிறது. கணக்கில் வராதது என்ற ஒன்று, இந்த உலகத்தில் கிடையவே கிடையாது. முற்பிறவி கணக்கு இல்லையென்றால், 50 Page #54 -------------------------------------------------------------------------- ________________ இருவரின் கண்களை கூட சந்தித்து கொள்ளமுடியாது. நீங்கள் யாருக்கெல்லாம் என்னவெல்லாம் கொடுத்தீர்களோ, அத்தனைக்கத்தனை உங்களுக்கு திரும்பக் கிடைத்தே தீரும்; அப்போது மகிழ்வோடு அவற்றை ஏற்றுக் கொண்டு, "அப்பாடா, கணக்கு தீர்ந்து கொண்டிருக்கிறதே” என்று சந்தோஷப் பெருமூச்சு விடுங்கள். இல்லையென்றால், மீண்டும் தவறு செய்தால், மீண்டும் துன்பப்பட நேரும். நாம் நமது தவறுகளின் விளைவுகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறோம். யார் கல்லெறிந்தார்களோ, தவறு அவருடையது அல்ல, கல் யார் மீது பட்டதோ, அவருடைய தவறு தான். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் எந்தவிதமான குறையோ, தவறுகளோ உங்களை பாதிக்கவில்லை என்றால், தவறு உங்களுடையது அல்ல; மாறாக பாதிப்பு ஏற்பட்டால், தவறு உங்களுடையது, என்று நீங்கள் உறுதியாக மனதில் கொள்ளுங்கள். இந்த வகையில் இதை ஆராயுங்கள் தவறு யாருடையது? யார் வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்காரன் தான் கையால், பத்து கண்ணாடி தேநீர்க் கோப்பைகளை உடைத்து விட்டால், வீட்டில் இருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா,மாட்டார்களா? வீட்டில் உள்ளவர்களில் குழந்தைகள் இருப்பார்கள், அவர்களுக்கு கவலையேதும் இருக்காது. ஆனால் அவர்களின் பெற்றோருக்கு கோபம் ஏற்படுகிறது; அதிலும் கூட தாய் தூங்கிவிடுகிறார். ஆனால் தனக்கு ஏற்பட்ட இழப்பை, தந்தை கணக்கிட்டு கொண்டே இருப்பார். பத்தைந்து என்றால் 50 ரூபாய் என்று நொந்து போகிறார். அவர் எச்சரிக்கையானவர் என்பதால், அதிகம் வேதனைபடுகிறார். இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம், யார் வேதனைபடுகிறார்களோ, அவர்களின் தவறு. இந்த வகையில் சூழ்நிலைகளை அலசி ஆராயும் போது, நீங்கள் ஆன்மீக முன்னேற்றம் அடைந்து, மோக்ஷத்தை அடைவீர்கள். வினா : நாம் என்ன தான் சிறப்பாக நடந்து கொண்டாலும், சிலர் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்களே!! தாதாஸ்ரீ : எதிரில் இருப்பவர்களுக்குப் புரியவில்லை என்றால், தவறு அவர்களுடையது அல்ல, உங்களுடையதே. மற்றவர்களிடம் தவறுகளைப் பார்ப்பது முற்றிலும் தவறானது. நம்மிடம் இருக்கும் தவறுகளின் காரணமாகவே, கருவியாக உள்ள ஒருவரை நாம் சந்திக்கிறோம். ஒரு உயிருள்ள கருவியானவரை, நொந்து கொள்கிறீர்கள், ஆனால் அதே உயிரில்லா கருவி ஒரு முள்ளாக இருந்தால், என்ன செய்வீர்கள்? நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வழியாகப் பயணிக்கிறார்கள், அவர்களுக்கு எந்தக் காயமும் படுவதில்லை; ஆனால் சந்தூபாய் நடக்கும் போது மட்டும் முள் குத்துகிறதே, ஏன்? "வ்யவஸ்தித் சக்தி”, (அறிவியல் ரீதியான சூழ்நிலை ஆதாரம்) மிகத் துல்லியமானது. 51 Page #55 -------------------------------------------------------------------------- ________________ யாரைக் குத்த வேண்டுமோ அவரையே முள் குத்தும். அனைத்துச் ஆதாரங்களும் ஒன்று சேர்ந்து, ஒரு சூழ்நிலை உண்டாகிறது. அதில் கருவியாக இருப்பவரை நொந்து என்ன பயன்? எப்படி எனது தவறுகளை நான் கண்டு அறிவது என்று, யாரேனும் என்னை கேட்டால், என் பதில் என்னவென்றால், எந்த சூழ்நிலைகளிலெல்லாம் வேதனைப்படுகிறீர்களோ? அது அனைத்தும் உங்கள் தவறுகள். நீங்கள் என்ன தவறு செய்து இருந்தீர்களானால், இப்படி வேதனை படவேண்டி இருக்கிறது? இந்த துன்பத்திற்க்கு காரணமான தன்னுடைய தவறுகளை கண்டறிய வேண்டும். அடிப்படைத் தவறு எங்கிருக்கிறது? தவறு யாருடையது? வேதனைபடுபவருடையது மட்டுமே. தவறு என்ன? "நான் சந்தூபாய்” என்று கருதுவது தான் தவறு. ஏனென்றால், இந்த உலகத்தில் யாரும் தவறு செய்தவர்கள் என்று இல்லை. ஆகையால் யாரும் குற்றவாளி இல்லை, இது தான் உண்மை. துக்கம் கொடுப்பவர் வெறும் கருவி மாத்திரமே. ஆனால் அடிப்படைத் தவறு நம்முடையது தான். யார் உங்களுக்கு துக்கம் அளிக்கிறாரோ அவரும் ஒரு கருவி தான்,யார் உங்களுக்கு நன்மை செய்கிறாரோ, அவரும் ஒரு கருவி தான். உண்மையில் பார்க்கப் போனால் அனைத்தும் நமது கடந்தகாலக் கணக்கின் விளைவுகளே. நம்முடைய தவறுகளை நாம் திருத்திக் கொள்ளும் வழி - பிரதிக்ரமணம் க்ரமணம் - அதிக்ரமணம் - ப்ரதிக்ரமணம் உலகில் தன்னிச்சையாக நடப்பவை அனைத்தும் க்ரமணம். இது இயல்பான அளவில் இருக்கும் வரையில் க்ரமணம், ஆனால் இதுவே மிகையாக,காயப்படும்படியாக நடக்கும் போது, இது அதிக்ரமணம். எப்போது ஒரு செயல் அதிகப்படியாக மாறத் தொடங்குகிறதோ, அதாவது மனம் வாக்கு உடலால், நாம் மற்ற உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தத் தொடங்குகிறோமோ, அப்போது அதிலிருந்து விடுபட, நாம் ப்ரதிக்ரமணம் செய்தாக வேண்டும்; அதாவது சுத்தம் செய்தல் வேண்டும், அப்போது தான் தூய்மையாகும். முந்தைய பிறவியின் வடிவமைத்தலின் காரணமாக, "அந்த மனிதனுக்கு 4 அறை கொடுக்க வேண்டும்” என்ற நோக்கத்தை நாம் நிறைவேற்றுகிறோம். இதை அதிக்ரமணம் என்று அழைக்கிறோம், ஆகையால் அதற்கு எதிராக பிரதிக்ரமணம் செய்ய வேண்டும். எதிரில் இருப்பவரின் "சுத்தாத்மாவை” நினைவில் கொண்டு, அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும். 52 Page #56 -------------------------------------------------------------------------- ________________ தவறான செயல் ஒன்றில் நீங்கள் ஈடுபட்டால், அதை அதிக்ரமணம் என்று அழைக்கிறோம். தவறான எண்ணம் உண்டானால்,அதைக் கறை என்கிறோம்,அது மனதை அரித்துக் கொண்டே இருக்கும். இதை விட்டொழிக்க, நாம் பிரதிக்ரமணத்தில் ஈடுபட வேண்டும் (அதாவது நினைவில் மீண்டும் கொண்டு வந்து, மன்னிப்புக்கோர வேண்டும், மீண்டும் மனம், வாக்கு, உடலால் அப்படிப்பட்ட செய்கையில் ஈடுபட மாட்டேன், என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்). இந்த பிரதிக்ரமணத்தால் எதிரில் இருப்பவருக்கும் உங்களைப் பற்றி இருக்கும் தவறான எண்ணம் மாறிவிடும். உங்கள் எண்ணம் நன்றாக இருந்தால், மற்றவர்களின் எண்ணமும் நன்றாக ஆகிவிடும். ஏனென்றால் ப்ரதிக்ரமணத்தில் எந்த அளவு சக்தி இருக்கிறது என்றால், புலி கூட நாயைப் போல மாறிவிடுகிறது. பிரதிக்ரமணம் எங்கே பயனளிக்கிறது? தவறான விளைவுகள் எழும்போது, இது பயனளிக்கிறது. ப்ரதிக்ரமணத்தின் சரியான புரிதல் அப்படியென்றால் ப்ரதிக்ரமணம் என்றால் என்ன? எதிராளி நம்மை அவமதிக்கிறார்,அப்போது இந்த அவமானத்துக்கான குற்றவாளி யார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவமானப்படுத்துபவர் குற்றவாளியா, அவமானத்தை அனுபவிப்பவர் குற்றவாளியா என்பதை நாம் முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவமானம் செய்பவர் நிச்சயமாக குற்றவாளி ஆக மாட்டார், அவர் ஒரு கருவி மாத்திரமே. நமது கர்மவினைகளின் வெளிப்பாடாகவே அவர் ஒரு கருவியாக அமைகிறார். அப்படியென்றால் தவறு நம்முடையது தான். சரி, ஏன் இந்த பிரதிக்ரமணம் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிராக உங்கள் மனதில் ஏதேனும் கோபதாபங்கள், வருத்தங்கள், எதிர்மறை உணர்வுகள் ஏற்பட்டால், இதைச் செய்ய வேண்டும். அவர் மீது மனதில் தவறான எண்ணம் தோன்றினால், ப்ரதிக்ரமணம் செய்ய வேண்டும். பிறகு யாரேனும் நம்மை திட்டினால் அதுவும் நம் கர்மபலன் தான். இந்த மனிதன் ஒரு கருவியானவன் தான். ஜேப்படி திருடன் ஒரு கருவியானவன் தான், கர்மபலன் நம்முடையது தான். கருவியாக செயல்படுபவனையே சாடுகிறோம், அது தான் சண்டையின் காரணம். நாள் முழுக்க நாம் ஈடுபடும் வேலைகளில், சற்று ஏதேனும் ஏறுக்குமாறாக நடந்து விட்டால், யாரோ ஒருவரிடத்தில் மன வேற்றுமை உண்டாகி விட்டது என்று நீங்கள் உணர்கிறீர்கள் இல்லையா? நாம் கொள்ளும் பரஸ்பரத் தொடர்புகளை க்ரமணம் என்று அழைக்கிறோம். க்ரமணம் அதாவது பரஸ்பரத் தொடர்புகள். யாரோ ஒருவரிடம் மன வேற்றுமை உண்டாகும் பட்சத்தில், நீங்கள் அவரிடத்தில் கடுமையான சொற்களைப் பயன்படுத்தினீர்களா, இல்லை தவறாக நடந்து கொண்டீர்களா என்பது தெரியுமா, தெரியாதா? இது எல்லாம் அதிக்ரமணம் என்று அழைக்கப்படும். 53 Page #57 -------------------------------------------------------------------------- ________________ அதிக்ரமணம் என்பது தவறாக நடந்து கொண்டது. தவறான திசையில் நாம் மேற்கொள்ளும் பயணம், இதைச் சரிசெய்ய நாம் நம் தவறை சரி செய்து கொண்டு, நன்றாக நடந்து கொள்வது, அது தான் ப்ரதிக்ரமணம் என்பது ப்ரதிக்ரமணம் செய்ய சரியான சுருக்கமான வழிமுறை வினா : ப்ரதிக்ரமணத்தில் என்ன செய்ய வேண்டும்? தாதாஸ்ரீ : மனம் - வாக்கு - உடல், பாவ்கர்மம் (காரண கர்மம்), திரவிய கர்மம் (சூட்சுமமாக வெளியாகும் கர்மம்), நோகர்மம் (மொத்தமாக வெளியாகும் கர்மம்), சந்தூபாய் மற்றும் சந்தூபாயின் பெயரின் மாயையிலிருந்து விலகி, உள்ள “சுத்தாத்மாவை” நினைவில் இருத்தி, "ஹே சுத்தாத்மா பகவானே! குரலை உயர்த்தி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறேன், உறுதி அளிக்கிறேன் மறுபடி இப்படி ஒரு தவறை நான் செய்ய மாட்டேன் அதற்கு சக்தியை எனக்கு அளியுங்கள்” என்று கூற வேண்டும். “சுத்தாத்மாவை” நினைவில் இருத்தியோ அல்லது "தாதாவை” நினைவில் இருத்தியோ, "இப்படிப்பட்ட ஒரு தவறு நிகழ்ந்து விட்டது” என்று உங்கள் தவறை ஏற்றுக் கொள்வது, அந்த தவறை அகற்றி விடுவது, அதன் பெயர் ஆலோசனா (விமர்சனம்), பிரதிக்ரமணம் என்றால், செய்த பிழையை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டு நிச்சயிப்பது, ப்ரத்யாக்யான் என்பது மீண்டும் அது போன்று தவறு நடக்காமல் இருக்க உறுதி எடுப்பது. எதிராளிக்கு நஷ்டம் ஏற்படுத்தும் செயலைப் புரிவது, அவருக்கு துக்கம் ஏற்படக் காரணமாக இருப்பது அனைத்தும் அதிக்ரமணம்; உடனடியாக அதற்கு பிரதிக்ரமணம், ப்ரத்யாக்யானம் செய்யப்பட வேண்டும். அப்படிப்பட்ட ப்ரதிக்ரமணால், வாழ்க்கை பயணம் இனிமையாக செல்லும், பிறகு மோக்ஷத்திற்கும் செல்வீர்கள்! பகவான் சொல்லி இருக்கிறார் அதிக்ரமணக்கு, பிரதிக்ரமணம் செய்தால் தான் மோக்ஷம் செல்ல முடியும். ப்ரதிக்ரமண் விதிமுறை தாதா பகவானை, ப்ரத்யக்ஷ சாக்ஷியாகக் கொண்டு (யாருக்கு எதிராக தவறிழைக்கப்பட்டிருக்கிறதோ அவரது பெயரைச் சொல்லி,) அவரது மனம், வாக்கு, உடல்; பாவ்கர்மம்-திரவியகர்மம்-நோகர்மம் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கும் சுத்தாத்மா பகவானே! உங்களை சாக்ஷியாகக் கொண்டு, இந்நாள் வரை என்னால் என்னவெல்லாம் (இந்த வாழ்க்கையில் முழுவதிலும் ஏற்பட்ட வஞ்சம்-ஆணவம்-மாயை-பேராசை, புலனின்பங்கள், வன்மம் போன்ற எதிர்மறை உணர்வுகளால் யாரையாவது துன்பம் கொடுத்து இருந்தால் அந்தத் தவறுகளை மனதில் நினைவு கொள்ளுங்கள்) தவறுகள் ஆனதோ, அவற்றுக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். மனப்பூர்வமாக நான் அவற்றுக்காக வருந்துகிறேன், என்னை மன்னித்தருளுங்கள். நான் மீண்டும் இப்படிப்பட்ட தவற்றினை 54 Page #58 -------------------------------------------------------------------------- ________________ எப்போதுமே செய்ய மாட்டேன், என்று உறுதி பூணுகிறேன். இதைச் செயல்படுத்த எனக்கு சக்தி வழங்குங்கள். இந்த வகையில் பிரதிக்ரமணம் செய்யும் போது வாழ்க்கையும் இனிமையாகிறது. மோக்ஷமும் அருகே வாய்க்கிறது. "அதிக்ரமணத்துக்கு எதிராக ப்ரதிக்ரமணம் செய்யும் போது தான் மோக்ஷ சாம்ராஜ்ஜியம் சித்திக்கும்” என்று பகவான் அருளியிருக்கிறார். (முக்கோயில்) த்ரிமந்திர் அமைப்பதால் பயன்கள் மகவான் மஹாவீரர், ஸ்ரீ க்ருஷ்ண பகவான், ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி போன்ற மஹா புருஷர்கள் தோன்றுகிறார்களோ, அப்போது அவர்கள் மத வேறுபாடுகளைக் கடக்க செய்து, மக்களை ஆத்ம தர்மத்தில் நிலைக் கொள்ளச் செய்கிறார்கள். ஆனால் நாளாவட்டத்தில், இந்த மஹாபுருஷர்கள் இல்லாத காரணத்தால், மெல்ல மெல்ல மக்களிடம் மதபேதங்கள் வேற்றுமைகள் ஏற்பட்டு, சுகமும் அமைதியும் தேயத் தொடங்கின. அக்ரம் விஞ்ஞானி பரம பூஜனீய ஸ்ரீ தாதா பகவான், மக்களை ஆத்மதர்மம் அடையச் செய்யும் அதே வேளையில், மதத்தில் நிறைந்திருக்கும் "நீயா நானா” என்ற போட்டா போட்டிகளிலிருந்து விலக்கி, மக்களை குறுகிய ஒருதலைப்பட்சமான கண்ணோட்டங் களிலிருந்து விடுக்க, ஒரு புதுமையான, புரட்சிகரமான முன்னெடுப்பை மேற்கொண்டார். இது பாரபட்சமில்லாத ஒரு அமைப்பை ஏற்படுத்துதல். மோக்ஷம் என்ற இலக்கை அடைய ஸ்ரீ மஹாவீரர் ஸ்வாமி பகவான், உலகிற்கு ஆத்ம ஞானம் அடையும் மார்க்கத்தைக் காட்டியருளினார். ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதோபதேசம் வாயிலாக அர்ஜுனனுக்கு "ஆத்மவத் சர்வபூதேஷூ”, (அதாவது அனைத்துலகும் ஆத்மமயமானது) என்று உபதேசித்து சரியான பார்வையை அளித்தார். ஜீவனுக்கும் சிவனுக்கும் இடையேயான வேறுபாட்டை அளிக்கும் போது நாம் சிவசொரூபமாக மாறி, சிதானந்த ரூபம்; நானே சிவன்,நானே சிவன் என்ற நிலையை எட்டுகிறோம். இதே போல அனைத்து தர்மங்களின், மஹான்களின் இதயகமலத்தில் ஆத்மஞானம் பெறுவதே இலக்காக இருந்தது. இந்த விஷயத்தை நாம் புரிந்து கொண்டு விட்டேமாமேயானால், அதன் பிறகு முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்குவோம். ஒவ்வொருவரையும் நாம் ஆன்மீகப் பார்வை கொண்டு பார்க்கையில், ஒருமைப்பாடு உருவாகும். எந்த ஒரு மதத்தையும் விமர்சனம் செய்யத் தேவையில்லை, எந்த ஒரு மதத்தின் ஆதாரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற உணர்வு நீடித்திருக்கும். 55 Page #59 -------------------------------------------------------------------------- ________________ பரம பூஜனீய தாதா பகவான் (தாதாஸ்ரீ) அடிக்கடி கூறுவார், தெரிந்தோ தெரியாமலோ யாரையாவது அவதூறு செய்திருந்தால், அவர்கள் அனைவரையும் ஆராதனை செய்து விட்டால், செய்யப்பட்ட அனைத்து அவதூறுகளும் அழிந்து விடும். இப்படிப்பட்ட பாரபட்சிமில்லாத த்ரிமந்திர் சென்று, அனைத்து பகவான்களின் மூர்த்திகள் முன்பாக இரண்டு கைகள் குவித்து தலைவணங்கினால், நமக்குள்ளே இருக்கும் அனைத்துக் குறைகளும், தீய எண்ணங்களும், வேறுபாடுகளும் தகர்ந்து போகும். தாதா பகவான் குடும்பத்தின் முக்கியமான நடுநிலையமாக த்ரிமந்திர், அடாலஜ் என்ற இடத்திலே இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் அஹ்மதாபாத், ராஜ்கோட், மோர்பீ, புஜ், கோத்ரா, பாதரண், சலாமயீ, வாஸணா ஆகிய இடங்களிலும், பாரபட்சமில்லாத த்ரிமந்திர்கள் இருக்கின்றன. மும்பை, சுரேந்த்ரநகரிலும் த்ரிமந்திர் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. ஞானவிதி என்றால் என்ன? - இது பேதஞானம் என்ற பிரயோகம், இது வினா-விடை சத்சங்கத்திலிருந்து வேறுபட்டது. - 1958 ஆம் ஆண்டு வெளிப்பட்ட பரமபூஜனீய தாதா பகவானின் ஆத்மஞானம், இன்றும் கூட அவரது கருணையாலும், பூஜ்ய நீரூ அன்னையுடைய ஆசிகளாலும், வணக்கத்திற்குரிய தீபக்பாய் மூலமாகவும் கிடைக்கப் பெறுகிறது. ஞானம் ஏன் பெற வேண்டும்? - பிறப்பு-இறப்புகளில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவதற்கு - நானே ஆத்மா என்ற விழிப்புநிலை அடைய > குடும்பத் தொடர்புகள், பணிச்சுமைகளில் சுகம் - அமைதியை அனுபவிக்க ஞானவிதியால் என்ன கிடைக்கிறது? - ஆத்ம விழிப்புநிலை உண்டாகிறது - சரியான புரிதல் மூலமாக வாழ்க்கை வழிமுறைகளை நிறைவு செய்யக் கூடிய திறவுகோல் (சாவிகள்) கிடைக்கிறது. - எண்ணற்ற ஜென்மங்களின் பாவங்கள் சாம்பலாகின்றன. - அஞ்ஞானம் ஏற்படுத்திய தவறான புரிதல்கள் விலகுகின்றன. - ஞானம் விழித்துக் கொண்டதால், புதிய கர்மங்கள் ஏற்படுவதில்லை, பழைய கர்மம் கழியத் தொடங்குகின்றன. 56 Page #60 -------------------------------------------------------------------------- ________________ ஆத்மஞானம் கிடைக்கப் பெற நாமே வரவேண்டும் என்பது அவசியமா? - ஆத்மஞானம் என்பது ஞானியின் கருணை, ஆசிகளின் பலன். இதைப் பெற நேரடியாக வருவது அவசியம். > வணக்கத்துக்குரிய நீரூ அன்னை, வணக்கத்துக்குரிய தீபக்பாய் அவர்களின் சத்சங்கத்தை டிவி அல்லது விசிடி வாயிலாகவும், தாதாஜீ அவர்களின் புத்தகங்கள் ஞானத்தின் அறிமுகமாக அமையலாம், ஆனால் ஆத்மஞானம் அடைய முடியாது. நேரடியாக வருகை புரிவது அவசியமாகும். - மற்ற வழிமுறைகள் மூலமாக அமைதி கிடைக்கும், ஆனால் எப்படி புத்தகங்களில் இருக்கும் விளக்கின் படம் ஒளியை அளிக்காதோ, அதே போல ஆத்மாவை விழிப்படையச் செய்ய நாமே நேரடியாக வந்து ஞானத்தைப் பெற வேண்டும். > ஞானம் பெற நீங்கள் உங்கள் மதத்தையோ, குருவையோ மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. - ஞானம் விலைமதிப்பற்றது, ஆகையால் அதை அடைய, நீங்கள் பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. 57 Page #61 -------------------------------------------------------------------------- ________________ தாதா பகவான் நிறுவனத்தின் வெளியீடுகள் 1. ஞானிபுருஷ் கீ பஹசான் - ஞானியின் அடையாளங்கள் 2. ஸர்வ துக்கோன் ஸே முக்தி - அனைத்து துக்கங்களிலிருந்தும் விடுதலை 3. கர்ம கா சித்தாந்த் - கர்மக் கோட்பாடு 4. ஆத்மபோத் - ஆன்மபோதம் 5. மை கௌன் ஹுன் - நான் யார்? 6. வர்தமான் தீர்த்தங்கர ஸ்ரீ சீமந்தர் ஸ்வாமி - தற்கால தீர்த்தங்கர் ஸ்ரீ சீமந்தர் ஸ்வாமி 7. புக்தே உஸீ கீ பூல் - நம்முடைய தவறுக்கு நாம் அனுபவிக்கிறோம். 8. அட்ஜஸ்ட் எவ்ரிவேர் - அனைத்து இடங்களிலும் அனுசரித்துக் கொள்ளுங்கள். 9. டகராவ் டாலியே - மோதல்களைத் தவிருங்கள் 10. ஹுவா சோ ந்யாய் - நடப்பவை அனைத்தும் நியாயமே 11. சிந்தா - கவலை 12. க்ரோத் - க்ரோதம் 13. ப்ரதிக்ரமண் - ப்ரதிக்ரமணம் 14. தாதா பகவான் கௌன்? - தாதா பகவான் யார்? 15. பைசோன் கா வ்யவஹார் - பணத்தின் செயல்பாடு 16. அந்தக்கரண் கா ஸ்வரூப் - மனசாட்சியின் ஸ்வரூபம் 17. ஜகத் கர்த்தா கௌன்? - உலகைப் படைத்தவர் யார்? 18. த்ரிமந்த்ர - த்ரிமந்திரம் 19. பாவனா சே சுதரே ஜன்மோர்ஜன்ம் - உணர்வால் பல ஜன்ம மேம்பாடு 20. மாத-பிதா ஔர் பச்சோன் கா வ்யவஹார் நடத்தை 21. ப்ரேம் - நேசம் 22. சமஜ் சே ப்ராப்த் ப்ரும்மச்சர்ய - புரிதல் மூலம் ப்ரும்மச்சரியம் 23. தான் - தானம் 24. மானவ் தர்ம் - மனித தர்மம் 25. சேவா-பரோபகாரம் - சேவை - பரோபகாரம் 58 - அன்னை தந்தை பிள்ளைகளின் Page #62 -------------------------------------------------------------------------- ________________ 26. ம்ருத்யு சமய், பஹலே ஔர் பஸ்சாத் - மரண காலத்தில், அதன் முன்பு மற்றும் அதன் பின்னர். 27. நிஜதோஷ் தர்சன் சே... நிர்ஷோஷ் - தன்குற்றம் காண்பதால் குற்றமில்லா பார்வை 28. பதி பத்னி கா திவ்ய வ்யவஹார் - கணவன் மனைவியின் திவ்யமான நடத்தை 29. க்லேஷ் ரஹித் ஜீவன் - துக்கமில்லா வாழ்க்கை 30. குரு சிஷ்ய - குரு சிஷ்யன் 31. அஹிம்ஸா - அஹிம்ஸை 32. சத்ய-அஸத்ய கே ரஹஸ்ய - சத்தியம் - அஸத்தியத்தின் ரகசியம் 33. சமத்கார் அற்புதம் 34. பாப்-புண்ய - பாவமும் புண்ணியமும் 35.வாணி, வ்யவஹார் மேன் - நடைமுறையில் சொல்பயன்பாடு 36. கர்ம் கா விஞ்ஞான் - கர்ம விஞ்ஞானம் 37.ஆப்தவாணி1 38. ஆப்தவாணி 2 39. ஆப்தவாணி - 3 40. ஆப்தவாணி - 4 41.ஆப்தவாணி 5 42.ஆப்தவாணி6 43. ஆப்தவாணி -7 44. ஆப்தவாணி8 45.ஆப்தவாணி 9 46. ஆப்தவாணி - 10 (இரண்டு பாகம்) 47. ஆப்தவாணி - 11 (இரண்டு பாகம்) 48. ஆப்தவாணி -12 (இரண்டு பாகம்) 59 Page #63 -------------------------------------------------------------------------- ________________ 49. ஆப்தவாணி - 13 (இரண்டு பாகம்) 50. ஆப்தவாணி - 14 (ஐந்து பாகம்) 51. சமஜ் சே ப்ராப்த் ப்ரும்மச்சர்ய (பூர்வார்த்) - புரிதல் மூலம் ப்ரும்மச்சரியம் (முதல் பாகம்) 52. சமஜ் சே ப்ராப்த் ப்ரும்மச்சர்ய (உத்தரார்த்) - புரிதல் மூலம் ப்ரும்மச்சரியம் (நிறைவுப் பகுதி) - தாதா பகவான் நிறுவனம் வாயிலாக, குஜராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஓரியா, மலையாளம், ஜெர்மன், ஆகிய மொழிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. www.dadabhagwan.org என்ற இணையதள முகவரியில் நீங்கள் இந்த அனைத்துப் புத்தகங்களையும் பெறலாம். தாதா பகவான் நிறுவனம் வாயிலாக ஒவ்வொரு மாதமும், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் "தாதாவாணீ" என்ற இதழ் வெளியிடப்பட்டு வருகிறது. Page #64 -------------------------------------------------------------------------- ________________ தொடர்பு கொள்ள தாதா பகவான் பரிவார் அடாலஜ் : அடாலஜ் - த்ரிமந்திர், சீமன்தர் சிடி, அஹமதாபாத் - கலோல் ஹைவே, அடாலஜ், மாவட்டம் - காந்தி நகர், குஜராத் - 382421, இந்தியா. தொலைபேசி - (079) 39830100 E-mail : info@dadabhagwan.org ராஜ்கோட் : த்ரிமந்திர், அஹமதாபாத் - ராஜ்கோட் ஹைவே, தர்கடியா சோக்டி அருகில், மாலியாசன், ராஜ்கோட். தொலைபேசி - 9274111393 பூஜ் : பூஜ் - த்ரிமந்திர், ஹில் கார்டன் அருகில், ஏர்போர்ட் ரோடு, சஹயோக் நகர். அருகில், பூஜ் (கச்) தொலைபேசி - (02832) 290123 அஞ்ஜார் : த்ரிமந்திர், அஞ்ஜார் முந்த்ரா ரோடு, சீனோக்ரா பாடீயா அருகில், சீனோக்ரா கிராமம், தாலுக் - அஞ்ஜார் தொலைபேசி - 9924346622 சுரேந்தர நகர் : த்ரிமந்திர, சுரேந்தர நகர், ராஜ்கோட் ஹைவே, லோக் வித்யாலய் அருகில், முலி ரோடு, சுரேந்தர நகர் தொலைபேசி - 9879232877 அம்ரேலீ : த்ரிமந்திர், லீலீயா ரோடு, பய்பாஸ் சோக்டி, காராவாடி தொலைபேசி - 9924344460 கோத்ரா : த்ரிமந்திர், பாமையா கிராமம், எப்.சி.ஐ. குடோன் அருகில், கோத்ரா, மாவட்டம் - பஞ்சமஹால் தொலைபேசி - (02672) 262300 அஹமதாபாத் : தாதா தர்ஷன், 5, மமதாபார்க் சொசைட்டி, நவகுஜராத் காலேஜ் பின்னால், உஸ்மான்புறா, அஹ்மதாபாத் - 14. தொலைபேசி - (079) 27540408 வடோதரா : த்ரிமந்திர், 17, மாமானி போல், ராவ்புறா காவல் நிலையம் அருகே, சலாட்வாடா, வடோதரா தொலைபேசி - 9924343335 Page #65 -------------------------------------------------------------------------- ________________ மும்பை டெல்லி பெங்களூரு கொல்கத்தா பூனே சென்னை பாட்னா இந்தோர் ஜெய்பூர் ராய்பூர் போபால் ஜபல்பூர் பிலாய் ஹைதராபாத் ஜலந்தர் அமராவதி 9323528901 9810098564 9590979099 033 - 32933885 9422660497 7200740000 7352723132 9039936173 9351408285 9329644433 9425024405 9425160428 9827481336 9989877786 9814063043 9422915064 U.S.A. U.K Kenya : +1 877-505-DADA (3232) : +44 330-111-DADA (3232) : +254722722 063 : +971 557316937 Australia : +61 421127947 New Zealand : +64 21 0376434 Singapore : +65 81129229 UAE Page #66 -------------------------------------------------------------------------- ________________ ஞான ஞான விதி என் பது ஜென்ம ஜென்மங்களாக தன் மெய் சொரூபமான ஆத்மாவின் அனுபவத்திற்காக நாடுபவர்களுக்கு ஞானி புருஷ் தாதா பகவானின் அக்ரம் விஞ்ஞானத்தின் மூலமாக ஆத்ம அனுபவம் பெறுவதற்காக விலைமதிப்பில்லா பரிசு ஆகும். நான் (ஆத்மா), எனது (மனது, பேச்சு, உடல்) என்ற இரண்டிற்கும் நடுவில் எல்லைக் கோடு இடும் ஞானி புருஷ் அவர்களின் சிறப்பான ஆன்மீக சித்தியால் இயல்கிற விஞ்ஞான பூர்வமான ஞான வழிமுறைதான் ஞானவிதி. இந்த ஞானத்தால் என்றென்றும் பரமானந்தத்தை அடைந்து, கவலைகளிலிருந்து விடுபட முடிகிறது. உலகியல் உறவுகளின் அமைதி நிலவி, வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உபயோகமாகவுள்ளது. - 83 ISBN 978-93-87551-30-3 9178938715513981 मूलदीपकम पायक से पकटेदीपमाला Printed in India dadabhagwan.org Price Rs20|