Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 56
________________ தவறான செயல் ஒன்றில் நீங்கள் ஈடுபட்டால், அதை அதிக்ரமணம் என்று அழைக்கிறோம். தவறான எண்ணம் உண்டானால்,அதைக் கறை என்கிறோம்,அது மனதை அரித்துக் கொண்டே இருக்கும். இதை விட்டொழிக்க, நாம் பிரதிக்ரமணத்தில் ஈடுபட வேண்டும் (அதாவது நினைவில் மீண்டும் கொண்டு வந்து, மன்னிப்புக்கோர வேண்டும், மீண்டும் மனம், வாக்கு, உடலால் அப்படிப்பட்ட செய்கையில் ஈடுபட மாட்டேன், என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்). இந்த பிரதிக்ரமணத்தால் எதிரில் இருப்பவருக்கும் உங்களைப் பற்றி இருக்கும் தவறான எண்ணம் மாறிவிடும். உங்கள் எண்ணம் நன்றாக இருந்தால், மற்றவர்களின் எண்ணமும் நன்றாக ஆகிவிடும். ஏனென்றால் ப்ரதிக்ரமணத்தில் எந்த அளவு சக்தி இருக்கிறது என்றால், புலி கூட நாயைப் போல மாறிவிடுகிறது. பிரதிக்ரமணம் எங்கே பயனளிக்கிறது? தவறான விளைவுகள் எழும்போது, இது பயனளிக்கிறது. ப்ரதிக்ரமணத்தின் சரியான புரிதல் அப்படியென்றால் ப்ரதிக்ரமணம் என்றால் என்ன? எதிராளி நம்மை அவமதிக்கிறார்,அப்போது இந்த அவமானத்துக்கான குற்றவாளி யார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவமானப்படுத்துபவர் குற்றவாளியா, அவமானத்தை அனுபவிப்பவர் குற்றவாளியா என்பதை நாம் முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அவமானம் செய்பவர் நிச்சயமாக குற்றவாளி ஆக மாட்டார், அவர் ஒரு கருவி மாத்திரமே. நமது கர்மவினைகளின் வெளிப்பாடாகவே அவர் ஒரு கருவியாக அமைகிறார். அப்படியென்றால் தவறு நம்முடையது தான். சரி, ஏன் இந்த பிரதிக்ரமணம் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிராக உங்கள் மனதில் ஏதேனும் கோபதாபங்கள், வருத்தங்கள், எதிர்மறை உணர்வுகள் ஏற்பட்டால், இதைச் செய்ய வேண்டும். அவர் மீது மனதில் தவறான எண்ணம் தோன்றினால், ப்ரதிக்ரமணம் செய்ய வேண்டும். பிறகு யாரேனும் நம்மை திட்டினால் அதுவும் நம் கர்மபலன் தான். இந்த மனிதன் ஒரு கருவியானவன் தான். ஜேப்படி திருடன் ஒரு கருவியானவன் தான், கர்மபலன் நம்முடையது தான். கருவியாக செயல்படுபவனையே சாடுகிறோம், அது தான் சண்டையின் காரணம். நாள் முழுக்க நாம் ஈடுபடும் வேலைகளில், சற்று ஏதேனும் ஏறுக்குமாறாக நடந்து விட்டால், யாரோ ஒருவரிடத்தில் மன வேற்றுமை உண்டாகி விட்டது என்று நீங்கள் உணர்கிறீர்கள் இல்லையா? நாம் கொள்ளும் பரஸ்பரத் தொடர்புகளை க்ரமணம் என்று அழைக்கிறோம். க்ரமணம் அதாவது பரஸ்பரத் தொடர்புகள். யாரோ ஒருவரிடம் மன வேற்றுமை உண்டாகும் பட்சத்தில், நீங்கள் அவரிடத்தில் கடுமையான சொற்களைப் பயன்படுத்தினீர்களா, இல்லை தவறாக நடந்து கொண்டீர்களா என்பது தெரியுமா, தெரியாதா? இது எல்லாம் அதிக்ரமணம் என்று அழைக்கப்படும். 53

Loading...

Page Navigation
1 ... 54 55 56 57 58 59 60 61 62 63 64