________________
ஒரு கணம் கூட அந்த நியாயத்தில் தவறு ஏற்படுவதில்லை. அப்படி அநியாயமாக இருந்தால், ஒருவர் கூட மோக்ஷம் அடைய முடியாது. நல்லவர்களுக்கு, துன்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது, இல்லையா? ஆனால் உள்ளபடியே யாராலும் அப்படி துன்பங்களை மற்றவருக்கு ஏற்படுத்த முடியாது. ஏனென்றால், நீங்கள் மற்றவருடைய வாழ்க்கை நிகழ்வுகளில் குறுக்கிடாமல் இருந்தால்,உலகின் எந்த சக்தியாலும், உங்களை தீண்ட முடியாது. இவையனைத்து பிரச்சினைகளும், உங்கள் வினையின் பயனே.
உலகம் நியாயம் நிறைந்தது இந்த உலகு பொய்மையானது இல்லை. உலகம் நியாயரூபமானது. இயற்கை எக்காலத்திலும் அநியாயமாக செயல்பட்டதில்லை. இயற்கை ஓரிடத்தில் மனிதனை வெட்டுகிறது, விபத்துக்குள்ளாக்கிறது, இவையனைத்தும் நியாயரூபமே. நியாயத்துக்கு புறம்பாக இயற்கை நடந்ததே இல்லை. தவறான புரிதல் காரணமாக ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள், வாழ்க்கைவாழும் கலையும், அவர்களுக்கு தெரிவதில்லை. எப்போது பார்த்தாலும் கவலைமயமாக இருக்கிறார்கள். ஆகையால் நடப்பவை அனைத்தும் நியாயமானவையே என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.
"நடப்பவை அனைத்தும் நியாயமே” என்பதைப் புரிந்து ஏற்று கொண்டு விட்டால், உலகம் என்ற கடலைக் கடந்து விடலாம். இந்த உலகில் ஒரு கணம் கூட அநியாயம் நடப்பதில்லை, நியாயமே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நம் புத்தயானது தான் நம்மை சிக்க வைத்து, இதை "எப்படி நியாயம் என்பீர்கள்?” என்று கேட்கத் தூண்டுகிறது. ஆகையால் அடிப்படை விஷயமாக நான் கூற விரும்புவது என்னவென்றால், இவை அனைத்தும் இயற்கை சார்ந்தது, புத்தியின் பிடியிலிருந்து நீங்கள் விலகி விடுங்கள் என்பது தான். புத்தி தான் இப்படிப்பட்ட எண்ணங்களின் பிடியில் நம்மை சிக்க வைக்கிறது. ஒரு முறை இயற்கையின் நீதி புரிந்து கொண்ட பிறகு, புத்தியின் அறிவுரையை மதிக்காதீர்கள். நடப்பவை அனைத்தும் நியாயமானவையே. நீதிமன்றத்தில், நியாயம் தவறுதலாகக் கூட அமையலாம், ஏறுக்குமாறாகக் கூட இருக்கலாம், ஆனால் இயற்கையின் நியாயத்தில் எந்த தவறும் இருக்காது, எப்பொழுதும் துல்லியமானதாகும்.
நியாயத்தை தேடும் வேலையில் வாழ்க்கை கழிந்து விடுகிறது. நான் இவருக்கு என்ன தீங்கிழைத்தேன், என்னை ஏன் இப்படி துன்பப்படுத்துகிறார்? என்று மனிதன் மனதில் கேள்வி எழலாம். நியாயம் தேடுவதற்கு சென்ற அனைவருக்கும் தோல்வியே மிஞ்சியது, ஆகையால் நியாயத்தைத் தேடி அலையாதீர்கள். இந்தத் தேடலில் உங்களுக்குத் தான் அழிவு ஏற்படுமே தவிர, தீர்வு பிறக்காது. கடைசியில் நீங்கள் நின்ற இடத்திலேயே, எந்த
46