Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 18
________________ இது. இது நேரடியாக லிஃப்டில், மனைவி குழந்தைகளோடு அமர்ந்து, மகன் மகள்களுக்கெல்லாம் திருமணம் முடித்துவிட்டு பின்பு மோக்ஷம் அடைய செய்கிறது. இவை அனைத்திலும் ஈடுபட்டால் கூட, உங்களுக்கு மோக்ஷம் கிடைக்கும். இப்படிப்பட்ட அக்ரம் வழியை, சிறப்புவழி என்றும் கூறுவார்கள். இது 10 இலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிப்படும். யார் இந்த லிஃப்ட் வழியில் அமர்கிறார்களோ, அவர்களுக்கு நன்மை ஏற்பட்டு விடும். நான் ஒரு கருவி தான். இந்த லிஃப்டில் அமர்பவர்களுக்கு வழி பிறந்துவிடும். நாம் மோக்ஷம் அடையத் தான் போகிறோம். அப்படி அமர கண்டிப்பாக சில அடையாளங்கள் தேவை இல்லையா? அதற்கான அடையாளங்கள் தான் க்ரோதம், இறுமாப்பு, மாயை, கருமித்தனம், பேராசை, பழிவாங்கும் உணர்வு இல்லாது இருப்பது. அப்போது இந்த வேலை முழுமை அடைந்தாகிவிட்டது. ஆத்ம அனுபவத்தை சுலபமாக பெற செய்கிறது - அக்ரம் மார்க்கம் க்ரமிக் மார்க்கத்தில் அதிக முயற்சிகள் செய்த பிறகே ஆத்மா இருக்கிறது, என்ற உணர்வு ஏற்படுகிறது, அதுவும் அதிக தெளிவில்லாத ஒன்றாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் இலக்கில் இருத்த வேண்டியிருக்கிறது. ஆனால் அக்ரம் மார்க்கத்திலோ நேரடியாக ஆத்ம அனுபவம் சித்திக்கிறது. தலைவலி ஏற்படுகிறதோ, பசிக்கிறதோ, பக்கவாதம் ஏற்படுகிறதோ வெளியே என்ன தான் கஷ்டங்கள் வந்தாலும், அவற்றின் பாதிப்பு ஏதும் இல்லாமல் நம் உள் ஆனந்தம் நிலை கொண்டு இருப்பதை உணர முடிகிறது. இதை தான் ஆத்ம அனுபவம் என்று அழைக்கிறோம். ஆத்ம அனுபவம் துக்கத்தை கூட சுகமாக மாற்றி விடுகிறது.மாறாக மாயையில் உழல்பவருக்கோ, சுகத்திலும் துக்கமான அனுபவமே ஏற்படுகிறது. அக்ரம் விஞ்ஞானம் காரணமாகவே இத்தனை விரைவாக "நான் சுத்தாத்மா” என்கிற சமநிலை சித்திக்கிறது. இது மிகவும் உயர் நிலையான விஞ்ஞானம். ஆத்மா மற்றும் புறப்பொருட்களுக்கு இடையில், அதாவது, உங்களுக்கும் அந்நியப் பொருட்களுக்கும் இடையே வேறுபாட்டை ஏற்படுத்தி வைத்து, இது உங்களுடையது, இது உங்களுடையது இல்லை, என்ற விழிப்பை ஓரே மணி நேரத்தில் ஒரு கோடு கிழித்து வேறுபடுத்தி விடுகிறோம். நீங்கள் சொந்த முயற்சியில் ஈடுபட்டீர்கள் என்று சொன்னால், இலட்சம் பிறவிகள் எடுத்தாலும், சாதிக்க முடியாது. 15

Loading...

Page Navigation
1 ... 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64