Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 29
________________ கேட்டால், உங்களுக்குள்ளேயே அவற்றுக்கான விடைகள் தாமாகவே புலப்படத் தொடங்கும். உ உங்களுக்கு உளைச்சல் அளிக்கும் வினாக்களை நீங்கள் கண்டிப்பாக கேட்க வேண்டும். விதை விதைத்த பிறகு நீர் தெளிப்பது அவசியம் வினா : ஞானம் பெற்ற பின்னர் "நான் சுத்தாத்மா” என்ற எண்ணத்தை முன்னிறுத்த வேண்டி இருக்கிறதே, இது கடினமாக இருக்கிறது? தாதாஸ்ரீ : இல்லை, இதை முன்னிறுத்த வேண்டியதே இல்லை, அது தானாகவே முன்னிறுத்திக் கொள்ளும். அப்படி ஏற்பட என்ன செய்ய வேண்டும்? அதற்கு நீங்கள் என்னிடத்தில் வந்து போய் கொண்டு இருக்க வேண்டும். சத்சங்கம் என்ற தண்ணீரை, விதை போல் இருக்கும் ஞானத்திற்கு ("நான் சுத்தாத்மா”), தெளிக்கவில்லை என்பதால் தான் இந்த இடர்பாடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. நீங்கள் உங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்று சொன்னால் வியாபாரம் எப்படி நடக்கும்? வினா : வியாபாரம் படுத்துத் தான் போகும். தாதாஸ்ரீ : ஆம், இங்கும் அப்படித் தான். ஞானம் பெற்றுக் கொண்டால், அதற்கு நீர் வார்க்கத் தான் வேண்டும், அப்போது தான் செடி தழைத்து வளரும். சிறிய செடியாக இருந்தாலும் கூட, அதற்கும் நீர் தெளிக்கத் தான் வேண்டும். அவ்வப்பபோது சிறிதளவு நீர் ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். வினா : வீட்டில் நாங்களே தண்ணீரை தெளிக்கிறோமே. தாதாஸ்ரீ : இல்லை, நீங்கள் வீட்டில் தெளிப்பது எல்லாம் சரிப்பட்டு வராது. நேருக்கு நேராக, ஞானி உங்கள் மத்தியில் இருக்கிறார், ஆனால் உங்களுக்கு,அவர்களின் மதிப்பைப் பற்றி தெரியவில்லை. நீங்கள் பள்ளி சென்றீர்களா இல்லையா? எத்தனை ஆண்டுகள் சென்றிருப்பீர்கள்? வினா: பத்தாண்டுகள் தாதாஸ்ரீ : அப்படியென்றால் பள்ளியில் நீங்கள் என்ன பயின்றீர்கள்? மொழியையா! இந்த ஆங்கிலத்தைக் கற்க நீங்கள் பத்தாண்டுகள் கழித்து இருக்கிறீர்கள் என்றால், இங்கே என்னிடம் 6 மாதங்கள் கழித்தால் போதும் என்று கூறுகிறேன். 6 மாதங்கள் என்னைப் பின் தொடர்ந்தீர்கள் என்றால், உங்கள் வேலை முழுமையடையும். உறுதிப்பாடு பலமாக இருந்தால் தடைகள் அகலும் வினா :உலகத்தைச் சார்ந்த பணிகள் அதிகம் இருப்பதால், இங்கே சத்சங்கத்திற்கு வருவது கடினமாக இருக்கிறது. தாதாஸ்ரீ : உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால், மற்றது தகர்ந்து போகும். உங்கள் உள்மனதில் உங்கள் எண்ணம் பலமாக இருக்கிறதா என்று நீங்கள் தான் கவனிக்க வேண்டும். 26

Loading...

Page Navigation
1 ... 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64