________________
7. ஞானி - ஏ.எம்.படேல் (தாதாஸ்ரீ) "தாதா பகவான்” 14 லோகங்களை ஆளுபவர். அவர் உங்களுக்குள்ளேயும் இருக்கிறார். ஆனால் உங்களில் வெளிபடவில்லை. உங்களிடம் வெளிப்படாமல் மறைவாக இருக்கிறார். என் உள் இருப்பவர் வெளிப்பட்டிருக்கிறார். வெளிப்பட்டவர் பலன்களை அள்ளித் தருவார். ஒருமுறை அவர் பெயரை உச்சரித்தால் கூட, அதன் பலன்கள் கண்கூடு. இதை நன்குணர்ந்து உச்சரித்தால் பலமடங்கு பலன் அளிக்கும். உலகத்தில் தடைகள் இருந்தால்,விலகிவிடும்.
இங்கே உங்கள் கண்களுக்குத் தெரிபவர் "தாதா பகவான்” இல்லை. இங்கே உங்கள் கண்களுக்குத் தெரிபவரே "தாதா பகவான்” என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லையா? ஆனால் இங்கே உங்கள் கண்கள் முன்னால் இருப்பவர் பாதரண் பகுதியைச் சேர்ந்த ஒரு படேல் தான். நான் "ஞானி”, என்னுள்ளிருந்து வெளிப்பட்டு இருப்பவர் தான் தாதா பகவான். நான் ஒன்றும் பகவான் இல்லை. என்னுள்ளில் வெளிப்பட்டிருக்கும் தாதா பகவானை நானும் கூட வணங்குகிறேன். தாதா பகவானை நான் வேறொருவராக தான் காண்கிறேன். ஆனால் ஏதோ நானே தாதா பகவான் என்று மக்கள் நினைக்கிறார்கள். இல்லை, நானே எப்படி தாதா பகவானாக முடியும்? இங்கே இருப்பது பாதரணைச் சேர்ந்த படேல் தான்.
(இந்த ஞானம் அடைந்த பிறகு) தாதாவின் ஆணைப்படி நடக்க வேண்டும்.இது ஏ.எம்.படேலின் ஆணை அல்ல. இது தாதா பகவானுடையது, அவர் தான் 14 லோகங்களை ஆளுபவர், அவரது ஆணை. அதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். என்னை ஒரு கருவியாகக் கொண்டு அனைத்து பேச்சும் வெளிப்பட்டிருக்கின்றன. ஆகையால் இந்த ஆணையை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இது என் ஆணை அல்ல. இது தாதா பகவானுடைய ஆணையாகும். நானும் அவரது ஆணையின் அடிபடையில் தான் வாழ்ந்து வருகிறேன்.
8. க்ரமிக் மார்க்கம் - அக்ரம் மார்க்கம் மோக்ஷத்தை அடைய இரு வழிகள் உண்டு: ஒன்று “க்ரமிக் மார்க்கம்” மற்றது "அக்ரம் மார்க்கம்”. க்ரமிக் என்பதாவது,படிப்படியாக மேலேறிச் செல்வது. க்ரமிக் வழியில் உங்கள் உடைமைகள் - சொந்தங்களை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொண்டே போகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் மோக்ஷத்தைச் நெருங்கி கொண்டுக்கிறீர்கள், அதுவும் பல காலத்திற்குப் பிறகு. ஆனால் அக்ரம் விஞ்ஞானம் என்றால் என்ன? இதில் படிகளேறிச் செல்ல வேண்யடிதில்லை. லிஃப்டில் அமர வேண்டும், பின்பு 12ஆவது அடுக்குக்குச் சென்று அடைய வேண்டும். இப்படிப்பட்ட லிஃப்ட் வழி தான்
14