________________
தாதாஸ்ரீ : நீங்கள் அவரிடம் செல்லலாம். உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால், செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் செல்ல விரும்பினீர்கள் என்றால் செல்லுங்கள், செல்ல விரும்பவில்லை என்றால் செல்லாதீர்கள். அவருக்கு வருத்தம் ஏற்படக் கூடாது என்பதால், நீங்கள் அவரிடம் செல்ல வேண்டும். நீங்கள் அவரிடம் பணிவுடன் இருக்க வேண்டும். இங்கே "ஆத்மஞானம்” நாடி வரும் போது, யாரவது என்னிடத்தில், "நான் என் குருவைத் விட்டு விடலாமா? என்று கேட்டால், “விடாதீர்கள்” என்பது தான் என் பதிலாக இருக்கும். அந்த குருவின் மகிமை காரணமாகத் தான் நீங்கள் இதுவரை வந்திருக்கிறீர்கள். உலகஞானம் கூட குருவில்லாமல் ஏற்படாது. மோக்ஷஞானமும் கூட குரு இல்லாமல் ஏற்படாது. வழிகாட்டுதலுக்கான குரு, வழிகாட்டுதல் தருபவர், தீர்மானமான ஞானத்தை அளிப்பவர் ஞானி. வழிகாட்டுதல் என்பது ஒப்பீட்டுக்குட்பட்டது, ஆனால் முடிந்த முடிவான தீர்மானமான ஞானம் நிஜமானது. ஒப்பீடு தொடர்பான விஷயங்களுக்கு குரு தேவை, மெய்யான விஷயங்களுக்கு ஞானி தேவை. அதாவது நடைமுறை விஷயங்களுக்கு குரு தேவை, முழுமையான ஞானத்துக்கு ஞானி தேவை.
வினா : குரு இல்லாமல் ஞானம் சித்திக்காது என்று கூறப்படுகிறதே?
தாதாஸ்ரீ : குருவானவர் வழிகாட்டுவார், வழிகாட்டியாக இருப்பார். ஆனால் "ஞானி” என்பவர் ஞானம் அளிப்பவர். ஞானி என்றால் அவருக்கு அறிந்து கொள்ள வேறு ஒன்றும் இல்லை. அதாவது ஞானியானவர் உங்களுக்கு அனைத்தையும் அளிக்கிறார். குருவானவர் உலகில் உங்களுக்கு வழி காட்டுவார். அவர் கூறியவாறு நீங்கள் நடந்தீர்கள் என்று சொன்னால், உலகில் நீங்கள் சுகமாக இருக்கலாம். ஆதி (மனவேதனை), வியாதி, உபாதி (மற்றவர்களினால் ஏற்படும் உபத்திரம்), நெருக்கடிகளிலும் சமாதி நிலையைத் தருபவர் "ஞானி”.
வினா : ஞானம் குருவிடமிருந்து கிடைக்கும். ஆனால் அந்த குருவிற்கு தனது ஆத்மாவை அனுபவித்து உள்ளவராக இருந்தால் மட்டுமே, அவரிடமிருந்து ஞானம் கிடைக்கப் பெறும் இல்லையா?
தாதாஸ்ரீ : அவர் "ஞானி”யாக இருக்க வேண்டும். பின்பு ஆத்ம அனுபவம் ஏற்படுத்துவதால் மட்டுமே ஒன்றும் ஏற்பட்டு விடாது. இந்த உலகம் எப்படி செயல்படுகிறது? தாங்கள் யார்? தான் யார் என்பது தொடர்பான விளக்கங்கள் அளித்தால் தான் முழுமையாக ஆத்மாவை பற்றிய தெளிவு கிடைக்கும். ஆனால் நாம் புத்தகங்களை மட்டுமே பின்பற்றுகிறோம், புத்தகங்கள் உதவி செய்யும் கருவிகளாகும். இது சாதாரணமான காரணமே தவிர,தனிச்சிறப்புடைய காரணம் இல்லை. தனிச்சிறப்புடைய காரணம் என்ன? "ஞானி”.