________________
கூறியிருக்கிறார். இந்த பொறுப்பற்ற செயல்பாடு பல பிறப்புகளை பாதிக்கிறது. ஆனால் பிறப்பை பின்தொடரும் மரணம் என்பது, ஒரு ஜென்மத்தின் விளைவு.
அக்ரம் ஞானத்தால் உள்ளங்கை நெல்லிக்கனி மோக்ஷம் ஞானி இப்போது உங்கள் முன்பாக இருக்கிறார் என்று சொல்லும் போது வழி கிடைக்கும். உங்களிடம் சிந்தனை அதிகம் இருக்கிறது, ஆனால் வழி புலப்படவில்லை. தவறான பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். ஞானிகள் கூட எப்போதாவது தான் தோன்றுவார்கள். அவர்கள் மூலமாக ஞானம் வாய்க்கப் பெறும் போது ஆத்ம அனுபவம் ஏற்படுகிறது. மோக்ஷம் என்பது உள்ளங்ககை நெல்லிக்கனியாக இங்கேயே கிடைக்க வேண்டும். இங்கே, இந்த உடலுடன் மோக்ஷம் அனுபவிக்க வேண்டும். இந்த அக்ரம் ஞானத்தால் இங்கேயே மோக்ஷம் சித்திக்கிறது. அனுபவமும் ஏற்படுகிறது. இதுவே உண்மை .
ஞானி மட்டுமே ஆத்மா - அனாத்மாவை வேறுபடுத்தி காட்ட இயலும் இந்த மோதிரத்தில் பொன்னும், தாமிரமும் இரண்டும் கலந்து இணைந்திருக்கிறது. இதை நீங்கள் ஒரு கிராமத்துக்கு கொண்டு சென்று, ஐயா இதைத் தனித்தனியாக பிரித்து கொடுங்கள் என்று கேட்டால், யாராவது இதைச் செய்து விடுவார்களா? யாரால் செய்ய முடியும்?
வினா : பொற்கொல்லரால் மட்டுமே செய்ய முடியும்.
தாதாஸ்ரீ : எவருடைய தொழில் அதுவோ, அவரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அவரால் மட்டுமே பொன்னையும், தாமிரத்தையும் பிரித்தெடுக்க முடியும். ஏனென்றால் அவருக்குத் தான் இரண்டு உலோகங்களின் குண இயல்புகள் தெரியும். அதாவது பொன்னின் குண இயல்பு இப்படிப்பட்டது, தாமிரத்தின் குண இயல்பு இப்படிப்பட்டது என்று, இதைப் போலவே ஞானிக்கு, ஆத்மாவின் குண இயல்பு நன்கு தெரியும், அனாத்மாவின் குண இயல்புகளும் நன்கு புரியும்.
இந்த மோதிரத்தில் இருக்கும் பொன் - தாமிரக் கலவையாக உள்ளதால் பிரித்து விட முடியும். ஆனால் பொன் தாமிரம் சேர்மங்களாக இருந்தால், அவற்றைப் பிரிக்க முடியாது. ஏனென்றால், இங்கே குண இயல்புகளே வேறு விதமாக ஆகிவிடுகிறது. இதைப் போலவே ஒருஉயிரின் உள்ளே புலன் உணர்வு கொண்டவையும், ஜடப் பொருட்களும் சேர்மங்களாக இல்லை. ஆகையால் மீண்டும் தங்களது இயல்பைப் பெற முடியும். இதுவே சேர்மமாகி இருந்தால், ஒன்றுமே புலப்பட்டிருக்காது. புலனுணர்வின் குண இயல்புகள் பற்றியும் தெரிந்து இருக்காது, ஜடப் பொருட்களின் குண இயல்புகள் பற்றியின் குண இயல்புகள் பற்றியும்