________________
ஞானியை எப்படி அடையாளம் காண்பது வினா : ஞானியை எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது?
தாதாஸ்ரீ - ஞானியை இயல்பாகவே அடையாளம் தெரிந்து கொள்ளலாம். இதற்காக எதுவும் செய்யத் தேவையே இல்லை. அவர்களின் நறுமணம் அவர்களுக்கான அடையாளமாக இருக்கிறது. அவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் சூழல்தனித்தன்மை உடையதாகும். அவர்களின் குரலும்மொழியும் தனிச்சிறப்புமிக்கவை. அவர்களின் சொற்களை வைத்து அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவர்களின் கண்களைப் பார்த்தவுடனேயே சட்டென்று புரிந்து விடும். ஞானிகளிடத்தில் அதிக நம்பகத்தன்மை காணப்படும்.மிகவும் வலுவான நம்பகத்தன்மை. புரிந்து கொள்பவர்களுக்கு, அவர்களின் ஒவ்வொரு சொல்லும் சாஸ்திரரூபமாக அமைந்திருக்கும். அவர்களின் மொழி, செயல், பணிவு, இனிமையாக இருக்கும், மனதைக் கொள்ளை கொள்பவையாக இருக்கும். இப்படி பல லட்சணங்களும் அறிகுறிகளும் நிறைந்து காணப்படும்.
ஞானி கவலையேதும் அற்றவராக இருக்கிறார். ஆத்மஞானி பரம சுகத்தில் திளைத்தவராக இருக்கிறார். அவருக்கு சற்றேனும் கூட துக்கம் என்பதே இருப்பதில்லை. ஆகையால், அவரிடம் இருக்கும் இடத்தில் அனைத்து நலன்களும் நிரம்பி இருக்கின்றது. யார், தான் சுகமாக இருக்கிறாரோ, கவலை இல்லாத நிலையில் இருக்கிறாரோ, அவரால் தான் மற்றவர்களின் துக்கம் போக்கி, சுகத்தை அளிக்க முடியும். யார் கரையை கடந்தவராக இருக்கிறாரோ, அவரால் தான் மற்றவரை கரை சேர்க்க முடியும். அவரால் இலட்சக்கணக்கானோர் கரை சேர முடியும்.
ஸ்ரீமத் ராமசந்த்ரஜீ, என்ன கூறினார் என்றால், "ஆசாபாசங்கள் சற்றும் இல்லாதவரே ஞானி, உலகப் பொருட்கள் எதன் மீதும் மோகம் இல்லை. உபதேசம் அளிக்க வேண்டும் என்று கூட சற்றும் உந்துதல் இல்லை. சீடர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இல்லை, யாரையும் சீர்திருத்த வேண்டும் என்ற நாட்டம் இல்லை, எந்த வகையான ஒரு கர்வமும் இல்லை, தான் ஆண்டான் என்ற உணர்வு இல்லை, “நான்” என்ற அகந்தை இல்லாதவர்”.
13