________________
யாரைக் குத்த வேண்டுமோ அவரையே முள் குத்தும். அனைத்துச் ஆதாரங்களும் ஒன்று சேர்ந்து, ஒரு சூழ்நிலை உண்டாகிறது. அதில் கருவியாக இருப்பவரை நொந்து என்ன பயன்?
எப்படி எனது தவறுகளை நான் கண்டு அறிவது என்று, யாரேனும் என்னை கேட்டால், என் பதில் என்னவென்றால், எந்த சூழ்நிலைகளிலெல்லாம் வேதனைப்படுகிறீர்களோ? அது அனைத்தும் உங்கள் தவறுகள். நீங்கள் என்ன தவறு செய்து இருந்தீர்களானால், இப்படி வேதனை படவேண்டி இருக்கிறது? இந்த துன்பத்திற்க்கு காரணமான தன்னுடைய தவறுகளை கண்டறிய வேண்டும்.
அடிப்படைத் தவறு எங்கிருக்கிறது? தவறு யாருடையது? வேதனைபடுபவருடையது மட்டுமே. தவறு என்ன? "நான் சந்தூபாய்” என்று கருதுவது தான் தவறு. ஏனென்றால், இந்த உலகத்தில் யாரும் தவறு செய்தவர்கள் என்று இல்லை. ஆகையால் யாரும் குற்றவாளி இல்லை, இது தான் உண்மை.
துக்கம் கொடுப்பவர் வெறும் கருவி மாத்திரமே. ஆனால் அடிப்படைத் தவறு நம்முடையது தான். யார் உங்களுக்கு துக்கம் அளிக்கிறாரோ அவரும் ஒரு கருவி தான்,யார் உங்களுக்கு நன்மை செய்கிறாரோ, அவரும் ஒரு கருவி தான். உண்மையில் பார்க்கப் போனால் அனைத்தும் நமது கடந்தகாலக் கணக்கின் விளைவுகளே.
நம்முடைய தவறுகளை நாம் திருத்திக் கொள்ளும் வழி - பிரதிக்ரமணம்
க்ரமணம் - அதிக்ரமணம் - ப்ரதிக்ரமணம் உலகில் தன்னிச்சையாக நடப்பவை அனைத்தும் க்ரமணம். இது இயல்பான அளவில் இருக்கும் வரையில் க்ரமணம், ஆனால் இதுவே மிகையாக,காயப்படும்படியாக நடக்கும் போது, இது அதிக்ரமணம். எப்போது ஒரு செயல் அதிகப்படியாக மாறத் தொடங்குகிறதோ, அதாவது மனம் வாக்கு உடலால், நாம் மற்ற உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தத் தொடங்குகிறோமோ, அப்போது அதிலிருந்து விடுபட, நாம் ப்ரதிக்ரமணம் செய்தாக வேண்டும்; அதாவது சுத்தம் செய்தல் வேண்டும், அப்போது தான் தூய்மையாகும். முந்தைய பிறவியின் வடிவமைத்தலின் காரணமாக, "அந்த மனிதனுக்கு 4 அறை கொடுக்க வேண்டும்” என்ற நோக்கத்தை நாம் நிறைவேற்றுகிறோம். இதை அதிக்ரமணம் என்று அழைக்கிறோம், ஆகையால் அதற்கு எதிராக பிரதிக்ரமணம் செய்ய வேண்டும். எதிரில் இருப்பவரின் "சுத்தாத்மாவை” நினைவில் கொண்டு, அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
52