________________
நான் ஒருவருடைய இயல்பு தன்மையை புரிந்து கொள்வேன். ஆகையால் நீங்கள் மோத நினைத்தாலும் நான் அதை அனுமதிக்க மாட்டேன். இல்லையென்றால் இரண்டு பேருக்கும் விபத்து ஏற்படும். பிறகு இருவரின் உள்ளே இருக்கும் உதிரிபாகங்கள் சிதைந்து விடும். ஒரு வண்டியின் பம்பர் உடைந்தால், உள்ளே இருப்பவர்களின் நிலை என்னவாக இருக்கும்? மோசமாக இருக்கும் இல்லையா! ஆகையால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரின் இயல்பை, அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள்.
சச்சரவு என்பது தினசரி ஏற்படுகிறதா? உங்கள் கர்மங்கள் உதிக்கும் போது தான் ஏற்படும், அப்பொழுது நாம் அனுசரித்துப் பழக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டில் மனைவியுடன் சண்டை ஏற்பட்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவரை ஹோட்டலுக்குக் கூட்டிச் சென்று, அவருடன் சேர்ந்து உணவு உண்டு மகிழ்விக்க வேண்டும். உங்கள் உறவில் ஏற்பட்ட கசப்பு நீடித்திருக்க விடக்கூடாது.
நீங்கள் உண்ணும் தட்டில் என்ன அளிக்கப்பட்டிருக்கிறதோ, அதை உண்ண வேண்டும். உங்கள் முன் வந்திருப்பது ஒரு நிகழ்வு; இதை எதிர்த்து நீங்கள் செயல்பட்டால், விளைவு உங்களுக்கு எதிராகவே அமையும், என்று பகவான் கூறியிருக்கிறார். ஆகையால் நமது தட்டில் நமக்குப் பிடித்தவை,பிடிக்காதவை என இரண்டும் வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றிலிருந்து சற்றாவது நாம் உண்ண வேண்டும்.
யாரால் அனுசரித்து நடக்க முடியவில்லையோ, அவரை எப்படி மனிதன் என்று அழைப்பது? யார் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடக்கப் பழகினவர்களோ, அவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது, அவர்கள் வீட்டில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. உங்கள் மனைவியுடன் நீங்கள் மகிழ்வாக இருக்க விரும்பினால், நீங்கள் அனுசரித்து நடக்கப் பழக வேண்டும். இல்லையென்றால், பகை தான் ஏற்படும்.
மனிதர்களின் வாழ்வு சில கோட்பாடுகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடக்கப் பழக வேண்டும். யார் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து நடக்கப் பழகியவர்களோ, அவர் தான் மனிதன், அவரே பாராட்டுதல்களுக்கும்,புகழுக்கும் உரியவராவார். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ப அனுசரித்து நடக்கத் தெரிந்தவர்களுக்கு மோக்ஷப் பாதை வழி திறக்கும். இது ஒரு மிகப் பெரிய ஆயுதம்.
அனுசரித்து நடக்காமல் இருந்தால் அது மூடத்தனம்
மற்றவருக்கு நீங்கள் கூறுவது ஏற்றுகொள்ளப்படுவதாக இருக்க வேண்டும். மற்றவருக்கு நீங்கள் கூறுவது உடன்பாடு இல்லையென்றால், தவறு உங்களுடையது தான்.
37