________________
முடியாது, அத்தனை சுதந்திரம் இங்கே இருக்கிறது; அப்படியிருந்தும் தீங்கு செய்கிறது என்றால், இது நமது முந்தைய தவறுகளின் விளைவுகளே. இந்தத் தவறுகளை திருத்தி விட்டால், மிச்சம் மீதி என்று எதுவும் இருக்காது.
இந்த உலகம் துக்கத்தை அனுபவிக்க ஏற்பட்ட ஒன்று அல்ல, சுகத்தை அனுபவிக்க உண்டானது. யாருடைய கணக்கில் எத்தனை வரவு இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தான் அனுபவிக்க முடியும். சிலர் வெறும் சுகத்தை மட்டுமே அனுபவிக்கிறார்கள், இது எதனால்? சிலர் வெறும் துக்கத்தையே அனுபவிக்கிறார்கள், இது எதனால்? இது அவரவர் கொண்டு வந்திருக்கும் கணக்கு இருப்பின்படி நடக்கிறது யாரெல்லாம் துக்கப்படுகிறார்களோ, அது அவர்கள் செய்த தவறுகளின் விளைவால் தான், மற்றவர்களின் தவறு அல்ல. யார் துக்கம் தருகிறார்களோ, அவர்கள், உலக கண்ணோட்டத்தின்படி தவறு செய்தவர்கள்; ஆனால் பகவானின் சட்டத்தின்படி, வேதனை படுபவர்களே தவறு செய்தவர்கள்.
விளைவுகள், நமது தவறுகளின் காரணமாகவே நாம் துக்கம் அனுபவிக்கும் போதெல்லாம், அது நமது தவறுகளின் விளைவுகளே. நமது தவறு இல்லை என்றால், நாம் துக்கம் அனுபவிக்கவே முடியாது. நமக்கு சற்றேனும் துக்கத்தை அளிக்க கூடியவர், இந்த உலகில் யாருமே இருக்க முடியாது. அப்படியே ஒருவர் துக்கம் அளித்தால், அது நமது தவறே ஆகும். அடுத்தவரின் தவறு இதில் ஏதும் இல்லை , அவர் கருவியாக மாத்திரமே இயங்குகிறார். ஆகையால், நாம் அனுபவிப்பது நமது தவறுகளின் விளைவே. "வேதனை படுபவரின் தவறே”
கணவன் மனைவிக்கு இடையே, கடுமையான சண்டை ஏற்படுகிறது, பிறகு இருவரும் படுத்து உறங்குகிறார்கள்; அப்போது நீங்கள் சத்தம் போடாமல் அவர்கள் இருவரையும் கவனித்தீர்கள் என்று சொன்னால், மனைவி அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பார், ஆனால் கணவனோ அமைதியிழந்து, இப்படியும் அப்படியுமாக திரும்பித் திரும்பிப் படுத்துக் கொண்டிருப்பார். இதிலிருந்து கணவனின் தவறுதான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். கணவன் குறட்டை விட்டுத் தூங்கும் போது, மனைவி இப்படியும் அப்படியுமாகத் திரும்பித் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தால், மனைவி தான் தவறு செய்திருக்கிறாள் என்றாகிறது. தவறு செய்தவர்கள், அவதிப்படுவார்கள். இது மிகவும் ஆழமான ஒரு அறிவியல். உலகம் எப்போதுமே கருவியாக இருப்பவரையே, குறை சொல்லும் இயல்புடையது.