________________
இருவரின் கண்களை கூட சந்தித்து கொள்ளமுடியாது. நீங்கள் யாருக்கெல்லாம் என்னவெல்லாம் கொடுத்தீர்களோ, அத்தனைக்கத்தனை உங்களுக்கு திரும்பக் கிடைத்தே தீரும்; அப்போது மகிழ்வோடு அவற்றை ஏற்றுக் கொண்டு, "அப்பாடா, கணக்கு தீர்ந்து கொண்டிருக்கிறதே” என்று சந்தோஷப் பெருமூச்சு விடுங்கள். இல்லையென்றால், மீண்டும் தவறு செய்தால், மீண்டும் துன்பப்பட நேரும்.
நாம் நமது தவறுகளின் விளைவுகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறோம். யார் கல்லெறிந்தார்களோ, தவறு அவருடையது அல்ல, கல் யார் மீது பட்டதோ, அவருடைய தவறு தான். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் எந்தவிதமான குறையோ, தவறுகளோ உங்களை பாதிக்கவில்லை என்றால், தவறு உங்களுடையது அல்ல; மாறாக பாதிப்பு ஏற்பட்டால், தவறு உங்களுடையது, என்று நீங்கள் உறுதியாக மனதில் கொள்ளுங்கள்.
இந்த வகையில் இதை ஆராயுங்கள்
தவறு யாருடையது? யார் வேதனைபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்காரன் தான் கையால், பத்து கண்ணாடி தேநீர்க் கோப்பைகளை உடைத்து விட்டால், வீட்டில் இருப்பவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா,மாட்டார்களா? வீட்டில் உள்ளவர்களில் குழந்தைகள் இருப்பார்கள், அவர்களுக்கு கவலையேதும் இருக்காது. ஆனால் அவர்களின் பெற்றோருக்கு கோபம் ஏற்படுகிறது; அதிலும் கூட தாய் தூங்கிவிடுகிறார். ஆனால் தனக்கு ஏற்பட்ட இழப்பை, தந்தை கணக்கிட்டு கொண்டே இருப்பார். பத்தைந்து என்றால் 50 ரூபாய் என்று நொந்து போகிறார். அவர் எச்சரிக்கையானவர் என்பதால், அதிகம் வேதனைபடுகிறார். இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம், யார் வேதனைபடுகிறார்களோ, அவர்களின் தவறு. இந்த வகையில் சூழ்நிலைகளை அலசி ஆராயும் போது, நீங்கள் ஆன்மீக முன்னேற்றம் அடைந்து, மோக்ஷத்தை அடைவீர்கள்.
வினா : நாம் என்ன தான் சிறப்பாக நடந்து கொண்டாலும், சிலர் புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறார்களே!!
தாதாஸ்ரீ : எதிரில் இருப்பவர்களுக்குப் புரியவில்லை என்றால், தவறு அவர்களுடையது அல்ல, உங்களுடையதே. மற்றவர்களிடம் தவறுகளைப் பார்ப்பது முற்றிலும் தவறானது. நம்மிடம் இருக்கும் தவறுகளின் காரணமாகவே, கருவியாக உள்ள ஒருவரை நாம் சந்திக்கிறோம். ஒரு உயிருள்ள கருவியானவரை, நொந்து கொள்கிறீர்கள், ஆனால் அதே உயிரில்லா கருவி ஒரு முள்ளாக இருந்தால், என்ன செய்வீர்கள்? நூற்றுக்கணக்கானவர்கள் இந்த வழியாகப் பயணிக்கிறார்கள், அவர்களுக்கு எந்தக் காயமும் படுவதில்லை; ஆனால் சந்தூபாய் நடக்கும் போது மட்டும் முள் குத்துகிறதே, ஏன்? "வ்யவஸ்தித் சக்தி”, (அறிவியல் ரீதியான சூழ்நிலை ஆதாரம்) மிகத் துல்லியமானது.
51