________________
உலக வாழ்வில் இலாபங்களுக்கான உத்திரவாதம் அளிக்கும் சத்சங்கம்
இங்கே என்னிடத்தில் பல வியாபாரிகள் வருகிறார்கள், அவர்கள் ஒருவேளை தங்கள் கடைகளுக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாகச் சென்றால், 500, 1000 ரூபாய் இழப்பு ஏற்படலாம். அவர்களிடத்தில் நான் கூறுவதாவது, "நீங்கள் என்னிடத்தில் வருவதால் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது; இதே நீங்கள் வழியில் ஏதோ ஒரு கடையில் அரைமணி நேரம் செலவு செய்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்படும். இங்கே வந்தீர்கள் என்றால், பொறுப்பு என்னுடையது; ஏனென்றால் நான் எந்த கொடுக்கல் வாங்கலிலும் ஈடுபடுவதில்லை. நீங்கள் உங்கள் ஆத்மநலனுக்காகவே இங்கே வருகிறீர்கள். ஆகையால் தான், நீங்கள் இங்கே வருவதால், உங்களுக்கு நஷ்டமேதும் ஏற்படாது என்கிறேன்”.
தாதாவின் சத்சங்கத்தின் அற்புதங்கள் கர்மத்தின் உதயம் மிகவும் தீவிரமாக இருக்குமேயானால், அதன் விளைவுகளும் அந்த அளவு கடுமையாக இருக்கும் என்பதால் நீங்கள் அமைதியுடன் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் சத்சங்கத்தில் தான் கர்மத்தின் கடுமையை தனித்து கொள்ள முடியும். இப்படி, தொடர்ந்து வாழ்நாளில் என்ன மாதிரியான கர்மங்கள் உதிக்கும் என்று கூற முடியாது!!
வினா : விழிப்புநிலை சிறப்பாக ஏற்பட என்ன வழி? தாதாஸ்ரீ : நீங்கள் சத்சங்கத்தில் இருந்தால் மட்டுமே போதுமானது, அது தான் வழி.
வினா : ஒருவர் உங்களுடன் 6 மாதங்கள் வந்தமர்ந்திருந்தால், அவரிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பிக்கும், பின்னர் சூட்சுமமான (நுண்ணிய) மாற்றங்களும் ஏற்படும் என்று தானே கூறுகிறீர்கள்?
தாதாஸ்ரீ ! ஆம். இங்கே அமர்ந்திருப்பதாலேயே மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விடும். ஆகையால், ஒருவர் ஞானியிடம் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 2, 3, 5 மணி நேரங்கள், எத்தனை மணி நேரம் செலவழிக்கிறீர்களோ, அத்தனைக்கத்தனை இலாபம் தானே!! ஞானம் அடைந்த பிறகு, "இனிமேல் நாம் ஏதும் செய்ய வேண்டியதில்லை” என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல, நிரந்திர விழிப்புநிலையின் அதிகரிப்பு, இன்னும் ஏற்படவில்லையே.
ஞானியின் அருகே இருத்தல் வினா : ஞான விதிப்படி ஆத்மஞானம் பெற்ற மஹாத்மாக்கள் முழுமை நிலை அடைய தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்?
27