________________
ஆணைகளையும் ஒன்று விடாமல் பின்பற்றுவேன்” என்று நீங்கள் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இந்த தீர்மானம் உங்களை ஆணையில் இருக்க செய்யும், இந்தத் தீர்மானம் தான் நான் வேண்டுவது.
ஆணைகளைப் பின்பற்றுவதை நீங்கள் மறந்தீர்கள் என்றால் பிரதிக்ரமணம் செய்ய வேண்டும். அதாவது "ஹே தாதா, 2 மணி நேரத்துக்கு உங்கள் ஆணைகளைப் பின்பற்றுவதை நான் மறந்து விட்டேன், ஆனால் நான் உங்கள் ஆணைகளைப் பின்பற்ற விரும்புகிறேன், என்னை மன்னித்தருளுங்கள்” என்று நீங்கள் மன்னிப்பு கோரினீர்கள் என்றால், நீங்கள் இதுவரை எழுதிய தேர்வுகளிலும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று விடுவீர்கள். உங்கள் மீது பழி இருக்காது. இடர்பாடுகள் விலகும். நீங்கள் மீண்டும் ஆணைகளைப் பின்பற்றும் வழிக்குத் திரும்பி விடுவீர்கள். எனது ஆணைகளைப் பின்பற்றும் போது உலகம் எந்த விதத்திலும் உங்களை தீண்டாது.
ஆணையைப் பின்பற்றுவதன் மூலம் மெய்யான முன்னேற்றம் நான் உங்களுக்கு ஞானம் அளித்திருப்பதன் வாயிலாக உங்களை ஆத்மா அல்லாதவைகளிடமிருந்து பிரித்திருக்கிறேன். "நான் சுத்தாத்மா” என்று உணர்வது, 5 ஆணைகளைப் பின்பற்றுவது தான் மெய்யான புருஷார்த்தம் (ஆன்மீக முயற்சி).
வினா : மெய்யான (ரியல்) புருஷார்த்தத்துக்கும், ஒப்பீட்டளவிலான (ரிலேடிவ்) புருஷார்த்தத்துக்கும் இடையே என்ன வேறுபாடு?
தாதாஸ்ரீ: மெய்யான புருஷார்த்தத்தில் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இல்லை. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால் மெய்யான புருஷார்த்தம் என்பதன் பொருள் "பார்ப்பது”, "அறிவது" என்று பொருள். அப்படியென்றால் ஒப்பீட்டளவிலான புருஷார்த்தம் என்றால்? உள்ளார்ந்த நோக்கம், அதாவது மனோபாவம் இருத்தல் என்று பொருள். நான் இதைச் செய்வேன் என்று கருதுவது.
சந்தூபாயாக நீங்கள் செய்து கொண்டிருந்தது மாயையான புருஷார்த்தம். ஆனால் "நான் சுத்தாத்மா” என்று நீங்கள் செய்யும் புருஷார்த்தம், 5 ஆணைகளைப் பின்பற்றும்போது செய்யும் புருஷார்த்தம் தான் மெய்யான புருஷார்த்தம்.
வினா - நீங்கள் விதைத்த இந்த ஞானம் தான் பிரகாசம். இது தான் ஜோதி இல்லையா?
தாதாஸ்ரீ : ஆம், அதுவே. ஆனால் இது விதை வடிவில் விதைக்கப்பட்டிருக்கிறது. மெல்ல மெல்ல பௌர்ணமியாக மலரும். ப்ரக்ருதியும்,ஆத்மாவும் (மனித இயல்பு, ஆத்மா) பிரிந்த பிறகு மெய்யான ஆன்மீகப் புருஷார்த்தம் ஆரம்பம் ஆகும். எப்போது புருஷார்த்தம் தொடங்கப்பட்டு விட்டதோ, அது நிலவின் இரண்டாம் நாளிலிருந்து பௌர்ணமி வரை கொண்டு சென்று விடும். ஆம். இந்த ஆணைகளை நீங்கள் பின்பற்றினால் இப்படி நடக்கும்.
23