Book Title: Simple and Effective Science For Self Realization Tamil
Author(s): Dada Bhagwan
Publisher: Dada Bhagwan Aradhana Trust

View full book text
Previous | Next

Page 27
________________ வி . நீங்கள் வேறேதும் செய்ய வேண்டாம், ஆணைகளைப் பின்பற்றியபடி மட்டும் இருந்தால் போதும். வினா : தாதா, ஆத்ம அனுபவம் ஏற்பட்ட பிறகான, புருஷார்த்தம் பற்றி சற்று விளக்குங்களேன். அந்த நபரின் உலக வாழ்க்கை உரையாடல் எவ்விதமாக இருக்கும்? தாதாஸ்ரீ : ஞானவிதி வாயிலாக ஆத்ம அனுபவம் அடைந்த நமது மஹாத்மாக்கள் உலக வாழ்வின் 5 ஆணைகளை பின்பற்றி நடப்பவர்கள். இந்த 5 ஆணைகளும் தான் நிஜமான புருஷார்த்தம். தாதா என்பவர் 5 ஆணைகள் தான். 5 ஆணைகளைப் பின்பற்றுதல் தான் புருஷார்த்தம். இந்த 5 ஆணைகளைப் பின்பற்றுவதின் பயன் என்ன? அனைத்தையும் "அறிந்தவர் - பார்ப்பவர்” (ஆத்மாவின் குணம்) என்ற நிலையில் இருக்க உதவி செய்யும். யவரேனும் என்னை நிஜமான புருஷார்த்தம் என்ன என்று கேட்டால்? அதற்கு என் விடை, அனைத்தையும் "அறிந்தவர் - பார்ப்பவர்” என்ற நிலையில் இருப்பது தான். இந்த 5 ஆணைகளும் உங்களுக்கு இந்த நிலையைக் காக்க கற்றுத் தரும். மெய்யுணர்வோடு யார் இந்த 5 ஆணைகளையும் பின்பற்றுகிறார்களோ, அந்த நபருக்குக் கண்டிப்பாக என் அருள் சித்திக்கும். 12. ஆத்ம அனுபவத்தின் 3 படிநிலைகள் - அனுபவம், விழிப்புநிலை, உறுதிப்பாடு வினா : ஆத்ம அனுபவத்தின் பின்பு என்ன ஏற்படுகிறது? தாதாஸ்ரீ : ஆத்ம அனுபவம் ஏற்பட்ட பின்னர்,"நான் இந்த உடல்” என்ற உணர்வு அற்றுப் போகிறது, அதாவது புதிய கர்மங்கள் கட்டுவது நிறைவடைந்து விடுகிறது. இதைவிட வேறு என்ன வேண்டும், சொல்லுங்கள்? முன்னர் சந்தூபாய் என்னவாக இருந்தார், இன்று அவர் என்னவாக இருக்கிறார் என்பது தெளிவாகும். இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? ஆத்ம அனுபவம் ஏற்படும் முன்பு இந்த உடல் தான் நான் என்ற அனுபவம் இருந்தது, இப்போது ஆத்ம அனுபவம் ஏற்பட்டிருப்பதால். “நான் சுத்தாத்மா” என்ற உணர்வை பெறுகிறோம். உறுதிப்பாடு என்றால் 100 சதவீதம்முழுமையான நம்பிக்கை "நான் சுத்தாத்மா தான் என்ற நிலைப்பாடு உண்டாகி விட்டது; "நான் சுத்தாத்மா” என்ற நம்பிக்கை மறைந்தாலும், உறுதிப்பாடு என்பது சிதையாது. நம்பிக்கை மாறலாம், ஆனால் உறுதிப்பாடு மாறாது. எடுத்துக்காட்டாக நாம் ஓரிடத்தில் ஒரு மரக்கட்டையை வைக்கிறோம், அதன் மீது ஏகப்பட்ட அழுத்தம் கொடுத்தோம் என்றால், அது வளைந்து கொடுக்குமே ஒழிய அதன் 24

Loading...

Page Navigation
1 ... 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64