________________
புண்ணியசாலிகளுக்கு மட்டுமே எப்போதாவது இப்படிப்பட்ட மார்க்கம் சித்திக்கும். உலகின் பதினோராவது அதிசயம் என்று அழைக்கப்படுகிறது. அக்ரம் மார்க்கத்தில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டாரோ, அவரது வேலை நடந்து முடிந்து விட்டது என்று கருதிக் கொள்ளுங்கள்.
"அக்ரம் மார்க்கம்” தொடர்ந்து கொண்டு இருக்கிறது
நான் பெற்ற இன்பம் நீங்களும் அடைய வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறேதும் எண்ணம் இல்லை. இப்படி உங்கள் நலனுக்காக ஏற்பட்ட விஞ்ஞானம் எளிதில் மறைந்து விடாது. என் காலத்திற்குப் பின்னர் ஞானிகளின் வம்சாவளியை விட்டுச் செல்வேன். இந்த ஞானியின் சந்ததியினரை,விட்டு விட்டுச் செல்வேன். அதற்குப் பின்னர் ஞானிகளின் சங்கிலித் தொடர் தொடர்ந்த வண்ணம் இருக்கும். ஆகையால் வாழும் ஞானியைத் தேடுங்கள். அவரில்லாமல் தீர்வு என்பது ஏற்படாது.
நான் என் கைகளாலேயே சிலருக்கு சித்தியளிக்க இருக்கிறேன். என் காலத்திற்கு பிறகு யவரேனும் இருக்க வேண்டும் அல்லவா? வருங்கால தலைமுறைக்கு இந்த மார்க்கம் தேவைபடும் அல்லவா?
9. ஞானவிதி என்றால் என்ன?
வினா: உங்கள் ஞானவிதி என்றால் என்ன?
தாதாஸ்ரீ: ஞானவிதி செயல்முறையானது ( அறிவியல் ரீதியாக ஆத்ம அனுபவத்தை ஏற்படுத்துவது), உடலில் உள்ள ஆத்மாவையும், அனாத்மாவையும் பிரித்து விடுவது என்று பொருள். சுத்தமான ஆத்மாவையும் மற்ற அனாத்மாவையும் பிரிப்பது என்பதாகும்.
வினா : இந்த சித்தாந்தம் என்னவோ சரி தான், ஆனால் இதற்கான வழிமுறை என்ன, என்பதை அறிந்து கொள்ள வேண்டுமே?
தாதாஸ்ரீ : இதில் எந்த ஒரு கொடுக்கல் வாங்கலும் கிடையாது, இங்கே அமர்ந்து கொண்டு, நான் கூறுவது போலவே பிசகாமல் அப்படியே கூற வேண்டும். ("நான் யார்" என்பதை அடையாளம் தெரிந்து கொள்ளும் இந்த ஞானம், இரண்டே மணி நேரத்தில் ஏற்படும்; இதில் 48 நிமிடங்கள், ஆத்மா - ஜடத்தை பிரிக்கும், பேத விஞ்ஞானத்தின் வாக்கியங்களை உச்சரிக்க வேண்டும். இதை அனைவருமாக இணைந்து உரைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் எடுத்துக் காட்டுகளுடன், "5 ஆணைகள்”அளிக்கப்பட்டு, விரிவான விளக்கத்துடன் புரிய வைக்கப்படுகிறது. புதிய கர்மவினை ஏற்படாதிருக்கும் வகையில் எப்படி எஞ்சிய உங்கள் வாழ்க்கையை வாழ்வது என்பது பற்றி தெளிவுறுத்தப்படும். பழைய கர்மவினையைக் கரைக்கும் வழிகளும்
18