________________
அர்ப்பண விதியை யார் ஏற்படுத்திக் கொடுக்க முடியும்?
வினா : ஞானம் பெறும் முன்பாக செய்யப்படும் அர்ப்பண விதிப்படி, முதலில் ஒரு குருவிடம் அர்ப்பணம் செய்யப்பட்டிருந்தால், இங்கே மீண்டும் ஒரு அர்ப்பணம் செய்யப்படுமானால், இது சரி என்று சொல்ல முடியுமா?
தாதாஸ்ரீ : அர்ப்பணவிதியை குரு செய்வதே இல்லை. இங்கே எதை எதை எல்லாம் அர்ப்பணம் செய்ய வேண்டும்? ஆத்மாவைத் தவிர அனைத்தையும். அதாவது மொத்த முழுவதுமாக யாரும் அர்ப்பணிப்பது இல்லை, அல்லவா? எதுவும் அர்ப்பணிக்கப்படுவதுமில்லை எந்த ஒரு குருவும் அப்படிச் செய்ய சொல்வதுமில்லை. அவர்கள் உங்களுக்கு வழியை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றுகிறார்கள். நான் (தாதாஸ்ரீ) குருவாக இருப்பதில்லை,நான்(தாதாஸ்ரீ) ஞானி,ஒருவன் பூரண ஆத்மாவின் தரிசனத்தை அடைய வேண்டும். என்னிடத்தில் எதையும் அர்ப்பணிக்க வேண்டாம், பகவானிடத்தில் (என் உள்ளில் இருக்கும் பூரண ஆத்மா) தான் அர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஆத்ம உணர்வு எந்த வகையில் ஏற்படுகிறது?
வினா : "நான் ஆத்மா” என்கிற ஞானம் எந்த வகையில் ஏற்படுகிறது? அதை ஒருவன் எப்படி அனுபவிக்க முடியும்?
தாதாஸ்ரீ : இந்த அனுபவத்தை ஏற்படுத்த தான் நாங்கள்"ஞானி”இருக்கிறோம். இங்கே நாங்கள் ஞானத்தை அளிக்கும் போது ஆத்மா, அனாத்மா இரண்டையும் பிரித்த பின், இரண்டை பற்றிய ஞானத்தை அளித்து உங்களை அனுப்பி வைக்கிறோம்.
ஞானம் என்பதை தனக்கு தானே பெற முடியாது. தனக்கு தானாகவே செய்ய முடிந்தால் அது துறவிகள், சன்னியாசிகள் எல்லோரும் செய்து முடித்திருப்பார்கள். ஆனால் "ஞானியின்” வேலை, இது ஞானிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒன்று.
எப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள ஒரு மருத்துவரின் தேவை இருக்கிறதா இல்லையா? அல்லது மருந்துகளை நீங்களே உங்கள் வீட்டிலேயே தயாரித்து கொள்கிறீர்களா? மருந்துகள் எடுத்துக் கொள்ளும் விஷயத்தில் நீங்கள் எப்படி விழிப்போடு இருக்கிறீர்கள், ஏதேனும் தவறாக எடுத்துக் கொண்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று. ஆனால் ஆத்மா தொடர்பான விஷயத்தில் தனக்குதானே குளறுப்படியில் ஈடுபடுகிறார்கள்.சாத்திரங்களை குருவிடம் புரிந்து கொள்ளாமல்,தன்னுடைய சுய புத்தியால் புரிந்து கொண்டு, குடித்து விடுகிறார்கள். தவறான மருந்துகளை எடுத்துக் கொள்வது போல, அது குளறுபடியில் தான் முடியும். இதை பகவான் பொறுப்பற்றதன்மை என்று
10