________________
நடந்து கொள்ள வேண்டும் என்பதை, உங்கள் ஆத்மா உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறது, இதுதான் ஆத்மாவின் சக்தி; ஒருமுறை அப்படி உங்களுக்குக் காட்டி விட்டால், அந்த ஞானம் உங்களை விட்டு விலகாது. இப்படி மேலும் மேலும் நீங்கள் செய்து பழகும் போது, உங்களின் "இயல்பறிவு” அதிகரிக்கும்.
ஒரு சுவற்றைப் பற்றி தப்பான எண்ணம் வந்தால், பெரிய பாதகம் இல்லை, ஏனென்றால் பாதிப்பு ஒருதலைப் பட்சமானது. ஆனால் ஒரு உயிருள்ள ஜீவனை பற்றி தப்பான எண்ணம் கொண்டால், பாதிப்பு இருதரப்பினருக்கும் ஏற்படும். ஆனால் பின்னர் நாம் ப்ரதிக்ரமணத்தில் ஈடுபட்டால், அனைத்துத் தவறுகளும் மறைந்து போகும். ஆகையால் எங்கெல்லாம் மோதல்கள், உரசல்கள் ஏற்படுகின்றனவோ, ப்ரதிக்ரமணத்தில் ஈடுபடுங்கள், மோதல்கள் முடிவடைந்து விடும்.
யார் ஒருவர் மோதலில் ஈடுபடுவதில்லையோ, அவருக்கு மூன்றே பிறவிகளில் மோக்ஷம் சித்திக்கும், இதற்கு நான் உத்திரவாதம் அளிக்கிறேன். மோதல் ஏற்பட்டு விட்டால், உடனடியாக பிரதிரமணத்தில் ஈடுபட்டு விடுங்கள். மோதல்கள் ஏற்படுவது இயல்பு தான். பாலியல் தொடர்புகள் இருக்கும் வரை இப்படிப்பட்ட மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கும். பாலுறவும்,புலனின்பங்களும் தான் மோதல்களுக்கான வேரடிக் காரணம். யார் பாலியல் உணர்வுகளை வென்றவர்களோ, அவர் அனைத்தையும் வென்றவராவார். அவரை தோற்கடிக்கவே முடியாது, அப்படிப்பட்டவர், பார்ப்போர் அனைவரையும் கவர்கிறார்.
எது நடந்ததோ, அது நியாயமே
இயற்கை நீதி நிறைந்ததே இயற்கை என்றுமே நீதி தவறாதது. ஒரு கணம் கூட, அதில் அநீதியைக் காண முடியாது. எந்தக் காலத்திலும் இயற்கை, நீதி தவறி நடந்ததே இல்லை. நீதிமன்றத்தில் அநீதி இழைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இயற்கை அநியாயமாக நடந்ததே கிடையாது.
இயற்கையின் நீதியை நீங்கள் புரிந்து கொண்டால், "எது நடந்ததோ, அது நியாயமே” என்பதை ஏற்றுக்கொள்வீர்கள். அப்போது, நீங்கள் இந்த உலகிலிருந்து விடுதலை அடைவீர்கள்; மாறாக இயற்கையிடம் சற்றுக்கூட அநீதி இருப்பதாக நீங்கள் கண்டால், அது தான் உங்கள் துயரங்களுக்கான காரணமாக அமையும். இயற்கை என்றுமே நீதி நிறைந்தது என்பதை, புரிந்து ஏற்பதன் பெயர் தான் "ஞானம்”. "இருப்பதை அப்படியே”,ஏற்றுக் கொள்ளாதது அஞ்ஞானம் (அறியாமை).
43