________________
ஒரு கணம் கூட, உலகம் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதில்லை. யாருக்கு நற்பலன்கள் அளிக்க வேண்டுமோ, அவர்களுக்கு வெகுமதி அளிக்கிறது, யாருக்குத் தண்டனை அளிக்க வேண்டுமோ, அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது. உலகம் நியாயத்துக்கு வெளியே இருப்பதில்லை. நியாயத்திலேயே அமைந்திருக்கிறது. முழுமையான நியாயவடிவானதாக இருக்கிறது. ஆனால், தன்னுடைய அஞ்ஞான கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முடியாததால், இது புலப்படாது, புரியாது. தூய்மையான கண்ணோட்டம் அடைந்தால் நியாயம் புலப்படும், புரியும். சுயநலக் கண்ணோட்டம் இருந்தால், நியாயம் எப்படி புலப்படும்?
நாம் ஏன் பாதிக்கப்படுகிறோம்? நாம் ஏன் துன்பப்படுகிறோம், இதைத் தெரிந்து கொள்ள முயலுங்களேன்? நாம், நமது தவறுகளால் கட்டுண்டு கிடக்கிறோம், மற்றவர்கள் நம்மை வந்து கட்டிப் போடவில்லை. இந்தத் தவறுகள் சிதையும் போது, நாம் முக்தர்கள் ஆகிறோம். நாம் இயல்பாகவே முக்தர்கள் தான் என்றாலும், தவறுகள் காரணமாகவே, நாம் துன்பத்தில் உழல வேண்டியிருக்கிறது.
உலகின் இயல்பு, பற்றிய ரகசியஞானம், மக்களின் இலட்சியமாக இருப்பதே இல்லை, இதனால் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது. அஞ்ஞானம் பற்றிய தகவல்கள், அனைவருக்கும் தெரிந்து தான் இருக்கிறது. ஜேப்படித் திருட்டு உங்களிடம் செய்யப்பட்டிருந்தால், யாருடைய தவறு? இவரிடம் ஜேப்படித் திருட்டு ஏன் நடக்கவில்லை, உங்களிடம் மட்டும் ஏன் நடந்தது? யார் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? "பாதிக்கப்படுபவரின் தவறு” தான் காரணம்.
வேதனைப்படுவது தன்னுடைய தவறின் காரணத்தால் யார் துக்கத்தை அனுபவிக்கிறார்களோ, அது அவர்களின் தவறு காரணமாகவே, யார் சுகத்தை அனுபவிக்கிறார்களோ, அது அவர்களுக்குக் கிடைத்த வெகுமதி. ஆனால், மாயை காரணமாக, நாம் கருவியாக பயன்படுபவரைப் பிடித்து நொந்து கொள்கிறோம். பகவானின் மெய்யான சட்டம், என்னவென்றால்,யாருடைய தவரோ அவரே பிடிக்கப்படுவார். இந்தச் சட்டம் துல்லியமானது, இதை யாராலும் மாற்ற முடியாது. யாருக்கும் சுகதுக்கங்களை ஏற்படுத்தும் எந்த ஒரு அதிகாரமும், இந்த உலகில் இல்லை .
கண்டிப்பாக நம்மிடத்தில் தவறு ஏதோ இருக்க வேண்டும், அப்போதுதான் மற்றவர்கள் குறை கூறுவார்கள், அல்லவா? அதனால் அந்தத் தவற்றை நாம் ஏன் அழித்து விடக் கூடாது? இந்த உலகில், ஒரு உயிர் மற்றதொரு உயிருக்கு தீங்கேதும் செய்துவிட
48