________________
தெரிந்து இருக்காது, மாறாக மூன்றாவதாக ஒரு குண இயல்பு உருவாகி இருக்கும். ஆனால் அப்படி இல்லை. அவை ஒரு கலவையாக மட்டுமே ஆகி இருக்கிறது.
ஞானி, உலகின் மிகப் பெரிய விஞ்ஞானி ஞானி தான், உலகின் மிகப்பெரிய விஞ்ஞானி, அவருக்கு மட்டுமே தெரியும், அவரால் மட்டுமே இரண்டையும், தனியாக பிரிக்க முடியும். அவர் ஆத்மா-அனாத்மா ஆகியவற்றைப் பிரித்தெடுப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் பாவங்களைச் சுட்டுப் பொசுக்கி சாம்பலாக்கி விடுகிறார். திவ்ய பார்வையை அளிக்கிறார், பிறகு இந்த உலகம் என்பது என்ன? "இது எப்படி இயங்குகிறது?” “யார் இதை இயக்குகிறார்கள்?” போன்றவை, பற்றிய அனைத்து விதமான விளக்கங்களையும் அளிப்பார், அந்த நிலையில் தான் உங்கள் வேலை பூர்ணத்துவம் அடைகிறது.
கோடிக்கணக்கான பிறவிகளின் பலனாக பூண்ணியம் உதிக்கும் பொழுது மட்டுமே ஞானியின் தரிசனம் கிடைக்கும்; இல்லையென்றால், தரிசனம் கிடைப்பதே இயலாத ஒன்றாகி விடும். ஞானத்தை அடைவதற்கு ஞானியை முதலில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு வழியே இல்லை. தேடுபவருக்கு அவர் கண்டிப்பாக கிடைத்துவிடுவார்.
6. ஞானி என்பவர் யார்?
துறவி, ஞானி என்பவரை பற்றிய விளக்கம். வினா : துறவிகளுக்கும், ஞானிக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
தாதாஸ்ரீ : துறவிகள் பலவீனங்களிலிருந்து விடுதலை அளிப்பவர்கள், நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பவர்கள்; தவறான செயல்களிலிருந்து விடுதலை அளித்து நல்ல விஷயங்களை உங்களிடம் ஒப்படைப்பவர்கள் துறவிகள். பாவங்களிலிருந்து உங்களை விலக்கி வைப்பவர்கள் துறவிகள். ஆனால் யார் பாவம் புண்ணியம் இரண்டிலிருந்து காப்பாற்றுகிறார்களோ அவரை "ஞானி” என்று சொல்வோம். துறவிகள் சரியான பாதையில் உங்களைக் கொண்டு செல்பவர்கள். ஞானிகளோ உங்களுக்கு முக்தியை அளிப்பவர்கள். ஞானி இறுதி இலக்கு உங்களுக்கு அளிப்பவர்கள். உண்மையான ஞானி யார்? யாரிடத்தில் அஹங்காரமும், "தான்” என்ற உணர்வும் இல்லையோ அவரே உண்மையான ஞானி.
யாருக்கு ஆத்மா பற்றிய முழுமையான அனுபவம் ஏற்பட்டு விட்டதோ, அவரே ஞானி. ஆவரால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை பற்றிய விவரங்களை அளிக்க முடியும். அவரிடத்தில் அனைத்து வினாக்களுக்குமான விடைகள் உண்டு. ஞானி,என்றால் உலகின் அதிசயம், ஞானி, என்றால் ஒளிவிளக்கு.
12