________________
போக்குவரத்து விதிகளால் விபத்துக்களுக்கு தடை ஒவ்வொரு மோதலிலும் இருதரப்பும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். நீங்கள் எதிராளிக்கு துக்கம் ஏற்படுத்தும் அதே நேரத்தில், உங்களுக்கு துக்கம் ஏற்படுவதிலிருந்து தப்ப முடியாது. ஆகையால் தான் நான் போக்குவரத்து விதிகள் பற்றிய எடுத்துக்காட்டை அளிக்கிறேன். நீங்கள் ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தால், அதில் உங்களுக்கு மரணம் ஏற்படலாம், விபத்தில் ஆபத்து இருக்கிறது. ஆகையால் யாருடனும் மோதலில் ஈடுபடாதீர்கள். இதைப் போலவே சராசரி வாழ்க்கையின்செயல்களில் யாருடனும் மோதாதீர்கள்.
யாராவது உங்களுடன் மோதும் நோக்கத்தில் வந்தாலோ, துப்பாக்கித் தோட்டாக்களைப் போன்ற சுடுசொற்களைப் பேசினாலோ, மோதலை தவிர்க்க வேண்டும் என்று நீங்கள் உடனடியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது; அப்படியே ஒருவேளை பாதிப்பு ஏதேனும் ஏற்பட நேர்ந்தால், எதிராளியின் மனது உங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள். அந்த வேளையில் நீங்கள் அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுங்கள். உங்களின் புரிதல் அதிகரிக்க அதிகரிக்க, உங்களால் மோதல்களைத் தவிர்க்க இயலும். மோதலைத் தவிர்ப்பதன் மூலம் தான் மோக்ஷத்தை அடைய முடியும்.
உலகம் சச்சரவுகள் - மோதல்களின், முடிவாக உண்டானது. பழிவாங்குதலின் விளைவால் தான் ஏற்பட்டது உலகம் என்றார் பகவான். ஒவ்வொரு மனிதன் மட்டுமில்லாது, ஒவ்வொரு உயிரினத்திடமும் வஞ்சம் குடிகொண்டிருக்கிறது. ஆத்மசக்தி அனைவரிடமும் ஒன்றுபோல நிறைந்திருக்கிறது. இந்த உடலின் பலவீனத்தின் காரணத்தால் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது; ஆனால் சகித்துக் கொள்ளும் அதே வேளையில் வன்மம் இல்லாமல் இருப்பதில்லை. மீண்டும் அடுத்த பிறவியில் மனதில் குடிகொண்டிருக்கும் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறார்.
ஒரு நபர் எத்தனை கடுமையான சொற்களை உதிர்த்த போதிலும், அவருடன் நாம் மோதலில் ஈடுபட கூடாது. நமது சொற்களால் மற்றவர்களுக்கு துக்கம் ஏற்படுமேயானால், அது மிகப் பெரிய குற்றம்.
39