________________
குற்றம் கூறாதீர்கள், அனுசரித்துச் செல்லுங்கள் வீட்டில் அனுசரித்து நடக்கத் தெரிந்திருக்க வேண்டும். சத்சங்கம் சென்ற பின், காலதாமதமாக நீங்கள் வீடு திரும்பினால், வீட்டில் என்ன கூறுவார்கள்? "கொஞ்சமாவது நேரம் காலம் பத்தின எண்ணம் இருக்கணுமா இல்லையா?” என்பார்கள். ஏன் ஒரு கணவன் இப்படி அவதிக்குள்ளாக வேண்டும்? இது அவரது கடந்த பிறப்பின் கர்மபலன் தான். அவரது முந்தைய பிறப்பில் அவர் மற்றவர்களை அதிகம் சாடியிருக்கிறார். அப்போது அவரிடம் அதிகாரம் இருந்தது. இப்போது அவரிடத்தில் அதிகாரம் இல்லாத நிலையில், அவர் முனகாமல் அனுசரித்து நடக்கப் பழக வேண்டும். ஆகையால் இந்த பிறப்பில் கூட்டிக் கழித்து விடுங்கள். எதிரில் இருப்பவர் பழித்துப் பேசினா, அதை கேட்டுக் கொள்ளுங்கள். உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள், குறை சொல்லாதீர்கள்.
ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரும் அனுசரித்து நடக்க வேண்டும் என்ற உறுதி மேற்கொண்டால், அவர்கள் கண்டிப்பாகத் தீர்வு காண்பார்கள். ஒருவர் அதிகம் விறைத்துக் கொண்டிருந்தால், மற்றவர் அனுசரித்து நடந்தால், தீர்வு பிறக்கும். அனைத்து இடங்களிலும் அனுசரித்துச் செல்லவில்லை என்றால், உங்களுக்குப் பித்து பிடித்துப் போகும். மற்றவர்களுடன் ஏற்பட்ட இடைவிடாத சச்சரவு தான் உங்களின் இந்தப் பித்துப்பிடித்த நிலைக்குக் காரணம்.
யார் அனுசரித்து நடக்கும் கலையைக் கற்றவர்களோ, அவர்களே மோக்ஷப் பாதையில் முன்னேறுபவர்கள். தினசரி வாழ்க்கையில் அனுசரித்துச் செல்வதன் பெயர் தான் ஞானம். அனுசரித்துச் செல்லப் பழகியவர்களால் தான் கரையைக் கடக்க முடியும். இதுவே ஒருவரின் மிகப் பெரிய வெற்றி.
சிலரிடம் இரவில் நேரம் கழித்துத் தூங்கும் பழக்கம் இருக்கிறது, சிலரிடமோ சீக்கிரம் உறங்கும் பழக்கம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரு சாராரிடத்தில் சமநிலை எவ்வாறு ஏற்படும்? ஒரு குடும்பத்தில் இப்படிப்பட்ட இருவகைப் பட்டவாகள் வசிக்க நேர்ந்தால் என்னவாகும்? வீட்டில் ஒருவர் உங்களிடம், "நீ ஒரு முட்டாள்” என்றால், அவர் அப்படிப்பட்ட வாக்கியங்களைத் தான் பயன்படுத்துவார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவருடன் மேலும் மேலும் நீங்கள் வாதம் புரியத் தொடங்கினால், நீங்கள் தான் களைத்துப் போவீர்கள். அவர் உங்களோடு மோதலில் ஈடுபட்டார், திரும்ப நீங்களும் அவருடன் மோதினீர்கள் என்று சொன்னால், நீங்களும் பார்வை இழந்தவர் ஆகிவிட்டீர்கள் என்று உறுதி ஆகிவிட்டது.
36