Book Title: Aparokshanubhuti Bengali Author(s): Shankaracharya Publisher: Unknown View full book textPage 1
________________ SRI ADI SHANKARACHARYA'S APAROKSHANUBHUTI (OR) DIRECT SELF-REALIZATION ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் அபரோக்ஷ அநுபூதி அல்லது நேரடி அனுபவம் அறிமுகம் அபரோக்ஷ அநுபூதி என்ற இந்த பிரகரணம் 144 சுலோகங்களை கொண்டது. 'நானே பிரஹ்மம்' என்ற அநுபவம் அபரோக்ஷமாக, அதாவது நேரடியாக அல்லது ப்ரத்யக்ஷமாக ஏற்படுவதற்கு வேண்டிய சாதனங்களை இதில் கூறுகிறார். ஜீவர்களையும் பிரபஞ்சத்தையும் வேறாகத் தெரிந்து கொண்டிருக்கும் வரை அத்வைத பிரஹ்ம சாக்ஷாத்காரம் ஏற்படாது. அதற்காக, சாதன சதுஷ்டயத்தை முதலில் காட்டுகிறார். தேஹாதிகள் ஆத்மாவல்ல, ஜீவ ஸ்வரூபம் ஒன்றுதான், அது பிரஹ்மம்தான், பிரபஞ்சமும் உண்மையில் பிரஹ்மத்தைக் காட்டிலும் (பிரஹ்மத்திலிருந்து) வேறல்ல, வேற்றுமைக்கு காரணம் அக்ஞானம்தான் என்பனவற்றைப் பல யுக்திகளாலும் உபநிஷத பிரமாணங்களாலும் தீர்மானிக்கிறார். ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொண்ட தத்துவத்தை அனுபவத்தில் அடைவதற்கு 15 அங்கங்களுடன் கூடிய ராஜ யோகத்தை நிரூபணம் செய்கிறார். மனோ தோஷங்கள் அதிகமாக இருந்தால் இந்த ராஜ யோகத்துடன் ஹட யோகத்தையும் அப்பியசிக்க வேண்டும். இல்லா விட்டால் ராஜ யோகம் மட்டும் போதுமானது. இந்த சாதனங்களால் ஏற்படுகிற ஞான நிஷ்டையைக் காட்டி உலகத்தோரின் பார்வையில் தேஹமுள்ளவராகத் தோன்றிய போதிலும் ஞானிகளின் பார்வையில் ப்ராரப்தமும் கிடையாது என்று தீர்மானித்து 'ப்ராரப்தம் மட்டும் எஞ்சி நிற்கும்' எனக் கூறும் சுருதியின் தாத்பர்யத்தையும் (அர்த்தத்தையும் விளக்குகிறார். குரு தேவதா ஸ்வரூபமான ஹரியின் நமஸ்காரத்துடன் தொடங்கும் இந்த நூலின் கடைசியில் குருவினிடமும் ஈசுவரனிடமும் பக்திPage Navigation
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ... 53