________________
தனித்திடுங்கள். உதாரணத்திற்கு, "எனது இருதயம்”, என்பதில் இருதயத்தை தனித்திடுங்கள். இந்த உடலில் வேறு எதை எதையெல்லாம் உங்களால் பிரிக்க முடியும்?
வினா :கால்கள், புலனுறுப்புகள்
தாதாஸ்ரீ : சரி, அனைத்தையும், ஐந்து புலன்களும், ஐந்து செயல் உறுப்புகள் மனதுபுத்தி-சித் (ஞானமும், திவ்ய பார்வை) - அஹங்காரம் அனைத்தும். பிறகு "எனது அஹங்காரம்”, சொல்வீர்களா? இல்லை, "நான் தான் அஹங்காரம்” என்று சொல்வீர்களா?
வினா : எனது அஹங்காரம்.
தாதாஸ்ரீ : “எனது” அஹங்காரம் என்று சொல்வீர்களானால் அதை பிரித்து விடமுடியும். ஆனால் முன்னர் இருக்கும் "எனது” பகுதியில் எதுவெல்லாம் பங்கு கொள்கிறது என்பது பற்றி உங்களுக்கு திெயாததால், முழுமையாக உங்களுக்கு பிரிக்க முடியாவில்லை. உங்களின் விழிப்புணர்வு எல்லைக்குட்பட்டது. நீங்கள் சில வரைமுறை வரை தான் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் மொத்த (வெளிப்புறத்தை) மட்டுமே அறிவீர்கள், சூட்சமமானவற்றை, அதிசூட்சுமத்தைப் பற்றிய தெளிவு உங்களிடம் இல்லை. ஆதலால் ஞானி ஒருவர் தான் அதை பிரிக்க முடியும்.
ஆனால் ஒவ்வொரு உதிரிபாகத்தை எல்லாவற்றையும் பிரித்து கொண்டு போனால் “நான்” என்பதையும் “எனது” என்பதையும் பிரிக்க முடியும் அல்லவா? “நான்” என்பதையும் "எனது” என்பதையும் தனித்தனியாக பிரித்துக் கொண்டே சென்றால் கடைசியில் எது மிஞ்சும்? "எனது” என்பதை ஒரு புறம் வைத்தால், கடைசியில் என்ன மிஞ்சும்?
வினா : “நான்”.
தாதாஸ்ரீ : இந்த "நான்" தான் நீங்கள். இந்த "நான்” என்பதை தான் நீங்கள் உணர வேண்டும்.
அந்த இடத்தில் தான் எங்களின் (ஞானியின்) தேவை உங்களுக்கு ஏற்படும். நான் உங்களிடத்தில் இவை அனைத்தையும் தனித்தனியே பிரித்து விடுவேன். பிறகு நீங்கள் உங்களை "சுத்தாத்மாவாக” உணர்வீர்கள். இந்த அனுபவத்தைத் தவிர நான் உங்களுக்கு திவ்யப் பார்வையையும் அளிக்கிறேன். அப்போது தான் உங்களுக்கு அனைத்து உயிர்களிலும் இருக்கும் ஆத்மாவை பார்க்க இயலும்.
4. “நான்” என்பதை எவ்வாறு அடையாளம் காண்பது?
ஜபம் தபம், விரதமும் நியமமும் வினா : விரதம், தபம், நியமம் எல்லாம் அவசியமானவையா என்ன?
தாதாஸ்ரீ : வேதியியல் நிபுணரிடம் இருக்கும் அனைத்து மருந்துகளுமே முக்கியமானவை தான். ஆனால், உங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இதைப் போலவே விரதங்கள், தவங்கள், நியமங்கள்