________________
"நான்” “எனது” என்பது வெவ்வேறு ஆனவை. உங்களை “நான்” என்பதையும் "எனது” என்பதையும் தனித்தனியே பிரியுங்கள் என்று சொன்னால், உங்களால் பிரிக்க முடியுமா? "நான்" என்பதையும், "எனது" என்பதையும் பிரிக்க விரும்புகிறீர்களா? உலகில் எப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? எப்படி பாலிலிருந்து க்ரீமைத் தனியே பிரித்தெடுக்கிறோமோ, அதே மாதிரியே "நான்”, “எனது” யை தனியே பிரித்தெடுக்க வேண்டும். உங்களிடம் "எனது" என்று ஏதேனும் பொருள் இருக்கிறதா? “நான்” என்பது தனித்து இருக்கிறதா, இல்லை அது "எனது” உடன் இணைந்து இருக்கிறதா?
வினா : "எனது” இணைந்தே தான் இருக்கும் அல்லவா? தாதாஸ்ரீ : அப்படியென்றால் உங்களிடம் "எனது” என்று எதுவெல்லாம் இருக்கிறது? வினா : எனது வீடு, எனது வீட்டில் இருக்கும் அனைத்துப் பொருட்களும்.
தாதாஸ்ரீ : அனைத்தும் உங்களுடையதா? அப்படியென்றால் உங்கள் மனைவி யாருக்கு உரியவர்?
வினா : அவளும் எனக்குரியவள் தான். தாதாஸ்ரீ : அப்படியென்றால் பிள்ளைகள் யாருடையது? வினா : அவர்களும் என்னுடையவர்கள் தான். தாதாஸ்ரீ : சரி, அப்படியென்றால் இந்தக் கடிகாரம்? வினா: அதுவும் என்னுடையது தான். தாதாஸ்ரீ : இந்தக் கை யாருடையது? வினா : இந்தக் கையும் என்னுடையதே.
தாதாஸ்ரீ : பிறகு, "எனது கை, எனது உடல், எனது கால்கள், எனது காதுகள், எனது கண்கள்” என்று கூறுவோம். இந்த உடலின் அனைத்து பாகங்களையும் "எனது" என்று கூறுகிறோம். அப்பொழுது "எனது” என்று கூறும் "நீங்கள்” யார்? இதைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? எனது பெயர் "சந்தூபாய்” சொல்லும்பொழுது பின்பு "நான் சந்தூபாய்”
என்று கூறும் போது, இதில் ஏதேனும் முரண்பாடு இருக்கிறது என்று உங்களுக்குப் புரிகிறதா?
வினா : புரிகிறது.
தாதாஸ்ரீ : நீங்கள் சந்தூபாய், சரி. ஆனால் இதில் “நான்” என்பதும், "எனது" என்பதும் இரண்டும் இருக்கிறது. இந்த "நான்” என்பதும் "எனது” என்பதும் தண்டவாளங்களைப் போல் தனித்தனியானது. இணை கோடுகள் போல் இருக்கும், எப்போதும் இவை ஒன்றிணைவது இல்லை, இருந்தாலும் கூட நீங்கள் இவற்றை ஒன்றிணைந்தது என்று எண்ணுகிறீர்கள். இதை புரிந்து கொண்டு “எனது” என்பதைத் தனியே பிரித்து விடுங்கள். உங்களில் இருக்கும் "எனது” என்பதில் வரும் எல்லாவற்றையும்