________________
ஆகிய அனைத்துமே அவசியம் தான். இதில் எந்தத் தவறும் இல்லை . ஜபம், தபம் என எதிலுமே தவறில்லை, ஆனால் ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும், ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பிலும் உண்மை இருக்கிறது.
வினா : தவம், க்ரியை என்னும் வாயிலாக முக்தி கிடைக்குமா?
தாதாஸ்ரீ : தவம், க்ரியை வாயிலாக பலன் கிட்டுகிறது, முக்தி இல்லை. வேம்பை விதைத்தால், கசப்பான பலன்களே கிடைக்கும். மாமரக் கன்றை நட்டால், இனிப்பான பலன்கள் கிடைக்கிறது. உங்களுக்கு எந்த விதமான பலன்கள் தேவையோ, அதையொட்டிய விதைகளை நீங்கள் நடவேண்டும். மோக்ஷம் விரும்பத் தேவையான தவம் வேறுபட்டது, அது உள்ளார்ந்த தவம். வெளிப்புறத் தவங்களை தவம் என்ற புரிதல் இருக்கிறது. வெளியே புலப்படும் தவம், அந்தத் தவம் மோக்ஷமடைய உதவாது. ஆம், இவையனைத்தின் பலனாக புண்ணியம் கிடைக்கும், சந்தேகமில்லை. நீங்கள் மோக்ஷத்தை விரும்பினீர்கள் என்றால், அதற்கு உள்ளார்ந்த தவம், ஆழ்ந்த தவம் தேவை.
வினா ! மந்திரஜபத்தால் மோக்ஷம் கிடைக்குமா அல்லது ஞான மார்க்கத்தால் மோக்ஷம் கிடைக்குமா?
தாதாஸ்ரீ : மந்திரஜபம் உலகில் உங்களுக்கு அமைதியை ஏற்படுத்தித் தருகிறது. மனதிற்கு அமைதி அளிப்பது மந்திரம்,உலகியல் சுகங்கள் வாய்க்கப் பெறும் மோக்ஷம். ஞானமார்க்கத்தைப் பின்பற்றாமல் மோக்ஷம் கிடைக்காது. அஞ்ஞானம் பந்தத்தை ஏற்படுத்துகிறது. ஞானம் முக்தியளிக்கிறது. இந்த உலகில் கிடைக்கும் ஞானம் என்பது புலன்கள் தொடர்பான ஞானம். இது மாயை, புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம் தான் உண்மையான ஞானம்.
வி
யார் ஒருவர் தன்னைப் பற்றிய முழுமையான சொரூபத்தை உணர்ந்து கொண்டு மோக்ஷப் பாதையில் செல்கிறாரோ, அவருக்கு க்ரியைகள் தேவையில்லை. யாருக்கு உலகிய சுகங்கள் தேவைப்படுகிறதோ, அவருக்கு க்ரியைகள் தேவையாக இருக்கிறது. யார் மோக்ஷப் பாதையில் செல்ல முனைப்பாக இருக்கிறாரோ, அவருக்கு ஞானம், ஞானியின் ஆணை என்ற இரண்டு விஷயங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
“நான்” என்பதை ஞானி தான் அடையாளம் காட்டுவார். வினா : நீங்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று நீங்கள் கூறினீர்கள்; ஆனால் எங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள என்ன செய்ய வேண்டும்?
தாதாஸ்ரீ - நீங்கள் என்னிடம் வாருங்கள். எங்களை நாங்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று என்னிடத்தில் கூறுங்கள், அப்போது நான் உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டுகிறேன்.