________________
வினா : "நான் யார்” என்பதைத் தெரிந்து கொள்ளும் விஷயத்தில், இந்த உலகத்தில் இருந்து கொண்டே இது எப்படி சாத்தியமாகும்?
தாதாஸ்ரீ ! அப்படியென்றால் எங்கே இருந்து கொண்டு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். இந்த உலகைத் தவிர உங்களால் வேறு ஏதாவது இடத்தில் இருந்து கொண்டு இதைத் தெரிந்து கொள்ள முடியுமா? இந்த உலகில் வாழும் அனைவரும் சம்ஸாரிகள் தாம், நாமனைவரும் இந்த உலகில் தான் வசிக்கிறோம். இங்கே தான் "நான் யார்” என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். “நீங்கள் யார்”, என்பதைத் தெரிந்து கொள்வதற்கே இந்த விஞ்ஞானம். என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு அதை உணர்த்துகிறேன்.
ஆத்ம அனுபவத்துக்கான எளிய வழி யார் முக்தி அடைந்து இருக்கிறார்களோ, அவர்களிடத்தில் சென்று, ஐயா எனக்கும் முக்திக்கான வழியைக் காட்டுங்கள் என்று கேட்க வேண்டும். இது தான் இறுதியான சிறப்பான தீர்வு. "நான் யார்?” என்ற ஞானம் உறுதிப்பட்டு விட்டால், அவர்களுக்கு மோக்ஷத்துக்கான வழி கிடைக்கும். ஆத்மஞானி கிடைக்காவிட்டால், அதுவரை ஆத்மஞானியின் புத்தகங்களைப் படித்து வரவேண்டும்.
ஆத்மா அறிவியல் ரீதியான ஒன்று. இது புத்தகங்களின் மூலம் கிடைக்க கூடிய பொருள் இல்லை. அது தன்னுடைய குண இயல்புகளுடன் (ஜீவனுள்ள மூலபொருள்) இருக்கிறது, அதுவே பரமாத்மா. அதை நாம் அடையாளம் கண்டு கொண்டோம் என்று சொன்னால், விடியல் ஏற்பட்டு விட்டது. அது வேறுயாரும் இல்லை,"நீங்கள்” தான் என்பது தெளிவாகி விட்டது.
மோக்ஷ மார்க்கத்தில் தவம் - தியாகம் ஆகிய எதையும் செய்ய வேண்டி இருக்காது. ஞானி என்பவர் மட்டும் கிடைத்து விட்டால், ஞானியின் ஆணையே தர்மம், அவரது ஆணையே தவம், இதுவே ஞானம், தத்துவம், இயல்வு, தவம் ஆகும். இவையனைத்தின் நேரடிப்பலன் மோக்ஷம்.
"ஞானி” என்பவர் கிடைத்தால்தான் மோக்ஷ மார்க்கம் சுலபமாகவும், எளிமையாகவும் ஆகிவிடும். இது உப்புமா செய்வதைக் காட்டிலும் சுலபமாகிவிடும்.
5 "நான்” என்பதை ஞானியின் மூலமாக அடைய முடியும்
1. தேவை - குருவா, ஞானியா? வினா :தாதாஸ்ரீயை சந்திக்கும் முன்பாக வேறு ஒருவரை குருவாக ஏற்றி இருந்தால் அப்போது என்ன செய்ய வேண்டும்?