________________
இயலும். எனக்கு(தாதாஸ்ரீ) மோக்ஷம் கிடைத்து ஆகிவிட்டது இல்லையா! உலகில் நாம் வாழ்ந்தாலும், உலக பாதிப்புகள் ஏதுமின்றி இருக்க வேண்டும், இப்படிப்பட்ட மோக்ஷம் ஏற்பட வேண்டும். இப்படிப்பட்ட மோக்ஷத்தை அக்ரம் விஞ்ஞானத்தால் பெற முடியும். (படியில்லா ஆன்மீக விஞ்ஞானம், ஆத்ம அனுபவம் பெறுவதற்கு).
2 ஆத்ம ஞானத்தால் நிரந்தர ஆனந்தம் எல்லா ஜீவராசிகளும் எதைத் தேடுகிறது? சுகத்தை தேடுகிறான். ஆனால் கணநேரம் கூட சுகம் கிடைப்பதில்லை. திருமணத்திற்கு சென்றாலும், நாடகத்திற்கு சென்றாலும் மீண்டும் துக்கத்தின் நிழல் படியத் தொடங்கி விடுகிறது. சுகம் என்பது நிரந்தரமாக இருக்க வேண்டும். எந்த சுகத்திற்குப் பிறகு துக்கம் ஏற்படுகிறதோ, அதை நாம் எவ்வாறு சுகம் என்பது? அது மாயை ஏற்படுத்திய சுகம் என்பதாகும். அப்படிப்பட்ட சுகம் தற்காலிகமானது, கற்பானையானதாகும். ஒவ்வொரு ஆத்மாவும் எதைத் தேடுகிறது? எப்போதும் நிரந்தர சுகத்தையே தேடுகிறது. சுகம் 'இதில் கிடைக்கும், அதில் கிடைக்கும், அதை வாங்கவா, இப்படிச் செய்யவா, பங்களா கட்டினால் சுகம் கிடைக்குமா, வண்டி வாங்கினால் சுகம் கிடைக்குமா', என்று சிந்தித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதனால் எதுவும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, மேலும் மேலும் பிரச்சனைகளின் வலைப்பின்னலில் மனிதன் சிக்கிக் கொள்கிறான். சுகம், ஒவ்வொருவரின் உள்ளே இருக்கும் ஆத்மாவில் மட்டுமே இருக்கிறது. ஆகையால் ஆத்மாவை அடைந்தால் மட்டுமே நிரந்தரமான சுகத்தை அடையலாம்.
சுகமும் துக்கமும் உலகில் அனைவரும் இன்பத்தையே தேடுகிறார்கள். ஆனால் சுகத்தின் வரையறைகளை யாரும் நியமிப்பது இல்லை. எந்த சுகத்தை அனுபவித்த பிறகு, துக்கம் என்பதே ஏற்படாதோ, அது தான் முழுமையான சுகம். இப்படிப்பட்ட ஒரே ஒரு சுகம் இந்த உலகில் இருக்குமேயானால், அதைத் தேடிப் பாருங்கள்; நிரந்தரமான, அளவற்ற கணக்கில்லா சுகம் என்பது நமக்குள்ளே இருக்கும் ஆத்மாவில், தான் சுகம் இருக்கிறது. ஆனால் மனிதர்களோ அழிந்து போகக்கூடிய தற்காலிக பொருள்களில் சுகத்தை தேட கிளம்பி விட்டான்.
நிலையான சுகத்தைத் தேடல் யாருக்கு நிரந்தர சுகம் அடைந்தாகிவிட்டதோ, அவருக்கு பிறகு உலகத்தின் சுகதுக்கம் தொடவில்லையென்றால், அந்த ஆத்மாவுக்கு முக்தி கிடைத்து விட்டது. நிரந்தர சுகமே மோக்ஷம். வேறு மோக்ஷங்கள் பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு சுகம் தேவை. உங்களுக்கு சுகம் பிடிக்குமா, பிடிக்காதா? அதை கூறுங்கள் என்னிடம்.